பாகம் 1 (விஜயசாந்தி ஸ்பெஷல்): ( இங்கே)
தெலுங்கு டப்பிங் படங்களில் விஜயசாந்தியை சொல்லிவிட்டு டாக்டர் ராஜசேகரை பற்றி ’சொல்லாட்டி போனா’, இந்த பிளாகே கொந்தளிப்பாகி “லா அண்டு ஆர்டர்” கெட்டுப் போய்விடும்.
1989 டிசம்பரில் தான் ‘இது தாண்டா போலிஸ்” என்ற அதிசயம் நிகழ்ந்தது.
ஒரு unique டைட்டிலா, தூர்தர்ஷனில் 10 நிமிஷத்துக்கு ஒரு முறை வந்த ‘ஹேய்ய்ய்ய்ய், இதுதாண்டா ப்ப்ப்ப்ப்ப்ப்ப்போஓஓஓலிஸ்” விளம்பரமா, பொங்கல் ரிலீஸ் காத்திருப்பில் சினிமா வெறியர்களுக்கு இது ஸ்டாப்கேப் படமாக பட்டதா என தெரியவில்லை. மெல்லிசாய் சீறி, பின் பட்டையை கிளப்பும் 5000 வாலாவாக, சடசடவென தமிழ்சினிமாவில் ராஜசேகர் எரா துவங்கியது.
ராஜசேகர் யாரென சுருக்கமாக பார்த்துவிடுவோம். அடிப்படையில் தமிழர். சென்னைவாசி. டாக்டருக்கு படித்து அமிஞ்சிக்கரையில் ப்ராக்டிஸ் செய்தவர். பாரதிராஜாவின் புதுமைப்பெண்ணில் அறிமுகமாகி, தமிழர்கள் கைவிட, மனவாடுகளால் மனதார ஏற்றுக்கொள்ளப்பட்டவர். ஒரு களையான முகம் என்பதை தவிர எந்த பெரிய காந்தமும் இல்லைதான். ஆனால் ஒரு பொறி இருக்கும். அசமஞ்சத்தனம் இருக்காது. கோபத்தை அச்சு அசலாக பிரதிபலிப்பார். எம்ஜியார் போல் உதட்டு ரத்தம் வரும்வரைக்கும் எல்லாம் நோ வெய்ட்டிங். மான்புமிகுவோ, மாமூலான ரவுடியோ/போலீசோ, பொளேரன்று முதல் அடி இவருடையது தான்.
ராஜசேகர் ஆக்சன் ஹீரோவாகினும் பாடி பில்டரெல்லாம் கிடையாது. குறைந்தபட்ச ஆர்ம்ஸ் கூட கிடையாது. நெஞ்சை விடைத்து, கையை புடைத்து ஒரு பயில்வான் ஃபீல் கொண்டு வந்துவிடுவார். மூஞ்சை மூஞ்சூரு போல் முறுக்கி முறைத்து ஒரு அறச்சீற்றத்தையும் வெளிப்படுத்தி விடுவார். நடை கந்தன் கருணை சிவாஜி ரேஞ்சுக்கு, எலக்ட்ரிக் ட்ரைன் சுவர் நோட்டிசில் உள்ள வியாதிகள் வந்தது போல், காலை அகட்டி வீரமாக நடந்தால் தியேட்டரில் ரசிகன் புல்லரிப்பான்.
அவர் குரல்
இருக்கிறதே..அடடா..காந்தர்வ குரல். சாய்குமார் என்பவர் இதற்கென்றே பிறவி
எடுத்திருப்பார். தமிழை சுந்தரத்தெலுங்கில் பேசியிருப்பார். ராஜசேகரே டபுள் பேமெண்ட்டுக்கு ஓவராக்டியிருக்க, இவர் டப்பிங்கில் இன்னும் உணர்ச்சிவசப்படுவார். பின் சாய்குமாரே,
அடப்போங்கடா என ஹீரோவாக மாறினார். அந்தப்புரத்தில்
சௌந்தர்யா ஜோடியாக வருவாரே..அவரே தான்.
டப்பிங் படங்கள் genre என்ற வகையில் ராஜசேகர் ஒரு ட்ரெண்ட் செட்டர்.
ராஜசேகர் படங்கள் நாளன்னைக்கு புரட்சி வந்துவிடும் என்ற லெவலிலேயே இருக்கும்.அவர் படங்களின் படி, தொண்ணூறுகள் ஆரம்பத்தில் ஆந்திராவில் கொடூரமான அரசியல்/சமூக சூழல் நிலவியிருக்கவேண்டும். கிரேப்ஜூஸ் குடிப்பது போல ரேப்ஸ் நடந்திருக்கவேண்டும். “ஸ்பாட்டு வைப்பது, மர்டர் செய்வது” போன்ற கோர்ஸ்களை முடித்து, ஐடி கம்பெனி போல இளைஞர்கள் அடியாளாய் சேர்ந்திருக்க வேண்டும். எம்ஜியார் இறப்புக்கு பிறகு தமிழ் அரசியலும் சட்டசபை அடிதடி என சிலாக்கியமாக இல்லாதது வசதியாக போய்விட்டது. வெட்டி ஆபிசர்கள் காலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துவிட்டு, மதியம் ராஜசேகர் படம் பார்த்துவிட்டு, மாலை தலைவலியோடு வீட்டுக்கு வந்து, இரவு 4 “ஏய் அரசே” கவிதை எழுதுவான்கள் (எழுதியிருக்கிறேன் :)). சுருக்கமாக, ”எல்லாரும் ஃப்ராடுங்க சார்” என்ற யுனிவர்சல் கோபத்தை நன்கு முதலீட்டாக்கியது ராஜசேகர் படங்கள் எனக்கொள்ளலாம்.

ராஜசேகர் படங்களில் டெக்னிக்கலாக ரொம்ப மெனக்கெடல்கள் எல்லாம் கிடையாது. படம் அழுக்காக, எடிட்டிங்லாம் “இங்கே வெட்டிங், அங்கே ஒட்டிங்” லெவலிலே தான் இருக்கும். பாடல்கள் பொதுவாக நாராசம். ராஜாவை முறைத்துக்கொண்ட, ரஹ்மான் வராத காலக்கட்டத்தில் வைரமுத்து “என் கிரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்” லெவலில் தெலுங்கு வாயசைப்புக்கு பாடல் எழுதிருப்பார்.
