ஆச்சு. இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா?). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய டப்பா மாறுகிறது. குறுந்தொப்பை நிரந்தரம். Midlife crisisக்கான அறிகுறிகள் லேசுபாசாய் தென்படுகிறது.
இது ஒரு taking stock of life பதிவு. இந்த 35 வயதில் நான் கற்றதும்,பெற்றதும் என்ன?
கரியர்,வேலை என லௌகீக விஷயங்களில் ஒரு தெளிவு வந்த்திருக்கிறது. நான் 'சுந்தர் பிச்சை' மெட்டிரியல் இல்லை என உணர்கிறேன். ”எங்கப்பா என்னை படிப்புக்கப்புறம் வேலைக்கு போக சொன்னாரு, PhDயா படிக்கவெச்சாரு?” என சப்பைக்கட்டு கட்டுகிறது மனசு, IIT நுழைவுத்தேர்வில் பரம கோட்டு அடித்ததை மறந்துவிட்டு. ஆனால், பொதுவாய் கூடப்படித்தவர்களின் linkedin பக்கங்களை அவதானிக்கையில், ரேசில் பின் தங்கிவிடவில்லை என நிம்மதி.
பணம் இன்னும் அந்நியமாய் போய்விடல்லை. தேவைகளும் குறைந்தபாடில்லை. அதுக்கு சுஜாதா போல் 70 வயது ஆகியிருக்கனுமோ என்னவோ? ஆனால் வாத்தியார் சொல்வது போல் priorities மாறியிருக்கிறது.
காலையில் களைப்பின்றி எழுந்து நிம்மதியாய் வெளியே போனால் சுகம் என சொன்னதன் அர்த்தம் புரிகிறது. பணத்தைவிட நிம்மதி முக்கியம் என உணர்கிறேன். நேரம்,நோக்கம் ஏதுமின்றி சனிக்கிழமை காலை மனைவி/மகளை கட்டிக்கொண்டு சும்மா படுத்திருக்க பிடித்திருக்கிறது.
உடல்நலம் பெரிதாய் பாதகமில்லை. இதுவரையில். ஆனால், 8 மணி ட்ரைனுக்கு 7.55க்கு பார்க்கிங்கில் இருந்து ஓடமுடிவதில்லை. மூச்சிரைக்கிறது. மசால்வடை அவ்வளவு எளிதில் ஜீரணமாவதில்லை. இளைத்தபின் போடுவேன் என்ற பேண்ட்டுகள் சிரிக்கின்றன. தலைவாரிய பின் பேசினில் கிடக்கும் முடிகள் பீதியை கிளப்புகின்றன.
உடலை கவனிக்கனும் என புத்திக்கு தெரிகிறது. ஆனால் 15 டாலர் பஃபேக்கு போன வயிற்றுக்கோ, பார்ட்டிக்கு போன மனசுக்கோ தெரிவதில்லை. திடீரென வீறுகொண்டு 8 கிலோமீட்டர் நடக்கிறேன். முளைக்கட்டின பயிரை உண்கிறேன். பின்னிரவில் பசித்து குர்குரேவயும் தின்கிறேன். இடும்பைக்கூர் என் வயிறும்,நாக்கும்.
ரசனை சார்ந்த விஷயங்களிலும் முன்போல் பரவலாக தொடர முடிவதில்லை. புதிதுபுதிதாய் வரும் பாடகர்களை அடப்போங்கடா என விட்டு விடுகிறேன். எம்பி3 தேடி அலைவதில்லை. ஐட்யூனில் ஆர்கனைஸ் செய்வது நேரவிரயமாக தெரிகிறது. கேடிபில்லா கில்லாடி ரங்காக்களை மிகச்சரியாய் பத்து நிமிடங்களில் அணைத்துவிட முடிகிறது. நமக்கென்று ஒரு ஃபோகஸ் இசை, புத்தக விருப்பத்தை எடுத்துக்கொண்டு அதில் உழன்றுவிட விழைகிறேன். ராஜா,கம்பர் என வேலிப்போட்டுக்கொண்ட சொக்கன்களை பொறாமையோடு நோக்குகிறேன்.
கேட்ஜட்ஸ் இன்னும் மோசம். Tab வகையறாக்களை பாவிக்க பிடிப்பதில்லை. லேப்டாப் ஏதேஷ்டம். 5 வருடங்களில் லேப்டாப்பே இருக்காதாமே என்பது கிலியாக இருக்கிறது. வாட்சாப் புரியமாட்டேங்கிறது. புரிய என்ன இருக்கிறது என்றார் ஒருத்தர். ஹ்ம்ம், இல்லை, இப்பவும் புரியலை.
இளைஞர் என்ற நிலை கிட்டத்தட்ட(!) போயாகிவிட்டது. நிறைய பேர் பொதுவாய் சின்னவர்களாய் தெரிய ஆரம்பிக்கிறார்கள். குறிப்பாக சமூகவலைதளங்களில். ட்வீட்டு, FB ஸ்டேடஸ்களின் தொனியை வைத்தே பொடிப்பசங்களை கணிக்கிறேன் (Thala Ajith is Mass வகையறாக்கள்). துள்ளுபவர்களை கமல் போல் “பொடிப்பசங்களா..யார்கிட்ட” என கடக்க முடிகிறது. இணக்கமான இளையர்களிடம் உரிமையில் ஒருமையில் இயல்பாய் தாவ முடிகிறது. சமவயதினரிடம் “கொண்டக்கடலை ஊறவெச்சு சாப்பிடனுமா, ஊறவெச்ச கொண்டக்கடலைய சாப்பிடனுமா” என டயட் பேச்சுக்கள் அதிகரிக்கிறது. சமூகவிழாக்களில் “பொண்ணுக்கு கல்யாணம்ங்கிறது பெரிய பொறுப்பு சார்” க்ரூப்பிலும், முதல்/இரண்டாம் குழந்தை பெற்ற நண்பனை கொஞ்சம் லேசுபாசாய் ரசாபாசமாய் ஓட்டும் க்ரூப்பிலும் இரண்டிலுமாய் பால்மாறி பேசமுடிகிறது.
மனதும்,புத்தியும் பக்குவப்படவில்லை. ஆனால் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருக்கிறது. பிரச்சனை நேரங்களில் ”என்ன இப்ப” என சற்று விலகி சாதக,பாதகங்களை அலசமுடிகிறது. மானம், மரியாதைக்கு எங்காவது பங்கம் வந்தால் சுர்ரென்று கோபம் வருகிறது. குறிப்பாக உறவுகளிடம். இன்னமும் விவரம் கேட்பீர்கள்யேயானால் குறிப்பாக மாமியார் வீட்டு உறவுகள் ;-)
காமம் ஆசாபாசங்கள் சற்று மட்டுப்பட ஆரம்பித்திருக்கிறது. இவ்வளவு தானா இது, அடப்போங்கடா என்ற இடத்துக்கு வந்தாயிற்று. உழைத்துக் களைத்து தூங்கும் மனைவியை தொந்தரவு செய்ய முயலுவதில்லை. யதேச்சையாக செய்வது போல் அவள் தோளை பிடித்துவிடுகிறேன். உடல் தாண்டி, அவளுக்கிருக்கும் பிரச்சனைகள், முன் நரைகள்,உணர்வுகள், ஸ்ட்ரெஸ், மோசமான அதிகாரி, கனவுகள் எல்லாம் சேர்த்ததுதான் மனைவி என புரிகிறது. அதற்காக வாரயிறுதி இரவுகள் இல்லாமலும் இல்லை.
