Sunday, February 8, 2015

என்னை அறிந்தால்



“நாங்க 2 பேரு. அனுவுக்கு நான். எனக்கு அனு. We were made for each other. நிறைய ஊர் சுத்துவோம், படம் பார்ப்போம். ஒருநாள் எங்க வாழ்க்கைல குஷி வந்தா. It changed everything for the better. படத்துக்கு போறது குறைஞ்சுது. எங்க வாழ்க்கையே கவுதம் மேனன் படம் மாதிரி ஆச்சு. Then one day, என்னை அறிந்தால் வந்தது. For old times sake, we went to it”.

மேல் பத்தியை ஹஸ்க்கி வாய்ஸில் படித்துக்கொள்ளுங்கள். என்னை அறிந்தால் பற்றிய ரைட்டப்பை இப்படி ஆரம்பிப்பது தானே சரியாக இருக்கமுடியும்? Lets go with the flow.

நேரடியாக பாய்ண்ட்டுக்கு வருவதென்றால் என்னை அறிந்தால் மிகவும் தரமான அவுட்புட். ரொம்ப நாட்களுக்கு பிறகு மிகவும் ரசித்துப்பார்த்த படமாய் வந்திருக்கிறது.

அஜீத்தின் ஸ்பெஷாலிட்டி அவரின் grace. அதை அவர் ரசிகர்கள் மட்டுமல்ல, பொது ரசிகர்களும் ரசிக்கும்படி மிக அழகாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் மேனன். அஜீத்தை இவ்வளவு கிரேஸ்ஃபுல்லாக, கம்பீரமாய் காண்பிக்க இனிவரும் இயக்குநர்கள் திணறப்போகிறார்கள். The bar's been raised. 4 வெவ்வேறு முக அமைப்புகளில் வருகிறார். எல்லாமே பளிச். அவரின் சமீப வருடங்களின் அத்தனை பெர்ஃபார்மன்ஸையும் என்னை அறிந்தால் தூக்கிச்சாப்பிட்டு விடுகிறது. கவுதமு அஜீத்தை செதுக்கிறாப்போல, பாண்டியா !!

Having got Ajith out of the way, கவுதம் மேனனுக்கு வருவோம். ஒரு சேசிங்கிலோ, சண்டைக்காட்சியிலோ ஹீரோ ஒருவரை காப்பாற்றுவது பெரிய/புதிய விஷயமல்ல. அதற்கு முந்தைய, பிந்தைய சீன்களின் காத்திரம், உண்மைத்தரமே அந்த சண்டைக்கு ஒரு வீரியத்தை, அர்த்தத்தை கொடுக்கும். இதில், ஒரு நண்பனின் குழந்தையை காப்பாற்றி விட்டு, வசனமில்லா ஷாட்களில், அந்த நண்பன் அணைத்துக்கொள்ள, ஒரு கூச்சத்தில் அஜீத் அதை ஏற்றுக்கொள்ள..கவுதம் சொல்லி செய்தாரா, அஜீத் நடிப்பா..என்ன ரசவாதமோ? It's magical.

போலவே, அஜீத்துக்கும் அவர் மகளுக்குமான காட்சிகள். Subtle & underplayed. உண்மைக்கு மிக அருகில். அனுஷ்காவை வீட்டிற்கு கூட்டிவந்து, மெல்லிய பின்னணி இசையில் அப்பாவும் மகளுமாய் சப்பாத்தி தட்டும் மாண்டேஜ் காட்சிகள்..கவித கவித. போலவே, Ajith's proposal to Trisha. வே.வியின் “ஆ வெல், இனி நீயும் மாயாவும் என் சொத்து” பழைய வொயினின் இன்னொரு கிளாஸ் தான். இருந்தாலும் நல்ல aged red wine அலுக்குமா என்ன?

கவுதம் படங்கள் sophisticated, A செண்ட்டர்களுக்கானது, செயற்கையானது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒரு ‘தென்சென்னைத்தனம்’ உண்டு தான். ஆனால் அதுவும் ஒரு வாழ்க்கைமுறை தானே? கிட்டத்தட்ட நாம் அனைவருமே ஒரு உயர்தென்சென்னை வாழ்க்கைக்கு தானே நகர யத்தனிக்கிறோம்?

போலவே, காவல்துறையை இவ்வளவு அழகாய், ’அட போலீஸ் வேலை அவ்ளோ ஒன்னும் மோசமில்லப்பா’ என எண்ணுமளவுக்கு காண்பிக்க ஆரம்பித்தவர் அவரே. எல்லோரும் முத்துக்கருப்பன் டிஐஜி லெவலில் அதிகாரிகளை காட்ட, மீசையில்லாத Asra Garg டைப் அதிகாரிகளை காட்டுபவர் கவுதம். அஸ்ரா கர்க்-களும் உள்ளடக்கியது தானே காவல்துறை?