கதைகள், கேரக்டர்கள் ஒரே டெம்ப்ளேட் தான். ராஜசேகர் போலீஸ்கார், ஆர்மிக்கார், நேவிக்கார் என ஏதோ ஒன்று. மூக்கின் மீது கோவம். பார்க்கிறவனையெல்லாம் 2 தட்டு. நல்ல/கெட்ட அரசியல்வாதி, மனைவி சாவு, பழிவாங்கல், ஜெய்ஹிந்த் என படம் ஒவர். அமைச்சர் தேசியக்கொடியை தலைகீழாக தொங்கவிட்டு போகிறாரா? காரை நிறுத்தி சட்டையப்பிடி. போலீஸ் ஸ்டேஷனில் மிரட்டலா? கண்ணை உருட்டி 2 அறை விடு. ப்ராப்ளம் சால்வ்ட்.
கேரக்டர்கள் எனப்பார்த்தால்
பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு சிலபல அரசியல்வாதிகள், மாவா மோவாயில்
வழிய ‘ஸ்பாட்டு’ வைக்கும் தாடி அடியாள், சகட்டுமேனிக்கு மெயின் வில்லனை
ஓட்டும் காமெடி வில்லன் (குறிப்பாய், இப்படத்திலிருப்பவரை ஒய்.ஜி.ம்ஹேந்திரா வாய்சில் கண்டிப்பாக
பார்த்திருப்பீர்கள்), வேவு பார்த்து சாவும் ஒரு ஜோல்னா ஜர்னலிஸ்ட், ”உங்க
கோவத்தை கண்ட்ரோல் பண்ணுங்க” என சொல்ல ஒரு காக்கி சூட் DIG, வில்லனால்
சாவதெற்கென்றே ஒரு மனைவி (முக்கால்வாசி ஜீவிதா), ஒரு செல்லமகள் அவ்வளவே.
ரொம்பக்காலத்துக்கு 2 சீன் வந்து செத்துபோற ஹீரோயின் தானே என தன் மனைவி
ஜீவிதாவை வைத்து ஒப்பேற்றினார். லெவல் கூடியபிறகு அமலா, மீனா என தன்னை
”அம்மாடி அம்மோவ்” என துரத்திக் காதலிக்க ஆள் சேர்த்துக்கொண்டார்.
இந்த இடத்தில் டப்பிங் படங்களில் அவர் கரியர் கிராஃபை பார்ப்போம்.
அடிப்படையில் இதுதாண்டா போலீஸ் ஒரு மொக்கை கதை. முதல் காட்சியிலிருந்தே ஒரு நல்ல முதல்வரை கவிழ்க்க நினைக்கும் நம்பர் 2. நம்பர் 2 என்றால் மலச்சிக்கல் இல்லை. மனச்சிக்கல் தரும் ஒரு ஹோம் மினிஸ்டர். சிஎம்மின் பழைய மாணவனான ’இன்ஸ்பெக்டர் விஜய்’ அவரை உயிரைக்கொடுத்து காத்து ‘அ டெடிகேசன் டு சின்சியர் போலீஸ் ஆபிசர்ஸ்’ என ஸ்லைடு போட்டு சுபம். அவ்வளவே அவ்வளவு தான் கதை. ஆனால் குத்துமதிப்பாய் போரடிக்காது போகும்.
எதுக்கோ தமிழில் பேயோட்டம் ஓடியது இப்படம். அங்குசம் என தெலுங்கில் ஹிட்டடித்து, ராஜசேகர் உட்பட பலருக்கு டப்பிங் பொறி தட்ட, உடனே பொட்டியை தூசு தட்ட, அது சொப்பனசுந்தரி காராய் பலருக்கு மாறி, கடைசியில் ராஜசேகரே டப் செய்து செம கல்லா கட்டினார். டிசம்பரில் வந்து பொங்கல் படங்களையெல்லாம் தாண்டி ஓடியது. பொங்கலும் நடுவுல இல்லைன்னா கோடில சம்பாதிச்சுருப்பேன் என ஒரு சமீப பேட்டியில் பெருமூச்சு விடுகிறார்.
இங்கு ஒரு செய்தி. நாம் அனைவரும் சிலாகிக்கிறோமே ரமணாவின் புள்ளிவிவர டயலாக். அது அச்சு அசலாய் “நூத்துக்கு 40 பேரு சாகிறாங்க” கடைசி லைன் உட்பட இதுதாண்டா போலீசில் முதல்வர் கேரக்டர் சொல்வது !
இ.தா.போ ஓடினாலும் ஓடியது..தேன்கூட்டை கலைத்தது போல், அவர் நடித்த அத்தனை திராபை படங்களும் அடுத்தடுத்து வர ஆரம்பித்தன. என்னவோ நேரடி தமிழ்ப்படம் வருவது போல விகடனில் இரண்டாவது படமான “மன்னிக்க வேண்டுகிறே”னுக்கு பெரிய கவரேஜ். பிறகு ‘நான் மந்திரியானால்’, ‘மீசைக்காரன்’, ‘ஆம்பளை’, ‘எவண்டா உங்க MLA” என லைன்கட்டி ஒன்றரை டஜன் ராஜசேகர் படங்கள் வந்தன.
என்ன மேட்டரென்றால், இதில் பல படங்கள் செம போங்கு. ஒன்று அவரது ஆரம்பக்கால ஓடாப்படங்கள். இல்லை, அரைவேக்காடுகள். அதிலும் குறிப்பாக மீசைக்காரன். ராஜசேகர் ஒரு குமுதம் இதழை “தயாரிக்க” அதில் கவர்ஸ்டோரி போட்டு பெப் ஏற்றப்பட்ட படம். ராஜசேகரும் தன் பட்ஜெட் லெவல் ஏறியதில் அந்நாள் நடிப்பு சூறாவளியான பேபி ஷாமிலியை தன் மகளாக 4 நாள் கால்சீட்டில் பிடித்துப்போட்டு எடுத்தார். ஒரு சேதி என்னவென்றால் போஷாக்கான சரத்குமார் ராஜசேகரிடம் பல்பு வாங்கும் ஒரு சிரிப்பு போலீசாக இப்படம் நெடுக வருவார்.
அடித்து பிடித்து படம் பார்க்க போன ரசிகன் பாதிப்படத்துக்கு ராஜசேகர் 'இல்லாட்டி போயி’ டரியலானான். ஒரு நல்ல அமைச்சர் “தேக்கோ தேக்கோ சாரே ஜஹான்சே அச்சா, ஆண்டவன் இயற்கை அன்னைய படைச்சா(ன்)” என்று பாடி(?), டூர் போய் கடத்தப்படுவதையே வைத்து பாதி படம் ஒப்பேற்றினார்கள்.