தீவிர கடவுள் தொழல்கள், தத்துவ தேடல்கள் ஆரம்பித்திருக்கிறது. எதற்கும் சக்திவிகடனில் குருப்பெயர்ச்சி பலன் கும்பத்துக்கு என்ன போட்டுருக்கான் என பார்த்து விடுகிறேன். எனக்கான ஒரு கொழுகொம்பை தேடி பிடித்துக்கொள்ள வேண்டும் என புரிகிறது. கர்மா, முக்தி என தத்துவகுழப்பங்கள் தாண்டி சிம்பிளாய் நல்லவனாய் இருந்துவிடுவது ஈசியாக படுகிறது. பொதுவாய் நமக்கு பிடித்தமானவர்களிடம் ஒரு உண்மையான வாஞ்சை,அக்கறை தோன்றுகிறது. நண்பனுக்கு பிரச்சனை என்றால் அடடா என ஒரு பதட்டம் வருகிறது. மெய், மெய்நிகர் இரண்டு உலகிலேயும் அந்த அக்கறை இயல்பாய் வருகிறது. ஒருத்தரை புண்படுத்தி,குழிபறித்து ஓரெழவும் ஆகப்போவதில்லை என புரிகிறது.
சாவை பற்றிய பயம் இன்னும் வரவில்லை. ஆனால், பொட்டுன்னு போனால் மனைவி/மகள் என்ன செய்வாள், என் உடலை ஐஸ்பொட்டியில் ஃப்ளைட் ஏத்த ஆள் வருமா என்ற பயம் உண்டு. இன்ஷ்யூரன்ஸ் ஏஜண்டுகளை முன்போல் சூச்சூ என விரட்டுவதில்லை . வெள்ளைக்காரன் போல் Will (உயில்) எழுதிவைத்துவிடலாமா என திவீரமாய் யோசிக்கிறேன். எங்கு ரிடையர்மெண்ட் வாழ்க்கை (”ஃப்ளோரிடால ஷாந்தினிகேதன்னு ஒரு தேசி கம்யுனிட்டி இருக்காமே”, “என் கட்டை புதுக்கோட்டை கீழரெண்டாம் வீதில தான் வேகும்”) என்பதான சம்பாஷனைகள் அவ்வபோது நடக்கின்றன.
ஆகக்கூடி, என் வாழ்க்கை கிளாசில் தண்ணீர் இப்போது நட்டநடுவில். அதை Half empty அல்லது Half full என இருவாறாக பார்க்கலாம்.
நான் இரண்டுமின்றி தண்ணீரும்,காற்றும் சந்திக்கும் கோட்டினை உற்று நோக்குகிறேன். மெதுவாய் குறையும் அப்புள்ளியில் உண்மையாய் வாழ்ந்துவிட பார்க்கிறேன்.
ஏதோ எனக்கு தெரிந்த ஜென்.
சாப்பிட்டா கீழ மொய் எழுதனும்..பொண்ணப்பெத்தவன் பாருங்க ;-)
ரொம்ப நேர்மையான அலசல். நீங்க தலைவர் மாதிரி எட்டு எட்டா வாழ்க்கையைப் பிரிக்காம ஐந்து ஐந்தாகப் பிரித்துள்ளீர்கள்! நன்று :-))
ReplyDeleteamas32
நன்றிம்மா..முடிஞ்சளவுக்கு மனசு விட்டு எழுதினது :)
Deleteஅருமையான பதிவு ...ஒரு சக 35 வயது நண்பனின் தோள் உரச உட்கார்ந்து ஒரு கோப்பை தேநீர் அருந்திய சுகம் .
ReplyDeleteநம்ம செட் தானா..சூப்பர் :)
Delete// சாப்பிட்டா கீழ மொய் எழுதனும்..பொண்ணப்பெத்தவன் பாருங்க ;-) //
Deleteஇதுலேயும் அடியேன் உங்க செட்டு தான்.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். சுவாரசியமாக இருந்தது.
ReplyDeleteநன்றி தலைவரே..
Deleteஅருமையான self analysis .... சுய பரிசோதனை செய்யும் போது எந்த டாபிக்கையும் விட்டுவிடாமல் நேர்மையாய் செய்துபார்க்க இந்த பதிவு அருமையான எளிய முன்மாதிரி:))) என் பேவரிட்டில் புக்மார்க் செய்துவிட்டேன்.இந்த பதிவிற்கு மிக்க நன்றி:))) மிகவும் பிடித்த்து:)) @shanthhi
ReplyDeleteரொம்ப நன்றிங்க..கேக்க சந்தோஷமா இருக்கு..:)
Deleteசித்தப்பு. கலக்கியிருக்கிங்க. செமயான நடை. ஒரு வருஷம் ஷேவ் பண்ணாம நெஞ்சு வரை தாடி வளர்த்தா அடுத்த எழுத்து சித்தர் ஆகிடலாம். On the content perception i have one word to say. "வயசாயிடுச்சு இல்ல" :-P
ReplyDeleteயெஸ், வயசாவுதுல்ல ;))
Deleteவாவ் மிக அருமை அருமை.. நடுத்தர வயதுகாரர்களுக்கு ஏற்படும் மன உணர்வுகளை மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்... // "ஆனால் 15 டாலர் பஃபேக்கு போன வயிற்றுக்கோ, பார்ட்டிக்கு போன மனசுக்கோ தெரிவதில்லை"// பலருக்கும் அதே.. அதுவும் கேட்ஜெட் பற்றிய எண்ணம் அருமை..பலருக்கும் அதே எண்ணங்கள்...ஜென் நிலையை விளக்கி மிக அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்.. :)
ReplyDeleteநன்றி மேடம் :))
Deleteஉங்களோட சுயமதிப்பு மட்டுமில்லாம, இன்னும் 7 வருஷம் கழிச்சு 7 கடாமாடு வயசாகப் போற எங்கள மாதிரி ஆளுங்களுக்கும் நிறைய விஷயம் சொல்லியிருக்கீங்க பேச்சுவாக்குல :))
ReplyDeleteஅவ்வ்..நன்றி மகேந்திரன் :))
Deleteromba rombha romba rombha nalla irukku.. excellent
ReplyDeleteThanks Anony :)
Deleteவெகு லகுவாக, அற்புதமாக, இயல்பாக ஓடும் நடையில் எழுதியிருக்கிறீர்கள். என் 35-ஐ நினைவுக்குக் கொண்டுவந்தால், உங்கள் எழுத்தின் உண்மையும் நிஜமாகவே புரிகிறது. உங்கள் கனவுகள் மெய்ப்படவும், சுற்றமும் நட்பும் எப்பொதும் உங்களுடன் மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்துகள். pvr
ReplyDeleteநன்றி சார் வாழ்த்துக்களுக்கு :))
DeleteI wish I will be matured enough like you when I reach your age..