கவுதம் படங்களின் இன்னொரு பலம் டீடைலிங். எந்த தமிழ்ப்படத்திலும் எந்த ஆஸ்பத்திரி, ரூம் நம்பர், எந்த தெரு என சொல்லமாட்டார்கள். ஆனால் கேரக்டர்கள் கரெக்டாய் போய் சேர்ந்துவிடுவார்கள். கவுதம் இதற்கு நேரெதிர். மின்னலேயில் கூட விவேக் ரீமாசென் அட்ரசை கண்டுபிடிப்பதில் ஃபோன் ஏரியா கோட் வைத்து லாஜிக் வைத்திருப்பார். அஜீத் இதில் ‘ராயப்பேட்டை பீட்டர்ஸ் ரோட் ப்ரிட்ஜுக்கு வாங்க. ஆபோசிட்ல ராங்சைடுலயே வாங்க” என்றளவுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுக்கிறார். இது சினிமா பாஷையில் படம் சற்று lag ஆகும் தன்மையை கொடுக்கலாம். ஆனால் அதுதான் யதார்த்தம்.

எனக்கு படத்தில் விவேக்கும் நிரம்ப பிடித்தது. சொல்வது 6,7 பன்ச் தான் என்றாலும் (அதில் சால்ட்ன்பெப்பர் போன்றவை அவர் திணிப்பு), It all worked big time. அருண்விஜய் நடிப்பை தாண்டி ஒரு brilliant, shrewd choice. படத்தின் ஓட்டம்,சேசிங் காட்சிகளில் டெம்பொ ஏற்ற ஒரு அத்லெட்டிக் வில்லனுக்கான தேவையை சரியாக பூர்த்தி செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவு, இசை இரண்டுமே ப்ரில்லியண்ட். Harris is back. அந்த நண்பர் மகளை காப்பாற்றும் சீக்வன்ஸ் முழுவதுமே பின்னணி இசைக்கான பாடமாக வைக்கலாம். பாடல்கள் surprisingly ஸ்க்ரீனில் இன்னமுமே எடுபடுகிறது. ‘அதாரு உதாரு’ அந்த ஸ்மார்ட் போடா போடி டைரக்டர் விக்னேஷ் எழுதினதாமே (VIPயில தனுஷின் மெயின் இஞ்சினியராக கலக்கின தம்பி அவுருதான்).

மற்றபடி, It's not a perfect movie. No movie is. கவுதமே சொல்வதுபோல் அஜீத்தும், ரத்தினமும் திடீரென கூப்பிட்டு ஆர்டர் கொடுத்ததால் கதை ‘பண்ணப்பட்ட’ படமே. அவரின் மற்ற பட சாயல் உண்டு. அதனாலென்ன? யாருக்கு தான் சாயலில்லை? சரவணபவனுக்கு அதே சாம்பார் டேஸ்ட்டை எதிர்ப்பார்த்து தானே போகிறோம்?

என்னை பொருத்தவரை, ஒரு நல்ல ஜனரஞ்சக படமென்பது, When I come out of the movies, I must be totally charged & pumped up. மண்டே தைரியமா ஆபீஸ் போறாமாதிரி ஒரு ஃபீலிங்கை கொடுக்கனும். இந்த ஹீரோ மாதிரி ஒரு நாளாவது கெத்தா வாழனும்டா என எண்ண வைக்கனும்.

என்னை அறிந்தால் அதை சாதித்திருக்கிறது.

சாதித்த அஜீத் + கவுதம் மேனனுக்கு வாழ்த்துக்கள். You guys nailed it.

3 comments:

  1. பரம்பொருள்February 8, 2015 at 10:40 AM

    சித்தப்பு, ஆஸ்பெக்ட் பை ஆஸ்பெக்ட் அனாலிசிஸ் ப(பி)ன்னிட்டிங்க.. பேருக்கேத்த மாதிரி ரசனை தெரியிது .. அல்டி பன்ச் சரவணபவன் .. நல்ல முயற்சிக்கு கிடைத்த நல்ல பாராட்டு/விமர்சனம் .. தொடர்ந்து கலக்குங்க

    ReplyDelete
  2. நல்லது. போன வருடம் முழுக்க மூன்றே பதிவுகள். இப்போ அதுக்குள்ள நாலா..? தொடருங்கள்

    ReplyDelete

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)