விஷயம் என்னவென்றால், ராஜசேகருக்கு செம ஆக்சிடண்ட் படத்தில். 75 வருட இந்திய சினிமா வரலாற்றில் இல்லாத வகையாக, திடீரென ஒரு சேசிங்கில் ஸ்க்ரீன் ஃப்ரீஸ் ஆகி ஜூம் ஆகும். “டாக்டர் ராஜசேகருக்கு ஆக்சிடெண்ட் ஆன நாள், இடம் இது தான்” என ஒரு ஹைதிராபாத் முட்டுச்சந்தை காட்டுவார்கள். அப்புறம், ஒன்னுமே நடக்காதது போல் படம் திரும்ப ஆரம்பிக்கும். என் கணிப்பில் எஸ்.ஏ.சிக்கு “இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்”க்கு இதுவே இன்ஸ்பிரேசனாக இருந்திருக்க வேண்டும். ஒரு சீனில் தலை நரைத்த கெட்டப், இன்னொன்றில் இளமையாய் என மீசையை தவிர மீசைக்காரனில் எந்த கண்டினியுடியும் இருக்காது. இவ்வளவு இருந்தும் மீசைக்காரன் திண்டிவனத்தில் 75 நாள் ஓடியது என கார்க்கி மூலம் அறிகிறோம்.
பின் பலப்படங்கள் பல்ப் வாங்க, கொஞ்சம் கேப் விட்டு ரிலீஸ் செய்த “எவனாயிருந்த எனக்கென்ன” அவருக்கு கடைசியாக ஒரளவுக்கு ஓடிய படமாக இருக்கவேண்டும். பின் மெய்க்காப்பாளன், போனவருடம் இதுதாண்டா போலீஸ் 2 (வந்ததாவது தெரியுமா உங்களுக்கு) என அதற்குப்பிறகு தமிழில் இன்று வரை வெற்றி கைக்கூடவில்லை.
இன்று ராஜசேகரின் சினிமா கரியர் அல்மோஸ்ட் ஒவர். ஆட்சியை காப்பாற்றுவதை விட்டுவிட்டு மீரா ஜாஸ்மினோடு ’மருதாணி’ என தங்கை சப்ஜெக்ட் எடுக்கிறார். அதையும் டப் செய்து பார்க்கிறார். தெலுங்கிலேயே தூக்குடுவை நேரடியாய் பார்க்கும் தமிழன், ராஜசேகர் படத்தை கண்டுக்கொள்வதில்லை. அரசியலில் முட்டிமோதுகிறார். கிட்டத்தட்ட எல்லா கட்சியிலும் இருந்துவிட்டார். இப்போது ஜெகன்மோகன் கட்சி என ஏஜன்சி செய்தி. சிரஞ்சீவியை ஏதோ சொல்லப்போய், இவர் சினிமாவில் குத்தும் ஊமைக்குத்தை இவருக்கே குத்திவிட்டார்கள் மெகாஸ்டாரின் ஃபேன்வாடுகள். சிரஞ்சீவி வீட்டுக்கே போயி நியாயம் கேட்டு, அவரும் நமுட்டு சிரிப்போடு தன் ரசிகர்களை அமைதிக்காக்க சொன்னார். இவர் போறாத காலம், நடிகை சோனா முதற்கொண்டு “கண்டமனூர்க்காரர் என்னை கண்டம் பண்ணிட்டார்” என புழுதி தூற்றுகிறார்கள். வயதாக ஆக, தன் மரியாதையை காப்பாற்றிக்கொள்ளும் விதத்தில் சற்று சறுக்கிவிட்டார் என்றே சொல்லலாம்.
எது எப்படியோ, ரைஸ்மில்லில், வெங்காயமண்டியில் வந்த பணத்தில் ராஜசேகரின் படத்தை டப் செய்து அவரால் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் என அந்தஸ்தும், லாபமும் அடைந்த பலரும் இன்றும் அவர்க்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கக்கூடும்.
அதைவிட முக்கியம், ராமாநாயுடு, NTR, நாகேஸ்வர ராவ், அல்லு அரவிந்த் என 3,4 குடும்பங்களின் பிடியில் பெண்ணெடுத்து, பெண் கொடுத்து, படம் எடுத்து, படம் கொடுத்து இன்று வரை உழலும் தெலுங்கு சினிமாவில், ஸ்டேட் விட்டு ஸ்டேட் சென்று தனியாளாய் ஜெயித்த தமிழன் என்ற வகையில் ராஜசேகருக்கு அவர் க்ளைமேக்சில் அடிக்கும் விறைப்பான சல்யூட் உரித்தாகட்டும்.
(அடுத்து ஸ்டைலிஷான ’உதயம்’ எரா படங்கள், அதுக்கு நேர் காண்ட்ராஸ்ட்டான அல்லுடு மஜாக்கா வகைகளை பார்ப்போம்)
முடிந்தால் ஒரு வரி பிடித்திருக்கா, இல்லையா என சொல்லுங்கள். Feedback is important for my கலைச்சேவை you know ;-)
தெலுங்கு டப்பிங் படங்களில் விஜயசாந்தியை சொல்லிவிட்டு டாக்டர் ராஜசேகரை பற்றி ’சொல்லாட்டி போனா’, இந்த பிளாகே கொந்தளிப்பாகி “லா அண்டு ஆர்டர்” கெட்டுப் போய்விடும்.
1989 டிசம்பரில் தான் ‘இது தாண்டா போலிஸ்” என்ற அதிசயம் நிகழ்ந்தது.
ஒரு unique டைட்டிலா, தூர்தர்ஷனில் 10 நிமிஷத்துக்கு ஒரு முறை வந்த ‘ஹேய்ய்ய்ய்ய், இதுதாண்டா ப்ப்ப்ப்ப்ப்ப்ப்போஓஓஓலிஸ்” விளம்பரமா, பொங்கல் ரிலீஸ் காத்திருப்பில் சினிமா வெறியர்களுக்கு இது ஸ்டாப்கேப் படமாக பட்டதா என தெரியவில்லை. மெல்லிசாய் சீறி, பின் பட்டையை கிளப்பும் 5000 வாலாவாக, சடசடவென தமிழ்சினிமாவில் ராஜசேகர் எரா துவங்கியது.