ReplyDeleteI wish you have better maturity than mine :))
Deleteஅருமை ரசணை அவர்களே. சிறு வட்டம் போட்டு அதில் அமைதியாக வாழ்க்கையை நடத்தும் சிலரை கண்டால் பொறாமையாகத்தான் இருக்கிறது. நாம் இவ்வளவு பரபரப்பாக என்னத்த கிழித்து கொண்டிருக்கிறோம் என நினைப்பு வந்துவிடுகிறது. உங்களை விட பத்து வயது கம்மி எனக்கு. எவ்வளவு ஓட முடியுமோ இப்போவே ஓடி விட வேண்டும்.
ReplyDeleteஎழுத்துச்சாயம், வாழ்க்கைச்சாயம் என எந்தச்சாயமும் இல்லாமல் அருமையான ஓட்டம். சிந்திக்க வைத்தது.
நன்றி கார்த்திகேயன் :))
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteLife starts after 40. :))))
ReplyDeleteAdhdhdhu..;)) Glad you could read this Karki :))
Deleteஎதார்த்தமான பதிவு. இன்னும் பல சுவாரஸ்யங்களைக் கடந்து கண்டிப்பாய் அடுத்த கட்டத்தில் மீண்டுமொரு பதிவு எழுத வாழ்த்துக்கள் :)
ReplyDeleteகண்டிப்பாய்..நன்றி :)
Deleteஊருக்குள்ள நானும் யூத்தான்னு சுத்தாம ஒப்புக்கிறதுக்கு ஒரு மனசு வேணும்..அது உங்களுக்கு இருக்கு.. இன்னும் 10-15 வருசம் கழிச்சு காலேஜ் முடிக்கிற பசங்களே இந்தமாதிரி எழுதவாங்களோ என்னவோ !! எங்கெங்கெய்யோ அடிச்சிக் கொண்டுபோயிருதுல்ல லைஃப் ?!
ReplyDeleteஆனா , இந்த போஸ்ட்டை சாருவுக்கு ஃபார்வேர் பண்ணா என்னன்னு எனக்குத் தோணுதே :))
நன்றி தலைவரே..:))
Delete:-) குட் ஒன்.
ReplyDeleteநூத்துக்கிழம் (வழக்கமா சொல்றதச் சொல்லணும்லா)
யோவ் எங்கய்யா இருக்க..ஆனா நான் அரைக்கிழம்தான், நீர் தான் ;))
Delete'அவர் ’எழுதின 70 வயசு கட்டுரைதான் உடனே நியாபகம் வருகிறது
ReplyDeleteexcellent write up
-sathish vasan
மறக்கமுடியுமா? அதையும் சொல்லிருக்கனே..:)
Deleteஎளிமையான, உண்மையான, கவித்துவமான, அன்பான, அறிவான, பக்குவமான, தத்துவமான, செறிவான பதிவு. ஒரே வார்த்தையில சொல்லத் தெரியல. :-))))
ReplyDeleteரொம்ப பிடிச்சிருச்சோ ரேணுகா..கேட்க சந்தோஷமா இருக்கு :))
Deleteஅருமையான செல்ஃப் ரிவ்யூ :)) எல்லாத்தயுமே பாஸிட்டீவ் நோட்டோட முடிச்சிருக்கறது நல்லாருக்கு..
ReplyDelete//மனதும்,புத்தியும் பக்குவப்படவில்லை. ஆனால் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருக்கிறது.//
//கர்மா, முக்தி என தத்துவகுழப்பங்கள் தாண்டி சிம்பிளாய் நல்லவனாய் இருந்துவிடுவது ஈசியாக படுகிறது//
போதுமே போதுமே.. 35 வயசுல நானும் இப்படி உணர்ந்தாலே போதுமே :))
"பொண்ணப்பெத்தவன் நான்" இத எதிர்பார்திட்டேதான் வாசிச்சேன், நீங்க என்ன ஏமாத்தல..
எதயும் மிகைப்படுத்தாம எதார்த்தமா எழுதியிருக்கீங்க..
இத ப்ளாக் எழுதியபிறகு கண்டிப்பா ஒரு நிறைவு கிடைச்சிருக்குமே, ஆமாந்தான? :)
(என்னோட ஒவ்வொரு படைப்புக்கப்பறமும் எனக்கு நிறைவாதான் இருக்கும்னு டையலாக் சொல்லக்கூடாது, இது "நான் என்னப்பத்தி தெரிஞ்சுகிட்டேன், இதுதான் நான்" நிறைவு)
சத்தியமா..என்னவோ ஒரு இனம்புரியா நிறைவு..கலக்கிட்டீங்க திவ்யா :))
Deleteவாழ்க்கை வாழ்வதற்கேன்னு சொல்வாங்க.
ReplyDeleteவாழ்க்கையை வாழ்கிறவங்களாலதான் இப்பிடிப்பட்ட பதிவு போட முடியும். வாழ்கின்றீர் நீர் :)
இப்பல்லாம் முப்பதுங்குறதே ஒரு எச்சரிக்கைதான். போன தலைமுறையில் அது நாப்பதாகவும் அதுக்கு முந்தைய தலைமுறையில் ஐம்பதாகவும் இருந்துச்சு.
வாழ்க்கையில் நம்ம படும்பாடுகள் பக்குவத்தைக் கொடுக்கின்றன.
நீங்க சொன்னதில் ஒரு முக்கிய விஷயம் “சுந்தர் பிச்சை மெட்டீரியல்”. வேலை செய்யத் தொடங்குறப்போ.. அந்த வயதில்.. என்னவோ நெனச்சிக்கிறது.. கொஞ்சம் கொஞ்சமா நம்ம நிலை புரிஞ்சதும்.. இருக்கும் அறிவையும் உழைப்பையும் வெச்சுக்கிட்டு எப்படி ஓட்டுறதுங்குற பக்குவம் வரும். அது வரனும். வந்தாத்தான் நிம்மதியிருக்கும்.
