Tuesday, August 11, 2015

பாகுபலி




Work from home-ல் மீட்டிங்கில்லாத மதியம். எங்கள் பேட்டை மல்டிப்பிளெக்ஸில் தமிழிலேயே பாகுபலி. செவ்வாய் என்பதால் பாதி விலையில் டிக்கட். படுத்த வழியின்றி மகள் வாகாய் சம்மர் கேம்ப்பில்.

விளைவு - பாகுபலி.

தமிழிணையத்தில் வந்த அத்துணை சூப்பர்லேட்டிவ்களுக்கும் தகுதி வாய்ந்ததே. But but but..கீழ்க்கண்டவை சற்றே உறுத்தல்.

- படத்தை தமிழில் நேரடிப்படமாக அறிவித்திருந்தார்கள். ஆனால் முதலில் அந்த திட்டம் இல்லை போலும். சில பாடல்கள், காட்சிகள் லிப்சின்க்கில் இல்லை. வலிந்து லிப்சின்க்கிற்காக போடப்பட்ட வரிகள் அந்தக்கால சிரஞ்சீவி - ஸ்ரீதேவி டூயட் போல் தெலுங்கு டப்பிங் களை அடித்தது (ராஜமவுலி மூளையாய் க்ளோசப்கள் நிறைய தவிர்த்தும்)

- இரண்டே இரண்டு இடத்தில் மகிழ்மதி ராஜ்ஜியத்தின் Birds eye view shots. கிராஃபிக்ஸ் பல்லிளித்தது. ஏதோ ட்ராஃப்ட் Work in progress code-ஐ திணித்தது மாதிரி, ஓவியம் என்பது நகரா எறும்பு மனிதர்களுடன் அப்பட்டமாய் தெரிந்தது. போலவே தமன்னா இரவில் காத்திருக்கும் ஒரு silhouette ஒற்றைமர ஷாட். கிராஃபிக்ஸ் மரம், மலை எனத்தெரிந்தது.

- மரகதமணி. செம எஃபோர்ட். ஆனால் போதவில்லை. அருவி காட்சிகளில் இருந்த பின்னணி இசை கெத்து படம் நெடுக இல்லை. ’பச்சை தீ’ போன்ற பாடல்கள் கேட்க சுகமெனினும், பாகுபலிக்கு செட்டாகிறதா என்பது கேள்விக்குரியது.

- ஒளிப்பதிவும் bland ஆக பட்டது. செந்தில்குமாரின் ஷாட்களில் அசுர உழைப்பு தெரிகிறது. No doubt about it. ஆனால் 300, Troy போன்ற படங்களின் sleekness இல்லை. என்னவோ கலர் கரெக்‌ஷன், DI..இந்த இது இதும்ப்யாங்களே..அதை இன்னமும் செய்திருக்கலாம். கிரவுண்டில், மொட்டை வெயிலில் எடுத்த போர்க்காட்சிகள் இன்னமும் வேறு கலரில் வந்திருக்கலாம். குறிப்பாய் தமன்னா கச்சையை கழட்டும் காட்சியில் கேமரா அசடாய் பின்னாடி இருக்கிறது ;)

- படத்தின் letdown மதன் கார்க்கி. பேச்சுத்தமிழும் இல்லாமல், செந்தமிழும் இல்லாமல் சவசவ வசனங்கள். குறிப்பாய் ரோகிணி உபயோகிக்கும் ‘அனுமானம்’ போன்றவை அவர் கேரக்டருக்கு செட்டாகவில்லை. ’திரிசூல வியூகம் ஆரம்பம்ம்ம்ம்’ போன்றவை விஜய் டப்பிங் மகாபாரதம் தரம்.
- இளைய பிரபாஸின் டப்பிங் குரல். அக்மார்க் தெலுகு டப்பிங் ஹீரோ வாய்ஸ். சாய்குமாரோ, ஆண்டனி ராஜோ இருவரில் ஒருவர். இயல்பாய், புதிதாய் யாரையாவது போட்டிருக்கலாம்.

550 கோடி வசூலித்த படம், இந்தியனாக, திராவிடனாக, தமிழனாக, தெற்காசியனாக உனக்கு பெருமையில்லையா என சண்டைக்கு வராதீர்கள். வந்தாலும் பதிலில்லை. ராஜமவுலிகாரு என்பதாலேயே இந்த கேள்விகள்.

எனக்கு ஒட்டுமொத்தமாய் கொஞ்சம் மகாபாரதம் கதை போல் பட்டது. துரியோதணன் = ராணா / அர்ஜுனன் = பிரபாஸ் / பீஷ்மர் = சத்யராஜ் / திருதிராஷ்டரன் = நாசர் ரைட்?

மற்றபடி படத்தில் எல்லாமே ப்ளஸ். குறிப்பாய் தமன்னா, அனுஷ்கா, ரம்யா மூவருமே கலக்கல் (ஹிஹி). படத்தின் ஆண் நடிகர்களை தூக்கிச் சாப்பிடுகிறார்கள். சத்யராஜ் தவிர. சொதப்புவார் என்றே நினைத்தேன். ஆச்சர்யமாக அடக்கி வாசித்து அசத்தியிருக்கிறார். இந்தப்படத்திற்கு டெய்லி ரேட் பேசியிருந்தாராம். தீவாளி பார்த்திருப்பார்.

அனுஷ்கா இளைய வயதில் வருவார் என்பதற்காகவே ’துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம் தகிடததீந்த’ என பாகுபலி 2விற்கு காத்திருக்கிறேன்.

ஜெய் தேவசேனா !!!

+++++++++