ராஜசேகர் யாரென சுருக்கமாக பார்த்துவிடுவோம். அடிப்படையில் தமிழர். சென்னைவாசி. டாக்டருக்கு படித்து அமிஞ்சிக்கரையில் ப்ராக்டிஸ் செய்தவர். பாரதிராஜாவின் புதுமைப்பெண்ணில் அறிமுகமாகி, தமிழர்கள் கைவிட, மனவாடுகளால் மனதார ஏற்றுக்கொள்ளப்பட்டவர். ஒரு களையான முகம் என்பதை தவிர எந்த பெரிய காந்தமும் இல்லைதான். ஆனால் ஒரு பொறி இருக்கும். அசமஞ்சத்தனம் இருக்காது. கோபத்தை அச்சு அசலாக பிரதிபலிப்பார். எம்ஜியார் போல் உதட்டு ரத்தம் வரும்வரைக்கும் எல்லாம் நோ வெய்ட்டிங். மான்புமிகுவோ, மாமூலான ரவுடியோ/போலீசோ, பொளேரன்று முதல் அடி இவருடையது தான்.
ராஜசேகர் ஆக்சன் ஹீரோவாகினும் பாடி பில்டரெல்லாம் கிடையாது. குறைந்தபட்ச ஆர்ம்ஸ் கூட கிடையாது. நெஞ்சை விடைத்து, கையை புடைத்து ஒரு பயில்வான் ஃபீல் கொண்டு வந்துவிடுவார். மூஞ்சை மூஞ்சூரு போல் முறுக்கி முறைத்து ஒரு அறச்சீற்றத்தையும் வெளிப்படுத்தி விடுவார். நடை கந்தன் கருணை சிவாஜி ரேஞ்சுக்கு, எலக்ட்ரிக் ட்ரைன் சுவர் நோட்டிசில் உள்ள வியாதிகள் வந்தது போல், காலை அகட்டி வீரமாக நடந்தால் தியேட்டரில் ரசிகன் புல்லரிப்பான்.

டப்பிங் படங்கள் genre என்ற வகையில் ராஜசேகர் ஒரு ட்ரெண்ட் செட்டர்.
ராஜசேகர் படங்கள் நாளன்னைக்கு புரட்சி வந்துவிடும் என்ற லெவலிலேயே இருக்கும்.அவர் படங்களின் படி, தொண்ணூறுகள் ஆரம்பத்தில் ஆந்திராவில் கொடூரமான அரசியல்/சமூக சூழல் நிலவியிருக்கவேண்டும். கிரேப்ஜூஸ் குடிப்பது போல ரேப்ஸ் நடந்திருக்கவேண்டும். “ஸ்பாட்டு வைப்பது, மர்டர் செய்வது” போன்ற கோர்ஸ்களை முடித்து, ஐடி கம்பெனி போல இளைஞர்கள் அடியாளாய் சேர்ந்திருக்க வேண்டும். எம்ஜியார் இறப்புக்கு பிறகு தமிழ் அரசியலும் சட்டசபை அடிதடி என சிலாக்கியமாக இல்லாதது வசதியாக போய்விட்டது. வெட்டி ஆபிசர்கள் காலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துவிட்டு, மதியம் ராஜசேகர் படம் பார்த்துவிட்டு, மாலை தலைவலியோடு வீட்டுக்கு வந்து, இரவு 4 “ஏய் அரசே” கவிதை எழுதுவான்கள் (எழுதியிருக்கிறேன் :)). சுருக்கமாக, ”எல்லாரும் ஃப்ராடுங்க சார்” என்ற யுனிவர்சல் கோபத்தை நன்கு முதலீட்டாக்கியது ராஜசேகர் படங்கள் எனக்கொள்ளலாம்.

ராஜசேகர் படங்களில் டெக்னிக்கலாக ரொம்ப மெனக்கெடல்கள் எல்லாம் கிடையாது. படம் அழுக்காக, எடிட்டிங்லாம் “இங்கே வெட்டிங், அங்கே ஒட்டிங்” லெவலிலே தான் இருக்கும். பாடல்கள் பொதுவாக நாராசம். ராஜாவை முறைத்துக்கொண்ட, ரஹ்மான் வராத காலக்கட்டத்தில் வைரமுத்து “என் கிரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்” லெவலில் தெலுங்கு வாயசைப்புக்கு பாடல் எழுதிருப்பார்.
கதைகள், கேரக்டர்கள் ஒரே டெம்ப்ளேட் தான். ராஜசேகர் போலீஸ்கார், ஆர்மிக்கார், நேவிக்கார் என ஏதோ ஒன்று. மூக்கின் மீது கோவம். பார்க்கிறவனையெல்லாம் 2 தட்டு. நல்ல/கெட்ட அரசியல்வாதி, மனைவி சாவு, பழிவாங்கல், ஜெய்ஹிந்த் என படம் ஒவர். அமைச்சர் தேசியக்கொடியை தலைகீழாக தொங்கவிட்டு போகிறாரா? காரை நிறுத்தி சட்டையப்பிடி. போலீஸ் ஸ்டேஷனில் மிரட்டலா? கண்ணை உருட்டி 2 அறை விடு. ப்ராப்ளம் சால்வ்ட்.

இந்த இடத்தில் டப்பிங் படங்களில் அவர் கரியர் கிராஃபை பார்ப்போம்.
அடிப்படையில் இதுதாண்டா போலீஸ் ஒரு மொக்கை கதை. முதல் காட்சியிலிருந்தே ஒரு நல்ல முதல்வரை கவிழ்க்க நினைக்கும் நம்பர் 2. நம்பர் 2 என்றால் மலச்சிக்கல் இல்லை. மனச்சிக்கல் தரும் ஒரு ஹோம் மினிஸ்டர். சிஎம்மின் பழைய மாணவனான ’இன்ஸ்பெக்டர் விஜய்’ அவரை உயிரைக்கொடுத்து காத்து ‘அ டெடிகேசன் டு சின்சியர் போலீஸ் ஆபிசர்ஸ்’ என ஸ்லைடு போட்டு சுபம். அவ்வளவே அவ்வளவு தான் கதை. ஆனால் குத்துமதிப்பாய் போரடிக்காது போகும்.