அதுக்கப்புறம் நீங்க எழுதுனதெல்லாமே தத்துவங்கள். ரொம்ப லேசாச் சொல்லிட்டிங்க. ஆனா சொன்னது பெரிய பெரிய விஷயங்கள். இப்பிடிச் சொல்ல முடியாமத்தான் எழுத்தாளர்கள் நம்மளைப் படுத்துறாங்க.
உங்க பதிவு நல்லாருக்குன்னு நெறைய பேர் சொல்லியிருக்காங்க. அது ஏன் தெரியுமா? சொன்ன எல்லாரும் ஒரு நிமிடம் அவங்கவங்க வாழ்க்கைய லேசா ரீவைண்டு பண்ணி இப்ப எங்க இருக்கிறோம்னு யோசிச்சிருப்பாங்க. நானுந்தான்.
எல்லாரும் வாழனும்னுதான் விரும்புறோம். ஆனா ஒவ்வொருத்தருக்கும் அமையும் வண்டி ஒவ்வொரு மாதிரி. சிலருக்கு சைக்கிள். சிலருக்கு கார். சிலருக்கு பஸ். சிலருக்கு பைக். சிலருக்கு எதுவுமே இல்லாம கால்நடை. நொண்டிக் கேத்த வண்டி அமையுறதுலதான் இருக்குது சூட்சுமம். ஆனா அது ஆண்டவனுக்கு மட்டுந்தான் தெரிஞ்சிருக்கு.
வாழ்க்கையில் எத்தனையோ வெற்றி தோல்விகள் வரும். அதுல விழுந்து ஒன்னுமில்லாமப் போறத விட.. அடுத்தது என்னன்னு முன்னேறிப் போறவங்களதான் எனக்குப் பிடிக்கும். ஒருவிதத்தில் அது என்னுடைய மனப்பாங்கும் கூட.
இந்தப் பதிவை வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் எழுதுங்கள். உங்கள் வாழ்க்கையின் இனிமை உங்களுக்குப் புரியும். மற்றவர்களுக்கும் தெரியும்.
வாழ்க வளமுடன் :)
ஜிரா..ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு உங்க கமெண்ட்..எனக்கு என்ன சொல்லன்னே தெரியல :))
Delete//உங்க பதிவு நல்லாருக்குன்னு நெறைய பேர் சொல்லியிருக்காங்க. அது ஏன் தெரியுமா? சொன்ன எல்லாரும் ஒரு நிமிடம் அவங்கவங்க வாழ்க்கைய லேசா ரீவைண்டு பண்ணி இப்ப எங்க இருக்கிறோம்னு யோசிச்சிருப்பாங்க. //
ReplyDeleteஅதேதான்.
அடிக்கடி நீங்க எழுதினா நல்லாருக்கும்னு தோணுது.
நன்றி.
நன்றி சார் :))
Deleteஇன்று காலையில் வந்ததும் நான் படித்த உருப்படியான மிக நெகிழ்வான பதிவு.வார்த்தை அலங்காரங்கள் எதுவும் இன்றி மனதில் இருந்து யதார்த்தமாய் வந்து விழுந்ததே பதிவு அழகாய்த் தோன்றிட வைக்கிறது. ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்தேன் :) ஏனோ திரும்ப ஒருமுறை படிக்கத் தோன்றிய பதிவு..உங்கள் இசையமைப்பாளர் குரல் பற்றிய பதிவுக்குப் பின் என்னை அதிகம் ஈர்த்தது இதுவாகத் தான் இருக்கும் :)
ReplyDeleteநன்றி உமா :) அதையும் தூசு தட்டறேன்..;)
Deleteஒரு சாட்சியாய் நின்று கடந்துவந்த பாதையை அலசியிருக்கிறீர்கள். உங்கள் சிந்தனையில் தெளிவு இருக்கிறது. அமைதியான நிறைவான வாழ்வு அமைந்திட வாழ்த்துகிறேன்.
ReplyDeleteமிக்க நன்றிம்மா :)
Deleteரொம்ப அழகா எழுதி இருக்கீங்க...
ReplyDeleteநன்றி :)
Deleteமிக மிக அருமையான பதிவு நடராஜ் அண்ணா, ரெம்ப ரசிச்சு படிச்சேன், இத விட அழகா சிம்பிள இத வேற யாராலயும் சொல்ல முடியுமான்னு தெரியல! எனக்கு மிகவும் பிடிச்சது உங்கள் மனைவி மற்றும் மகள் குறித்து நீங்கள் எழுதியது! வாழ்த்துக்கள்! இவ்வுள்ளவு எழுத்து அருமையா வரும் போது, நீங்க எந்த சொக்கனையும் பார்த்து பொறாமை படும் அவசியமில்லைன்னு எனக்கு தோணுது! உங்கள் எழுத்தே அருமை!
ReplyDeleteமிக்க நன்றி ப்ரதி :) சொக்கன்லாம் மகானுபாவர்..நிறைய கத்துக்கனும் அவர்ட்ட :)
Deleteஅருமையான பதிவு... 30 -23 க்குள் இருக்கறவங்க கண்டிப்பா படிக்கவேண்டியது...
ReplyDeleteநன்றி சார் :))
Deleteவயசுல என்ன இருக்கு! வர்ற நவம்பர்ல எனக்கு 40; ஆனாலும் 25 மாதிரிதான் இருக்கேன்! ;-))
ReplyDeleteரொம்ப thanks பாஸ் :-). இந்த கட்டுரை படித்து நிஜமாவே பயந்துட்டேன்!
Delete-NitniTamil- Twitter ID
ஹஹஹஹா..இதான்யா உம்ம டச்சுங்கறது ;))
Deleteயோவ் லைஃபே இப்போத்தான் ஸ்டார்ட் ஆகுது.. இப்போ போயி பிலாசபி பேசிட்டு.. :-)
ReplyDeleteஹஹஹா ;))
Deleteஉங்க வயசு எனக்கு இன்னும் வரல..28 தான் ஆகுது..வெளிநாட்டு வாழ்க்கைதான் வாழுறேன்..இனிமே இங்கேதான் வாழ்ந்தாகனும்..நீங்க சொன்ன எல்லாத்தையும் நானும் இப்பவே அனுபவிக்கிறேன்..குறிப்பா திடீர்னு பொட்டுனு போய்ட்டா ஐஸ் பெட்டி வருமான்னு யோசிப்பேன் அடிக்கடி..இனிமே அம்மா சமையல நிம்மதியா உக்காந்து சாப்பிட முடியாதுன்னு தோணும்போது அழுகை வந்திடும்..பணத்துக்கு பின்னாடி ஓட ஆரம்பிச்சாச்சு..சீக்கிரம் சம்பாரிச்சுட்டு சீக்கிரம் வாழ்க்கைய முடிச்சுடணும்னு தோணுது.
ReplyDeletewithmekaran
உங்களுக்கு தேவை கல்யாணம் :)
Deleteபிரமாதம். நறுக்குன்னு வந்திருக்கு.