எதுக்கோ தமிழில் பேயோட்டம் ஓடியது இப்படம். அங்குசம் என தெலுங்கில் ஹிட்டடித்து, ராஜசேகர் உட்பட பலருக்கு டப்பிங் பொறி தட்ட, உடனே பொட்டியை தூசு தட்ட, அது சொப்பனசுந்தரி காராய் பலருக்கு மாறி, கடைசியில் ராஜசேகரே டப் செய்து செம கல்லா கட்டினார். டிசம்பரில் வந்து பொங்கல் படங்களையெல்லாம் தாண்டி ஓடியது. பொங்கலும் நடுவுல இல்லைன்னா கோடில சம்பாதிச்சுருப்பேன் என ஒரு சமீப பேட்டியில் பெருமூச்சு விடுகிறார்.
இங்கு ஒரு செய்தி. நாம் அனைவரும் சிலாகிக்கிறோமே ரமணாவின் புள்ளிவிவர டயலாக். அது அச்சு அசலாய் “நூத்துக்கு 40 பேரு சாகிறாங்க” கடைசி லைன் உட்பட இதுதாண்டா போலீசில் முதல்வர் கேரக்டர் சொல்வது !
இ.தா.போ ஓடினாலும் ஓடியது..தேன்கூட்டை கலைத்தது போல், அவர் நடித்த அத்தனை திராபை படங்களும் அடுத்தடுத்து வர ஆரம்பித்தன. என்னவோ நேரடி தமிழ்ப்படம் வருவது போல விகடனில் இரண்டாவது படமான “மன்னிக்க வேண்டுகிறே”னுக்கு பெரிய கவரேஜ். பிறகு ‘நான் மந்திரியானால்’, ‘மீசைக்காரன்’, ‘ஆம்பளை’, ‘எவண்டா உங்க MLA” என லைன்கட்டி ஒன்றரை டஜன் ராஜசேகர் படங்கள் வந்தன.
என்ன மேட்டரென்றால், இதில் பல படங்கள் செம போங்கு. ஒன்று அவரது ஆரம்பக்கால ஓடாப்படங்கள். இல்லை, அரைவேக்காடுகள். அதிலும் குறிப்பாக மீசைக்காரன். ராஜசேகர் ஒரு குமுதம் இதழை “தயாரிக்க” அதில் கவர்ஸ்டோரி போட்டு பெப் ஏற்றப்பட்ட படம். ராஜசேகரும் தன் பட்ஜெட் லெவல் ஏறியதில் அந்நாள் நடிப்பு சூறாவளியான பேபி ஷாமிலியை தன் மகளாக 4 நாள் கால்சீட்டில் பிடித்துப்போட்டு எடுத்தார். ஒரு சேதி என்னவென்றால் போஷாக்கான சரத்குமார் ராஜசேகரிடம் பல்பு வாங்கும் ஒரு சிரிப்பு போலீசாக இப்படம் நெடுக வருவார்.
அடித்து பிடித்து படம் பார்க்க போன ரசிகன் பாதிப்படத்துக்கு ராஜசேகர் 'இல்லாட்டி போயி’ டரியலானான். ஒரு நல்ல அமைச்சர் “தேக்கோ தேக்கோ சாரே ஜஹான்சே அச்சா, ஆண்டவன் இயற்கை அன்னைய படைச்சா(ன்)” என்று பாடி(?), டூர் போய் கடத்தப்படுவதையே வைத்து பாதி படம் ஒப்பேற்றினார்கள்.
பின் பலப்படங்கள் பல்ப் வாங்க, கொஞ்சம் கேப் விட்டு ரிலீஸ் செய்த “எவனாயிருந்த எனக்கென்ன” அவருக்கு கடைசியாக ஒரளவுக்கு ஓடிய படமாக இருக்கவேண்டும். பின் மெய்க்காப்பாளன், போனவருடம் இதுதாண்டா போலீஸ் 2 (வந்ததாவது தெரியுமா உங்களுக்கு) என அதற்குப்பிறகு தமிழில் இன்று வரை வெற்றி கைக்கூடவில்லை.

எது எப்படியோ, ரைஸ்மில்லில், வெங்காயமண்டியில் வந்த பணத்தில் ராஜசேகரின் படத்தை டப் செய்து அவரால் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் என அந்தஸ்தும், லாபமும் அடைந்த பலரும் இன்றும் அவர்க்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கக்கூடும்.
அதைவிட முக்கியம், ராமாநாயுடு, NTR, நாகேஸ்வர ராவ், அல்லு அரவிந்த் என 3,4 குடும்பங்களின் பிடியில் பெண்ணெடுத்து, பெண் கொடுத்து, படம் எடுத்து, படம் கொடுத்து இன்று வரை உழலும் தெலுங்கு சினிமாவில், ஸ்டேட் விட்டு ஸ்டேட் சென்று தனியாளாய் ஜெயித்த தமிழன் என்ற வகையில் ராஜசேகருக்கு அவர் க்ளைமேக்சில் அடிக்கும் விறைப்பான சல்யூட் உரித்தாகட்டும்.
(அடுத்து ஸ்டைலிஷான ’உதயம்’ எரா படங்கள், அதுக்கு நேர் காண்ட்ராஸ்ட்டான அல்லுடு மஜாக்கா வகைகளை பார்ப்போம்)
முடிந்தால் ஒரு வரி பிடித்திருக்கா, இல்லையா என சொல்லுங்கள். Feedback is important for my கலைச்சேவை you know ;-)
This comment has been removed by the author.
ReplyDeleteவலைப்பூவோட தலைப்பில் தொடங்கி கடைசிவரை ஒரேவேகத்தில அருமையா போகுது ... ultimate கலாய் :) தொடருங்கள்...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி அன்பு..:)
Deleteபிடித்ததே!
ReplyDeleteஅட அட ராஜனாரின் முதல் கமெண்ட்..:)
Deleteராஜசேகர் படம் போல அவ்வளவு விறுவிறுப்பு உங்க இடுகை.
ReplyDelete//எம்ஜியார் போல் உதட்டு ரத்தம் வரும்வரைக்கும் எல்லாம் நோ வெய்ட்டிங். // இது டாப்பு
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
வாழ்த்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்..ஸ்ரீஹிதா நலம்தானே :)
Deleteசினிமா பற்றி பி ஹெச் டி செய்பவர்கள் உங்கள் தளத்தை புக் மார்க்-கிக் கொள்ளலாம் போலிருக்கிறதே!!