ReplyDeleteநன்றி யுவா..வெரி ஹேப்பி :)
Deleteரொம்ப ரொம்ப நல்லாருக்கு.. படிக்கும்போது ரொம்ப ரொம்ப நெருக்கமா உணர்ந்தேன்.
ReplyDeleteநன்றி அதிஷா :) கமெண்ட் கூடவா நீங்களும் யுவாவும் பக்கத்து பக்கத்துல போடுவீங்க :)
Deleteபடித்தேன், ரசித்தேன் ...... என் மனைவி, மகனுடன் பகிர்ந்தேன். வாழ்த்துகள் !
ReplyDeleteஓ சூப்பர்..நன்றி சார் :)
Deleteஎப்போதும் வாழ்க்கை இப்படித்தான். நம் சூழல்களும், சொல்லும், பொருள்களின் பெயர்களும் மாறி இருக்கின்றன. அவ்வளவுதான்;தாத்தா சொல்லி அப்பா கேட்டது;நீங்கள் சொல்லி, மகன் எழுதப் போவது. நன்று, மிக நன்று!!
ReplyDeleteஆமால்ல..நன்றி சார் :)
Deletelovely... enjoyed the post.... advanced birthday wishes...!
ReplyDelete//ஆகக்கூடி, என் வாழ்க்கை கிளாசில் தண்ணீர் இப்போது நட்டநடுவில். அதை Half empty அல்லது Half full என இருவாறாக பார்க்கலாம்.
//
devipriya rasanai paththi light a kodu pottu kaatti irukkalaam:(
தேவிப்ரியா பத்தி பதிவே எழுதிடலாம் பரணி ;)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதெளிவான அனுபவ அலசல்.அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி சார் :)
Deleteமிகவும் நேர்மையான நேர்த்தியான உண்மையான வார்த்தைகள் ... ரசித்தேன் அதே சமயத்தில் என் வாழக்கையையும் சிந்தித்தேன் ... நாப்பதை தொட்ட நான் இப்போ கவலை பட ஆரம்பித்து விட்டேன் ...வாழ்த்துகள் தோழரே ...
ReplyDelete-ட்விட்டரில் நான் கருவி
மிக்க நன்றி கருவி :))
DeleteI am 20. This post strikes my heart with the hard hitting reality. Stability of thoughts seems to be very important in life.
ReplyDeleteAnd mine are not stable either ;-) Thanks..
DeleteGood writing and good feelings
ReplyDeleteநன்றி சார் :)
DeleteWoowww...பயம் வருதே இப்பவே... ஆனா சமாளிச்சிப்பேன்! நன்றி! felt something real in the words..;-))
ReplyDelete- @iThesmoke
நல்ல எழுத்து நடை. நேர்மையான ஒரு சுய அலசல் முதிர்ச்சியின் அடையாளம். வாழ்த்துகள்.
ReplyDeleteதமிழ்மணத்தின் பொற்காலத்தில் ஒரு விஷயம் உண்டு. இது மாதிரி எதுனா பதிவு எழுதினா உடனே யாராவது நாலு அப்பிராணிங்களை கோத்து விட்டு அவங்களையும் அதே மாதிரி எழுதச் சொல்லுவாங்க. நிறைய வெத்துச் சிப்பிகளுக்கு நடுவில் சில முத்துக்களும் மாட்டும் அதில்.... அது மாதிரி இந்த ட்ரெண்டை நாலு பேரை வச்சு தொடரச் சொல்லலாம்... நல்லாருக்கும்னு தோணுது.
நன்றி லக்ஷ்மி..நீங்களே ஆரம்பிங்களேன்..ஆமா, என்ன லுக்கெல்லாம் மாத்திட்டீங்க :)
Deleteநல்ல பதிவு,நானும் கூப்பிடு தூரம் தான் எனினும் இந்த சின்ன glimpse, ஒரு மணி அடிக்கிறது. உதவும்.
ReplyDeleteநன்றி,
கணேஷ்
நன்றி சார் :)
Deleteசெம. அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி சார் :)
Deleteநாற்பது வயதில் "நியாய" குணம் என்று, கல்கியில் ராஜேஷ்குமார் எழுதியிருந்தார். மிக நல்ல பதிவு
ReplyDeleteசூப்பர்..நன்றி சார் :)
Deleteநான் இளைஞனும் அல்ல ,முதியவனும் அல்ல , நான் யார்?. இன்னும் ஓடணும எவ்வளவு ? ஓட முடியுமா ? அயர்ச்சியை இருக்குதே ? வாழ்க்கை மீது பற்று கொண்டு இறுகப்பற்றுகிறேன் நழுவுவதாக தோன்று கிகிறதே ......
ReplyDeleteஅவ்வ், ஓவர் தத்துவமா போறீங்க :)
Deleteஅருமை .
ReplyDeleteஎனக்காகவே எழுதியதாய் உணர்கிறேன் .
வாழ்த்துக்கள் .
உங்களுக்காகத்தான் எழுதினேன் ;)
Deleteரொம்ப அனுபவிச்சு எழுதிருக்கிங்க...
ReplyDeleteமிகவும் அருமை...
நல்ல சேரன் படம் பார்த்த உணர்வு...
வாழ்க வளமுடன்!
ஹஹஹா..நன்றி சார் :)
DeleteNice flow of your (our) life. Good one
ReplyDeleteசார்...அருமையான பதிவு..கிட்டத்தட்ட இதே போல ஒரு பதிவ நான் இன்னும் ஒரு வாரத்தில் பதியலாம்னு இருந்தேன்..உள்ளப்படி உள்ளபடி உங்கள குறித்ததான எண்ணங்கள வெளிப்படையா அலசி பதிஞ்சும் இருக்கீங்க..you are just 35 years young...Miles to go sir...my heartfelt wishes you and your family...Advanced B'day wishes to you Sir...May this new year turn out to be a fitting reward with full of joy, peace, pink in health and prosperity
ReplyDeleteThanks a lot for your wishes :)
DeleteU showed how life wud b n hw we shud b after 10yrs. Migavum rasikkumpadiyana oru pathivu, rasanaikarare...!!!
ReplyDeleteThanks Suren :)
Deleteஎனக்கு 22 வயது ஆகிறது.வாழ்க்கையின் மீது பயம் அவ்வப்போது வரும்.சட்டென மறந்துவிடும்.உங்கள் பதிவு சற்று அதிகமாக பயப்பட வைக்கிறது.வாழ்க்கையை அதன் போக்கிலே வாழ்ந்துவிட்டு போகலாம் என எண்ணாமல்,இனியாவது மாற முயற்சிக்க வேண்டும்.ொருவரின் சுய பரிசோதனை இவ்வளவு என்னை பாதித்தது இதுவே,முதல் முறை.8.00 மணி ட்ரெயினை 7.55க்கு பார்க்கிங்கில் இருந்து என்னால்கூட தொட முடிவதில்லை.சென்றமுறை முயற்சித்த போது படிகளில் இருந்து விழந்து இருப்பேன்.அன்று இரவு moov sprayவையெல்லாம் தேட வேண்டியிருந்தது.இதுவரை பெரிதாய் ஒன்றும் கிழிக்கவில்லை.என் அப்பாவின் குரல் ஏனோ என் காதுகளில் இன்று சற்று அதிகமாக கேட்கிறது. GET2KARTHIK
ReplyDeleteரொம்ப செண்டி ஆயிட்டீங்களோ, நன்றி கார்த்திக் :)
Deleteஎனக்கு 22 வயது ஆகிறது.வாழ்க்கையின் மீது பயம் அவ்வப்போது வரும்.சட்டென மறந்துவிடும்.உங்கள் பதிவு சற்று அதிகமாக பயப்பட வைக்கிறது.வாழ்க்கையை அதன் போக்கிலே வாழ்ந்துவிட்டு போகலாம் என எண்ணாமல்,இனியாவது மாற முயற்சிக்க வேண்டும்.ொருவரின் சுய பரிசோதனை இவ்வளவு என்னை பாதித்தது இதுவே,முதல் முறை.8.00 மணி ட்ரெயினை 7.55க்கு பார்க்கிங்கில் இருந்து என்னால்கூட தொட முடிவதில்லை.சென்றமுறை முயற்சித்த போது படிகளில் இருந்து விழந்து இருப்பேன்.அன்று இரவு moov sprayவையெல்லாம் தேட வேண்டியிருந்தது.இதுவரை பெரிதாய் ஒன்றும் கிழிக்கவில்லை.என் அப்பாவின் குரல் ஏனோ என் காதுகளில் இன்று சற்று அதிகமாக கேட்கிறது. GET2KARTHIK
ReplyDeletenice write up ! A honest and to the point post . Only the first half of the life is over and 35 is just an intermission . You have another 35+ years to celebrate in near future
ReplyDeleteRegards @DrTRM
Thanks Doc :)
Deleteஇது ஒருவகையில் வாழ்க்கையில் "இதுவரை ஜெயித்த" 35-ன் பார்வை! நல்லா இருக்கு. நான் எழுதினா அது, "தோற்றுவிட்ட, இன்னும் போராடுகிற" ஒரு boring தொணியில் வரும்னு நினைகிறேன்! :-)
ReplyDelete-NitniTamil -Twitter ID
அவ்வ்..அப்படில்லாம் இல்ல, நன்றி :)
Delete"ஆகக்கூடி, என் வாழ்க்கை கிளாசில் தண்ணீர் இப்போது நட்டநடுவில். அதை Half empty அல்லது Half full என இருவாறாக பார்க்கலாம்.
ReplyDeleteநான் இரண்டுமின்றி தண்ணீரும்,காற்றும் சந்திக்கும் கோட்டினை உற்று நோக்குகிறேன். மெதுவாய் குறையும் அப்புள்ளியில் உண்மையாய் வாழ்ந்துவிட பார்க்கிறேன். "
- வார்த்தைகள் ரொம்ப அருமையாக உள்ளது உங்களுடைய வாழ்க்கையை போல..
நன்றி சார் :)
DeleteDear friend
ReplyDeleteThis is the first time reading ur blog. Very good writing and analysis about life. I feel very close to ur wrirings bcaz i am 37 and same kumbha rasi. Ithank u very much for writing all my feelings. Great
Thanks :)
Deleteஅருமையான பதிவு... வாழ்த்துக்ககள்
ReplyDeleteஅருமை.
ReplyDeleteThanks..Glad that you came to my blog :)
Deleteகண்ணுல காட்டுரீன்களே பரமா
ReplyDeleteஹஹா :)
Deleteசெம ரைட்டப்!
ReplyDeleteநன்றி சார், தன்யனானேன் :)
Deleteசுவையான பதிவு. என் வயது வந்த பிறகு என்ன எழுதிவீர்கள் என யோசிக்கிறேன்! :-))
ReplyDeleteநன்றி, அப்படியென்ன வயது? :)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஒவ்வொரு வரியிலும் வயது முதற்கொண்டு அப்படியே என்னை பொருத்திப் பார்த்துக்கொள்கிறேன்.
Deleteஅருமை அருமை.
நன்றி சார் :)
Deleteஎன்னோட வாழ்க்கைய பக்கத்துல இருந்து பார்த்து எழுதினதுபோல இருக்கு.
ReplyDelete*தண்ணீரும்,காற்றும் சந்திக்கும் கோட்டினை உற்று நோக்குகிறேன்* இப்படி எழுத ஒரு திறைமை வேணும்.
Madotica.
அவ்வ் நன்றி :)
Deleteஅருமைங்க தலைவரே, மனசுக்குள்ளாரயே பேசிக்கிடறத மனசுவிட்டு எழுதிட்டீங்க :))
ReplyDeleteமிக்க நன்றி :)
Deleteநான் இன்னும் ஒரு மாதத்தில் முப்பது வயதைத் தொடுகிறேன். திருமணம், வீடு என்று முடித்து, [பெண் ] குழந்தையை எதிர்நோக்கி இருக்கிறேன். ஏனோ என்னுடைய வாழ்க்கையை யாரோ கவனித்து எழுதியது போலவே உள்ளது இந்தப் பதிவு. மிகவும் அருமை.
ReplyDeleteNice writeup. Most of your views/expression matching with mine... :-))))
ReplyDeleteHope most of the guys who is in their late 30s & early 40s may enjoy reading this write up :-))
மிக்க நன்றி :)
Deleteகலக்கல்... ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...