ReplyDeleteமீசைக்காரன் படத்தை முதல் நாளே திருப்பூரில இருக்கும் ஒரு திரையரங்கத்துல போய் பார்த்தது எல்லாம் உண்டு பாஸ். :)
Deleteநன்றி பரிசல் சார்..நினைவுல இருக்குற தகவல தட்டி முட்டி போட்டுருக்கேன் :)
Deleteஇளா..நான் ராஜசேகர் படம் முதல் நாள்ளாம் பார்த்ததில்ல..பாரத்பந்த் பார்த்துருக்கேன் :)
DeleteWriting Style Superb Boss. High expectations on u
ReplyDeleteThanks Anony :)
Deleteஅம்மாடி அம்மாயோவ்... :-) சூப்பர் பாஸூ
ReplyDeleteசினிமாவ பத்தி பிரிச்சு மேயுறீங்க! "எதுக்கோ தமிழில் பேயோட்டம் ஓடியது" இன்னமும் தமிழ்ல ஒரு சில படம் இப்படி தான் ஓடிகொண்டிருக்கிறது! :)
Deleteநன்றி யாத்ரீகன்..:)
Deleteதிருட்டுக்குமரா..நன்றி நன்றி :) என்னய்யா மர்மமா வர்றீரு..:)
Deleteஅருமை.
ReplyDelete/இன்று வரை உழலும் தெலுங்கு சினிமாவில், ஸ்டேட் விட்டு ஸ்டேட் சென்று தனியாளாய் ஜெயித்த தமிழன் என்ற வகையில் ராஜசேகருக்கு அவர் க்ளைமேக்சில் அடிக்கும் விறைப்பான சல்யூட் உரித்தாகட்டும்./
இது உண்மை, கன்னடத்தில் ரவிச்சந்திரன் மாறி, கேரளாவில் ஜெயராம் மாறி
ஆமா, எனக்கு எப்படி ராஜசேகர் இவ்வளவு நல்லா தெலுங்கு பேசுறாருன்னு டவுட் :)
Deleteஅவர் பெரியகுளம் அருகேயுள்ள லட்சுமிபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். அங்கு கம்மவார் நாயுடு இன மக்கள் முன்பு அதிகம் (இப்போதும்).
Deleteஅங்கே பெட்டிக்கடைகள் டீக்கடைகள் எல்லாம் சுந்தரத் தெலுங்குதான் ஒலித்துக் கொண்டிருக்கும். அதுதான் காரணம்
கலக்கலாக எழுதுறீங்க. ஒவ்வொரு தகவல்களும் அருமை!
ReplyDeleteமிக்க நன்றி தருமி :)
Deleteபதிவு செம. (செம=அருமை!).
ReplyDeleteஏகப்பட்ட தகவல்களுடன் கூடிய ஒரு சரவெடி.
பரிசல் சொன்னதுக்கு ஒரு லைக்.
ChPaiyan
மிக்க நன்றி சத்யா அவர்களே :)
Deleteநீங்க ராஜசேகருக்கே இந்த லிங்கை அனுப்பணம். He will be so happy to read this blog post. ஒருவர் தன்னை பற்றி இவ்வளவு தூரம் நினைவில் வைத்துக் கொண்டு எழுதியுள்ளார் என்றால் சும்மாவா? :-) இவர் மனைவி ஜீவா இவருக்கு பெரிய asset!
ReplyDeleteamas32
அய்யோ, நிறைய கிண்டல் பண்ணிருக்கேனே..டென்சன் ஆயிடமாட்டார் :)
DeleteAm liking the series :)
ReplyDeleteThanks a lot Gokul :) First time visit, i guess :)
Deleteu write really well oors...i dont know this actor...i cant believe his movies came in tamil but i am a sai kumar fan and i luv his tamil..u shld consider writing professionally :D u r WAY better than alot of bloggers :D Also, your topic of discussions are one of a kind :D keep it up :)
ReplyDeleteWow..Those were real nice words..U r making me shy Oors :)
DeleteAnd yeah, I can see Saikumar's tone can be addictive ;)
சூப்பர்ங்க நான் ரெண்டாவது படிக்கும் பொது மீசைக்காரன் பத்தாதா ஞாபகம் ..... இதுதாண்டா ராஜசேகர்
ReplyDeleteவருகைக்கு நன்றி இந்திரன். நான் எத்தனாப்பு படிக்கறச்சே மீசைக்காரன் பார்த்தேன்னு சொல்லமாத்தேன் ;)
Deleteகலை நூடுல்ஸ்....ச்சே....கலைச்சேவை தொடரட்டும் உபிச :)
ReplyDeleteஉபிச..புளிச்சேவை, தேங்காச்சேவைன்னு போட்டு புழிஞ்சிடமாட்டேன் :D
Deleteஒவ்வொரு வரியிலும் கலாய்ப்பு. அல்லது தகவல்.. செமயா யோவ்..
ReplyDeleteமீசைக்காரன் பேர பார்த்துட்டு எம்.ஆர்.எஸ் தியேட்டர் மேட்டர டைப் பண்ணிட்டு பார்க்கிறேன், என் பேரும் வந்த்டூச்சு,, ஒரு டேட்டா மிஸ் பண்ணல.. எப்படி? பலநாள் எழுதினீங்களா? நாங்களாம் அப்பவே சமைச்சு அப்பவே போஸ்டிங் :))
உதயம் எராவோட மூட்டை கட்டிட்டு அடுத்த டாபின் வாங்க.. நீங்க கலக்க வேண்டிய தலைப்பு எவ்வ்ளவோ இருக்கு
மிக்க நன்றி கார்க்கி :)
Deleteஒரு நைட்டு எழுதினேன். ஒரு பகல் டிங்கரிங்..ஆனா, கொஞ்சம் தினறினேன்..ராஜசேகர் பற்றி பொதுவான அப்சர்வேஷன், அவர் படங்கள் கிராஃப் ரெண்டையும் இணைக்க தடவினேன் :)
உண்மைல தலைப்புகள் தான் எனக்கு கம்மி..எதிலயும் ஒரு ஆழமான நாலெட்ஜ் இல்ல :( கவித/கவிதால்லாம் நான் கூப்ட்டாலும் வராது ;)
அருமையான பதிவு. அப்படியே 90க்குள் போன மாதிரி இருந்தது.
ReplyDeleteமிக்க நன்றி முரளி. சினிமா பதிவுகளின் ஜாம்பவான் நீங்க சொல்லி கேக்குறது என்கரேஜிங் :)
Deleteஇதுதாண்டா ப்ப்ப்ப்ப்ப்ப்ப்போஓஓஓலிஸ் - இத நாலஞ்சு முறை சொல்லி பாத்து சிரிச்சாச்சு..
ReplyDelete//எம்ஜியார் போல் உதட்டு ரத்தம் வரும்வரைக்கும் எல்லாம் நோ வெய்ட்டிங்//
//“ஸ்பாட்டு வைப்பது, மர்டர் செய்வது” போன்ற கோர்ஸ்களை முடித்து// விவிசி
Definitely an interesting read.
@dhivyadn
நன்றி திவ்யா..//Definitely an interesting read.// இதுக்கு தான் ரெம்ப முக்க வேண்டியதா போச்சு :)
DeleteJust thought to read first few lines before going for breakfast.... but I read fully & very nice writing style....keep it up.
ReplyDeleteநன்றி நன்றி..முடிந்தால் பேரை சொல்லுங்களேன் :)
Deleteமீசைக்காரன் மலயாள மூணாம் முற யின் ரீமேக்.
ReplyDeleteஓ, இது செய்தி எனக்கு..
Deleteசெம்ம கலாய். தொய்வில்லாமல், முழுக்க ஒரே கல்ப்பில் படித்தேன். மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteநன்றி போக்கிரி :)
DeleteNice post.
ReplyDeleteThanks :)
Deleteசூப்பரப்பு!
ReplyDeleteமிக்க நன்றி அதிஷா :)
Deleteபடம் க்ளிக் செய்து பார்த்தேன்..உங்க ஜூனியரா? அழகி :)
Deleteஐ திங்க் இட் இஸ் நாட் எவண்டா உங்க MLA .. இட் இஸ் எங்கடா உங்க MLA . ஐயாம் சீயிங் இட் லாட் ஆப் டைம் இன் விஜய் தொலைக்காட்சி
ReplyDeleteஓ அப்படியா, மாத்திர்றேன் :)
Deleteகுட் அனாலிசிஸ் by the way
ReplyDeleteதேங்க்யு :)
Deleteடூ குட்..... செம கலக்கல் சாஆஆஆஆஆர்ர்ர்ர்ர்
ReplyDeleteமிக்க நன்றி சார் :)
Deleteரொம்ப நன்றிங்க நான் பொறக்குறதுக்கு முன்னாடி வந்த படங்கள் பற்றிலாம் தெரிஞ்சிக்க வாய்ப்பு கொடுத்ததுக்கு :))))))))))))ஹிஹிஹி
ReplyDeleteநன்றி சோனியா..இ.ஆ.போ-ல வில்லனின் கைத்தடிகள் கிர்ர், புர்ர்ன்னு நினைக்கிறேன் :P
DeleteWell written! Do write more:)
ReplyDeleteThanks, Will try to :)
Deleteஅண்ணே! படிச்சு ரெண்டு நாளாச்சு. ஆனா கருத்த பதியாம போயிட்டேன். அசத்தல் பதிவு. இதுதாண்டா போலிஸ் படத்த பார்த்த என் அம்மா அந்த படம் TV-ல ஒளிபரப்பாகும் நேரங்களில் எல்லாம் அதன் நினைவுகளை மெல்ல கொசுவர்த்தி சுத்துவார். இப்பதிவை படிக்கும்போது என் அம்மா சுற்றிய கொசுவர்த்தி என் கண்முன்னே சுற்றுகிறது. :-)))
ReplyDeleteசூப்பர்..நினைவுகளை கிளறத்தானே எழுதறது..:)
Deleteஆமா! நீங்க ஃபிலிம் நியூஸ் ஆனந்தனோட ஃபேக் ஐடியா பாஸ்? தொடர்ந்து எழுதுங்க சித்தப்பு! :)
ReplyDeleteநன்றி நட்டு :) இந்த சித்தப்பூவ விடமாட்ட போலருக்கே ;)
Deletekalakkals da.....
ReplyDeletepost konjam neelam, mathapadi sooper..
Dei kspoi..Thx da..unakkellam epdida therinjuthu :)
Deleteits really interesting..thanks
ReplyDeleteThank you Jeyashree..May I know how you came to my blog?
Deleteஅண்ணாச்சி பின்னி பெடல் எடுத்துட்ட :-) தூள்.
ReplyDeleteதேங்க்யு தேங்க்யு டீப்ஸ் :)
Deleteசொன்னா கோச்சுக்காதீங்க :) நான் இன்னும் இதுதாண்டா போலீஸ் பாக்கல. வீட்டுல அந்த மாதிரி படத்துக்கெல்லாம் கூட்டீட்டுப் போக மாட்டாங்க. ஆனா இதுதாண்டா போலீஸ் போகனும்னு வீட்டுல கேட்டது நினைவிருக்கு. ஆனா மறுக்கப்பட்டது. :)
ReplyDeleteபுதுமைப் பெண் படத்தை டீவியில் பாத்தப்போதான் அது டாக்டர் ராஜசேகர்னு தெரிஞ்சது. சொல்லப்போனா அதுல நல்லாவே இருந்தாரு. அவருக்கு ஏன் வாய்ப்புகள் வரலைன்னு தெரியலை.
இவர் ஒரு டாக்டர். அந்தத் தொழிலை விட்டுட்டு தமிழ்நாட்டையும் விட்டுட்டு தெலுங்குதேசம் போயிட்டாரு. அதுனால என்ன.. எல்லாரும் நல்லாருந்தா சரிதான்.
இவருடைய தம்பிதான் நடிகர் செல்வா. முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் மகளைத் திருமணம் செஞ்சுக்கிட்டாரு.
இவருடைய சித்தப்பா கோயில்பட்டியில் கேண்டீன் நடத்துவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தகவலின் நம்பகத்தன்மை தெரியவில்லை.
ரஜினிகாந்த் தமிழ்நாட்டுக்கு வந்து நடிக்கும் போது டாக்டர் ராஜசேகர் ஆந்திராவுக்குப் போய் நடிக்கலாம். தப்பேயில்ல.
எனக்கென்னா கோவம் ;) நான்லாம் எட்டாப்புக்கு அப்புறம் தனியா போக ஆரம்பிச்சுட்டேன் 2 ருவா டிக்கட்ல ;) ஆமா, புதுமைப்பெண்ல ஸ்மார்ட்டா இருப்பார்..தம்பி செல்வா பேரை ஒரு படம் விடாம ப்ரொட்யுசர் லிஸ்ட்ல போடுவார்..
Deletetelugu dubbing padangal oru ragam endral, andha padangalil varum oru sila melody padalgal veru oru ragam. Niruthi, aluthi, vikki, oru mathiri ketka nalla thaan irukkum [Shiranjeevi, balayya,nag ivangellam roja, meena, Ramya krishnan, nagma,manisha koirala kooda potta dance enna, song enna].