ReplyDeleteமிக்க நன்றி..எப்படிக்கிறீங்க :)
Deleteஅட! நீங்களும் ஜெமினியா? உங்க பிறந்த நாள் முடிந்து ரெண்டு நாள் கழிச்சு எனக்கு பிறந்தநாள். இந்த வருஷத்தோடு முப்பது முடியுது. நானும் என் வாழ்க்கையின் மூன்று தசாப்தங்களைப் பத்திப் பதிவெழுதணுன்ம்னு கொஞ்ச நாளா நெனச்சிட்டு இருந்தேன். இன்னிக்கு இதப் படிச்சதும் சந்தோஷாமாயிடுச்சு. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. ஆனா இன்னும் ஒரு வருஷம் கழிச்சு இதையெல்லாம் எழுதியிருக்கலாமேன்னு நெனச்சிட்டு இருக்கும்போது 'இப்பல்லாம் முப்பதுங்குறதே ஒரு எச்சரிக்கைதான்'ன்னு ஜிரா பயமுறுத்தறார் :-)
ReplyDelete//ராஜா,கம்பர் என வேலிப்போட்டுக்கொண்ட சொக்கன்களை பொறாமையோடு நோக்குகிறேன்.// - +100
- கார்த்திக் அருள்
சூப்பர் கார்த்திக்..ஜெமினின்னாலே ரசனை ஜாஸ்தி ;))
DeleteTrue :-)
Deleteமிகவும் அருமை நண்பரே. உள்ளார்ந்து, உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறீர்கள். உள்ளத்தில் உண்மையும், அறிவில் தெளிவும் இருந்தால் தான் இது போல எழுதமுடியும். மனதில் இருப்பதை அப்படியே எழுத்தாக மாற்றுவது பெரிய வித்தை. வெகு இயல்பாக உங்களுக்கு கைகூடுகிறது. தங்களின் அற்புதமான படைப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி :)
DeleteVery good writing. At 46, I feel all of this now. I am more worried now that I have not matured enough like u during my 35s :)
ReplyDeleteமிக்க நன்றி :)
Deleteரிட்டையர்ட் ஆனதும் புதுக்கோட்டைக்கே வந்துருங்க. ரெண்டுபேரும் தினமும் சாய்ந்தரம் புதுக்குளத்தைச் சுற்றி பேசிகிட்டே வாக்கிங் போவோம் :)
ReplyDeleteI second it. :)
DeleteI second it. :)
Deleteஆனா நீங்க அப்ப மந்திரியா இருப்பீங்களேண்ணே..கூட செக்யுரிட்டில்லாம் இருப்பாங்களே ;))புதுக்குளம் காத்து மனசுலயே நிக்குது :))
DeleteFirst class...wonderful writing...sailing in the same boat ;-)
ReplyDeleteமிக்க நன்றி :)
Deleteஎன் மனசைப் படிச்சு / என்னிடம் பேட்டி கண்டு எழுதினா மாதிரி இருக்கு.
ReplyDeleteநாற்பதுக்கு அருகாமையில் இருக்கும் மிடில்கிளாஸ் இந்தியர் அனைவருக்குமே இப்படித்தான் இருக்குமோ?
உங்க பதிவுக்கும் எனக்கும் உள்ள இரு வித்தியாசங்கள் - எனக்கு வயசு 38 ஆகுது
முப்பதுக்கப்புறம் நீங்க கடவுளை நோக்கிச் செல்கிறீர்கள், நான் கடவுள் எனும் கான்சப்டை விட்டு விலகிச் சென்றுகொண்டிருக்கிறேன்.
நல்ல பதிவு, வாழ்த்துக்கள் நட்டு
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
மிக்க நன்றி ஸ்ரீ..ஓ கடவுள் நம்பிக்கை போயிடுச்சா :) ஸ்ரீஹிதாவுக்கு என் முத்தங்கள் :)
Deletenice sir :)
ReplyDeleteமிக்க நன்றி :)
Deleteathu yaen indha ennamellaam velinaatil iruppavarkalukku adhigamaa irukku. Naam edhai thaedi odukiroamnu oru ennam kooduthalaa iruppathu veliyilathaannu ninaikiraen. puli vaal kathai thaan.
ReplyDeleteThis seems to be written more for yourself, i.e for the sake of writing for you, for the sake of treasuring for you, than for others. Having said, everybody relating themselves with the blog is a victory for you as a blogger.
This story is going to be never ending, will be running all the way. All the best for your future. @jimmuboy
Thanks a lot for your kindness :)
Delete//கர்மா, முக்தி என தத்துவகுழப்பங்கள் தாண்டி சிம்பிளாய் நல்லவனாய் இருந்துவிடுவது ஈசியாக படுகிறது///
ReplyDelete//ஒருத்தரை புண்படுத்தி,குழிபறித்து ஓரெழவும் ஆகப்போவதில்லை என புரிகிறது.///
யோசிச்சிப் பாத்தா எவ்ளோ பெரிய தத்துவம் இது.. ஆனா ரொம்ப சிம்பிளா..போகிறபோக்கில் சொல்லிட்டு போயிட்டீங்க.. கிரேட்..
அடிக்கடி எழுதாட்டியும் அமாவாசைக்கு ஒரு வாட்டி..பௌர்ணமிக்கு ஒரு வாட்டியாவது எழுதுங்கண்ணே..
எழுதறேன் குணா..சரக்கு அவ்ளோ இல்லியே ;))
Deleteசெம செம.. ஆனாலும் 45ல் எழுத வேண்டியது இது. அப்ப வெளிநாட்டுல இருக்கிறதால இன்னும் பொலம்ப வேண்டியிருக்கும்.
ReplyDeleteஇதெல்லாம் ஒரு வயசா சார் அப்படின்னுதான் கேட்கத் தோணுது. (சம வயசாச்சே)
எல்லா காலகட்டங்களிலும் இது போல ஏதாவது இருந்துட்டே இருக்கும், ஆனா 35க்கு இது எனக்கு அதிகமாகவே படுது.
நன்றி இளா..ஆமா சின்ன வயசு தான ;))
Deleteஅருமையான பதிவு.. வாழ்த்துக்கள்! :-)
ReplyDeleteரொம்ப அழகான சுயபரிசோதனை அண்ணா, நான் யார்ன்னு டைரியப் பாத்து ஒரு கேள்வி கேக்குற குழப்பமான மனநிலை ஒவ்வொரு பருவ மாற்றத்துலயும் (சிலர்) யோசிப்பாங்க, ஆனா ஒரு புள்ளிக்கு மேல இதுதான்னு சரியா எல்லாராலையும் தீர்மானிக்க முடியாது...
ReplyDeleteஇதுதான்னு நச்சுன்னு சொல்லிருக்கீங்க, ரொம்ப பிடிச்சது :)) புக்மார்க்ட் :))
@Narumugai_
மிக்க நன்றி சகோ :)
DeleteNice post :)
ReplyDeleteI thought like this in 1999 desired and made Bangalore my home. Power of relatives, near and dear to raise Indian kids.
Good choice, Thanks :)
DeleteWow
ReplyDeleteThx :)
Deleteமிக அருமையான பதிவு ! ஒரு பெண்ணை பெத்தவங்கனு நினைக்கும் போது பயம் வருது.@usharanims
ReplyDeleteமிக்க நன்றி :) அதெல்லாம் சமாளிக்கலாம் ;))
Deleteசெமங்க.... :)
ReplyDeleteமிக்க நன்றி :)
Deleteகுட்.... வேறென்ன சொல்ல??? .தெரியல..
ReplyDeleteஉங்கள் பதிவு அருமை.
ReplyDeleteஎழுத்தும் நடையும் சரளமாக வருகிறது
உலகில் உள்ள எல்லோருக்குமே ப்ளாஷ்பேக் எனும் விஷயம் ரொம்ப பிடிக்கும் அதை ரசித்து அசைப் போடுவதில்லுள்ள சுகம் அலாதியானது அப்படி ஒரு அருமையான அசைப் போடலாகவே இந்த பதவினை காண்கிறேன்
படித்தேன்
சுவைத்தேன்
இதை தேன் என நான் நினைத்தேன்
வாழ்த்துக்கள் நண்பரே
Very interesting bro.......