ReplyDeleteExactly..Chiranjeevi, Balakrishna movies r a diffferent freaky league of its own ;)
DeleteChiranjeevi romba nalliku oru bankable star'aaga thaan valam vandhar [atleast till 1994/95]. Avarudaiya Manbumigu mesthiri padam kooda gyabagum varugiradhu.
DeleteAana Balakrishna tamilil eppodhum edupadave illai. May be avar iduppukku etha dance stepso, ovvadha panto..edhuvendru seri solla mudiyala. tamil rasigargal konjum koochapattu odhungiye irundhanar [naan utpada] balayavidam irndhu.
ஆமா, பாலகிருஷ்ணா எடுபடலை..அவருக்கு அப்படியொன்னும் ஒரு ஷார்ப் லுக்கு கிடையாது. நானும் மான்புமிகு மேஸ்திரி தியேட்டர்லயே பார்த்துருக்கேன்..:)
DeleteLook mattum illenga. neriya vishayam missing. avaru inniku varaikum oru kalla petti gandhama eppadi irukuraru nu puriyala..
DeleteAana onnu mattum guarantee, avaru iduppu kulunga oru dance pottaruna.. naama varayu kulunga (kulura )sirichittu varalam.
Innum oru vishayam gavanichi irukengala...mukkal vaasi Andhra heroes superaa dance aaduvanga.. Inniku kooda Chiranjeevi veena vasicharunaa namma Vijay Simbu ellam kitta vara mudiyadhu.
Exactly..Chiranjeevi was a superb dancer..Before Prabhu Deva, he was the dance icon..
DeleteAduthu etha pathi elutha porenga?. unga karthina kadhai romba yadharthama irundhadhu.
Deleteநன்றி கார்த்திக். உண்மைல பிளாங்கா இருக்கு :)
Deleteட்விட்டரில் ஷரண் அவர்களின் கமெண்ட்..
ReplyDeleteராஜாசரணம் @Sharankay
பாருய்யா இவனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு http://kushionline.blogspot.ca/2012/05/blog-post.html முன்னமே சொல்றதில்லையா...மிகவும் ரசித்தேன் :-) வாழ்த்து(க்)கள் @NattAnu
ட்விட்டரில் வேதாளம் அர்ஜுனின் கமெண்ட்..
ReplyDeleteஅர்ஜுன் @vedhalam
செம கலாய். இந்தத்தலைமுறை எவ்ளவோ மிஸ் பண்றோம்.. http://kushionline.blogspot.ca/2012/06/2.html via @NattAnu
ட்விட்டரில் நம் தோஸ்து மினிமீன்சின் கமெண்ட்..
ReplyDeleteமினிமீன்ஸ் @minimeens
http://kushionline.blogspot.ca/2012/06/2.html?m=1 எவன் ப்ளாக் போட்டா எனக்கென்ன.? #கண்டிப்பா படிங்க By @NattAnu
ட்விட்டரில் அண்ணன் கானாபிரபாவின் கமெண்ட்..
ReplyDeletekanapraba @kanapraba
@NattAnu இதுதாண்டா போஸ்டு #படிச்சாச்சு கலக்கல்ஸ் எனக்கு வர்ர ஜிவ்வில் ராஜசேகர் மாதிரி யாராவது கன்னத்தில் விளாசத் துடிக்குது @mayilSK
ட்விட்டரில் அண்ணன் கானபிரபாவின் கமெண்ட்..
ReplyDeletekanapraba @kanapraba
@NattAnu இதுதாண்டா போஸ்டு #படிச்சாச்சு கலக்கல்ஸ் எனக்கு வர்ர ஜிவ்வில் ராஜசேகர் மாதிரி யாராவது கன்னத்தில் விளாசத் துடிக்குது @mayilSK
ட்விட்டரில் தம்பி குணாவின் கமெண்ட்..
ReplyDeleteநான்-G @g4gunaa
ஹாட்ரிக்-ஹிட்.. RT @NattAnu தொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல்
அண்ணன் ஒருபக்கம் ஸ்ரீதர் மற்றும் சதீஷின் கமெண்டுகள்..இருவருக்கும் நன்றி..
ReplyDeletesrinivasan @sathishvasan
RT 100++ @orupakkam @NattAnu நாங்க சொல்லனும் நன்றி. அருமையா எழுதியிருக்கீங்க :-)
எதுக்கோ தமிழில் பேயோட்டம் ஓடியது இப்படம். :-))))) @NattAnu http://kushionline.blogspot.ca/2012/06/2.html கலக்கல் !!
மீண்டும் ஒரு கலக்கல் பதிவு. உங்கள் நினைவுத்திறன் வியக்கவைக்கிறது. குமுதம் இதழை ராஜசேகர் தயாரித்தையெல்லாம் நினைவில் வைத்து எழுதுவது சான்ஸே இல்ல.
ReplyDelete// ராஜாவை முறைத்துக்கொண்ட, ரஹ்மான் வராத காலக்கட்டத்தில் வைரமுத்து “என் கிரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்” லெவலில் தெலுங்கு வாயசைப்புக்கு பாடல் எழுதிருப்பார். // விவிசி
அடுத்த அதிரடிக்கு வெயிட்டிங்
நன்றி திரு..எப்படியோ ஞாபகம் வந்துச்சு அந்த குமுதம் மேட்டர் :)
Delete// எலக்ட்ரிக் ட்ரைன் சுவர் நோட்டிசில் உள்ள வியாதிகள் வந்தது போல், காலை அகட்டி வீரமாக நடந்தால் தியேட்டரில் ரசிகன் புல்லரிப்பான்.//
ReplyDeleteu know who dubbed for Rajsekhar and his past n present status.. what an analysis.. )
That's a very popular voice..He talks for almost all telugu heroes..U ud know him..
Deleteromba late comment:) eppavo padikka ninaichathu, ippothan padikkiraen. nalla suvarasiyamaka irukku..:)
ReplyDelete'meesaik kaaran' padam, malaiyaaLaththil 'mooNaammura'- enRa peyaril mohanlal nadippil hit aanathu ena njapakam...
கரெக்ட் பரணி/வை ;)
ReplyDeleteSuper sir, nice and interesting jounar. In the next episode, pls dont miss chiru's and other folks dubbing like Mesthiri and some more things, i forgot...those days as u said, we used to go and have fun :)
ReplyDeleteToo Good!! Please keep writing!
ReplyDeleteக்ளாசிக்
ReplyDelete