ReplyDeleteமிக்க நன்றி :)
Deleteஎன்னாதிது :) நல்லா எழுதியிருக்கன்னு நான் தனியா வேற சொல்லனுமா :) கடைசில கொஞ்சம் பீலிங்க்ஸ் ஆக்கிட்ட :) ஆனா ஒன்னு :) அப்போவே சொன்னோம் உனக்கு வயசாகிடுச்சுன்னு. கேட்டியா நீ :)யூத் யூத்னு கூவிட்டிருந்தியே :) என்னவோ போ அண்ணாத்த :) அச்சச்சோ , உன்னை அண்ணாத்தன்னு கூப்பிடனுமா அங்க்கிள்ன்னு கூப்பிடனுமா!!!!
ReplyDeleteரேஸ்கல்ஸ்..இதெல்லாம் சும்மா, ஐயம் யூத் ஒன்லி ;))
Deletehehehe :) meesai la mannu otti irukku paaru :) thodachiko
Deleteஎன்ன ஒரு சரளம்! மத்திம வயதை தாண்டிய எவனும் சாவைக் கண்டு அஞ்சுவதில்லை. வாழ்ந்தே தீரும் வேட்கை இல்லை. பெண்டு பிள்ளைகள் தட்டழியுமே எனும் கவலைதான் அவனை ஓட வைக்கிறது!
ReplyDeleteமிக்க நன்றி செல்வேந்திரன். இதைவிட சிறப்பாக நான் சொல்லவந்ததை குறுக்க முடியாது. தட்டழியுமே எனக்கு புதிதான வார்த்தை.
Deleteஇருபதைத் தொட்டிருக்கும் என்னையே வாழ்க்கையைப்பற்றி நிறைய யோசிக்க வைத்திருக்கிறது. இதைவிட இந்தப்பதிவுக்கு பாராட்டாக வேறெதையும் சொல்லிவிட முடியாது. அட்டகாசம்.
ReplyDeleteநன்றிடாப்பா கருப்ஸ் ;))
Delete//ஆகக்கூடி, என் வாழ்க்கை கிளாசில் தண்ணீர் இப்போது நட்டநடுவில். அதை Half empty அல்லது Half full என இருவாறாக பார்க்கலாம்.// நிதர்சனம். நாம், பாதி அல்ல, முழுதும் நிறைந்ததாகவே பார்ப்போம்!
ReplyDeleteநன்றிங்க :)
Deleteஆங்கிலத்தில் கட் காபி பேஸ்ட் னு சொல்லுவாங்க .
ReplyDeleteஒரு வேளை 35 வயதை கடந்த முக்கால்வாசி பேருக்கு சிந்தனை ஓட்டம் இதுபோல் தான் இருக்குமோ ??
நிறைய இடத்தில் "அட! நம்மள போலவே இருக்கே இவர் அனுபவமும்" னு தோன்றியது !
நிலைக்கண்ணாடியுடன் பேசிய உணர்வு !!
அருமை அருமை !!
இந்த மாதிரி nostalgic ஆக எழுதுவது வாத்தியாருக்கு கை வந்த கலை(க.பெ பல நேரங்களில் இந்த நடையை பயன்படுத்தி இருப்பார் )......நீங்களும் கலக்கி இருக்கிறீர்கள்
ReplyDeleteநெஜ ரெண்டுங்கெட்டான் வயசு இதுதான்னு சொல்லலாம். மத்திய வயதில் இருக்கும் அனைவரும் இந்த கட்டுரையோடு relate செய்ய முடிகிறது :)
சிவசு
ஆமாங்க..மிக்க நன்றி :)
DeleteExcellent expression of the self and a great reflection of middle age thought process. Very nice style.
ReplyDeleteThank you Raj :)
DeleteThe existential crises that we all go through, the stage in our lives that things start papering a little clearer. Priorities start making sense, life seems to slow down a wee but, relationships get sweeter, moods get a little quieter, the peaks and troughs start moving towards each other,
ReplyDeleteYou captured it beautifully. The parts where you talk about the love if your life, very moving. The clarity of thought is quite impressive. Amazing. Congrats thambi:-)
சோக்கா சொன்னக்கா..இதெல்லாம் அப்டியே வர்றதான்ல ;))
Delete//ஓ கடவுள் நம்பிக்கை போயிடுச்சா//
ReplyDeleteஅது மட்டும் கடேசி நூலிழையில் ஒட்டிக்கிட்டு இருக்கு, மத்தபடி எல்லா அடையாளங்களும் சம்பிரதாயங்களும் ஒடிப்போச்சு.கோவில் விசிட் Community service for me. வேலை செய்ய மட்டுமே அங்கே போறேன்.
ஓ, கோவில்ல அர்ச்சனை சீட்டு கிழிச்சு குடுக்குற ஆளுங்க மாதிரி..Just kidding, it's great Sriram :)
Deleteரொம்ப நல்லா இருக்குங்க.........அருமையான சுய அலசல்....அடிக்கடி எழுதுங்க...
ReplyDeleteமிக்க நன்றி :)
DeleteThis comment has been removed by the author.
Deleteநல்லாருக்குன்னு சாதாரணமா சொன்னா அது அவ்வளவு நல்லா இருக்காது....கலக்கிட்டிங்க bro....
ReplyDeleteமிக்க நன்றி :)
Deleteவாழ்க்கை ஓட்டத்தில் சற்று நின்று எங்கிருக்கிறோம் என எட்டிப் பார்த்தது நீங்கள் மட்டுமில்லை, நாங்களும்தான்.. உங்கள் எழுத்துக்களால்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி :)
Deleteவாத்தியார் எழுத்து மாதிரியே... :) சூப்பர் சார்... :) :)
ReplyDeleteமிக்க நன்றி :)
Deleteஅருமையா எழுதியிருக்கிங்க. பாலகுமாரன் நாவலின் கதாநாயகன் போல ஒரு சிந்தனை ஒட்டம் அவர் எழுத்து நடையைப் போன்ற ஒரு தெளிவு. ரொம்ப நன்றாக இருக்கு. Great !!!
ReplyDelete- Dubukku
Thala Ajith is Mass!!
செம பஞ்ச்லைன் டுபுக்கு ;))
Deleteஇண்ட்ரஸ்டிங்.. நான் யூத்துங்கிறதுனால உங்க பீலீங்கை உள்வாங்கிட்டு உஙக் வயசானதும் படிச்சிப் பாக்குறேன்.:)
ReplyDeleteஹஹா..நான் கூட இதை புனைவா தான் எழுதிருக்கேன் கேபிள் :)
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete