Friday, May 18, 2012

கார்த்திண்ணா


”நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா.

கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என கேள்விகள் வராத, அறிஞர் அண்ணாவை தவிர வேறு அறிஞரை அறியாத வயது, காலக்கட்டம் அது. 

கேட்ட ரெண்டாவது நொடி என் அப்பாவிடமிருந்து “நீங்க க்ரிஸ்டீனா சார்?” என்ற கேள்வி வந்தது.

மூனாவது நொடியில் “உங்களுக்கு எய்ட்ஸா” என்று கேட்டது போல “அய்யிய்யோ, இல்ல சார், அது கம்முனிஸ்ட் நேமுங்க. நாங்க சைவப்பிள்ளமார். கவுச்சில்லாம் இல்லைங்க எங்கூட்ல”எனப் பதறிய செல்லப்பா எங்கள் புது ஹவுஸ் ஓனர்.

செல்லப்பாக்கு தோராயமா 55 வயசு இருக்கலாம். எம்பதுகளின் நீள/கட்டை கிருதா, எழுபதுகளின் பெல்பாட்டம். அறுபதுகளின் செதுக்கிய மீசை. வழுக்கையை மறைக்க ஒரு பாலுமகேந்திரா கேப் என ஒரு மார்க்கமாக இருந்தார். கறம்பக்குடி மிடில் ஸ்கூலில் சயின்ஸ் வாத்தியார்.

நிற்க, இது செல்லப்பாவின் கதை அல்ல.

பிறகு?

கார்த்தியின் கதை. எனக்கு கார்த்திண்ணா. இந்த சம்பாஷணை நேரத்தில் கார்த்திண்ணா ஒரு ஹைஹிப் பேண்ட்டும், விஜய் “ஊர்மிளா” பாட்டில் போட்டுவருவது போன்ற ப்ரவுன் டிசைன் சட்டையும், என் அப்பா “அதுல்லாம் உழைக்காது” என்று மறுத்த பாலியஸ்டர் இழை வெள்ளை பெல்ட்டும், வெள்ளையும் சிவப்புமாய் ஒரு ஃபீனிக்ஸ் ஷூவுடன் என் ஆதர்ச உடையில் நின்று கொண்டிருந்தது. “ஆத்தங்கர மரமே”வில் ஊர் திரும்பும் விக்னேஷ் கணக்காய் நடுவகிடு எடுத்து ஸ்டைலாக இருந்தது. கண்ணில் ஒரு குறும்பும் கூடவே.

பார்த்த நொடியில் கார்த்திண்ணாவை எனக்கு ரொம்ப பிடித்துவிட்ட்து. மீசை வராமல் வந்தும், பருக்கள் வந்தும் வராமலும், வாழைமரத்து ஜவுளிக்கடையில் 1.60 கட்பீசில் எடுத்த குதிகால் தெரியும் கால் சராயுடன் என் நிலையைக்கண்டு கூச்சமும், அப்பா மேல் இனம்புரியா கோவமும் வந்தது.

“கார்த்தி பொன்னமராவதில ITI முடிச்சிருக்கு. இப்ப டீவியெஸ்ல அப்ரண்டிசா மெட்ராஸ்ல இருக்கு”.

ஃப்ரெண்ட்ஸ் வடிவேலு அப்பரசண்டி என அதை கேலி வழக்காக கொண்டு வராத காலம். கட்டினா இந்த புள்ளைய கட்டுவேன் என்று சபதம் எடுப்பது போல், என்ன ஏது என தெரியாமல், பெருசாகி சென்னையில் அப்ப்ரசண்டிஸ் ஆவேன் என சபதம் எடுத்தேன்.

“தம்பி பேரு என்ன” என்னை நினைவுக்கு கொண்டு வந்தார் செல்லப்பா.

“ஸ்ரீராம் சார். பிரகதாம்பால இங்க்லீஷ் மீடியத்துல டென்த்து போட்டுருக்கேன்” அப்பா.

“சிர்ராமா..நல்ல பேரு..நல்லா படிக்கோணும், கார்த்திட்ட கேட்டு நடந்துக்க”ன்னார் செல்லப்பா. இதை எதுக்கு சொன்னார் என இன்று வரை தெரியவில்லை. ஆனால் கார்த்தியை கேட்டு நடக்கவேண்டும் என இரண்டாம் சபதம் எடுத்துக்கொண்டேன்.

“ஹாய் சிர்ராம்” என்று வாயை முதன் முதலாய் இந்த சம்பாஷணையில் தொறந்தது கார்த்திண்ணா. நம்பினால் நம்புங்கள். அந்த நாள் வரை என்னிடம் யாரும் “ஹாய்” சொன்னதில்லை. ஹல்லோ ஓண்ணு ரெண்டு உண்டு, ”வணக்கம் பாஸு” “வாங்க ஃப்ரெண்டு” உண்டு. ஆனால் ஹாய் இல்லை. பம்மிப்பதறி “ஹ ஹாய்ண்ணா” என் வரலாற்றில் முதல் ஹாயை பதிவு செய்தேன். செல்லப்பாவும், எங்கப்பாவும் பிறகு அட்வான்சை பற்றிக்கதைக்க தொடங்க கார்த்திண்ணா உள்ளே போய்விட்ட்து.

இந்த இடத்தில் வீட்டைப்பற்றி சொல்லவேண்டும். ஒரு பழையகாலத்து ரேழி,கொல்லை வெச்ச வீட்டை, முன்பக்கத்தை மட்டும் கிளிப்பச்சை கலரில் மச்சுவீடு போல் எழுப்பி, உச்சியில் விகாரமான ஃபாண்ட்டில் “வீனஸ் இல்லம்”என்று எழுதி (செல்லப்பா ஒரு ஜோசியப்பிரியர்) , மொசைக், நாலு டீப்லைட்,ஃபேன் போட்டு எங்களிடம் ஆயிரம் ரூவா வாடகைக்கு விட்டிருந்தார். பின்பக்க ஓட்டு வீட்டு போர்ஷனில் ஓனர்.

அப்பாக்கு திரும்பினா கீழராஜவீதி காங்கிரஸ் ஆபிஸ் எதிரே பேங்க்கு என்பதை தவிர பெரிய சவுகரியம் இல்லாத ஒரு வீடு.
இருந்தும் எனக்கு வீடு பிடித்துவிட்ட்து. காரணம், எனக்கே எனக்கேயென்று ஒரு ரூம். அப்பா போனஸ் ஆஃபராக “புள்ளை படிக்கனும் சார்..பப்ளிக் எக்சாம்” என பிட்டை போட்டு மச்சில் இருந்த ரெண்டு ரூம்பில் ஒன்றை எனக்கு துண்டு போட்டு பிடித்திருந்தார். ஒரு க்ரில் கேட்டு போட்டுத்தடுத்த பக்கத்து ரூம் ஒனருக்கு.

வீட்டுக்கு குடிவந்த முதல் 3 மாசம் கார்த்திண்ணா ஊரில் இல்லை. திடீரென்று ஒருநாள் தொட்டியில் இறங்கி நல்லதண்ணி பிடித்துக்கொண்டிருந்த அதிகாலையில் ரெக்சின் பேக்,சூட்கேசோடு வந்திறங்கி, அரை இருட்டிலும் 2 செகண்டு என்னை பார்த்து “நல்லாருக்கியா ஜெயராமு” எனப் புன்னகைத்தது. “நான் ஸ்ரீர்..” என சொல்வதற்குள் உள்ளே போய்விட்டது. மதியம் ஸ்கூல்விட்டு வந்து சாப்பாடு பரிமாறுகையில் அம்மா “கார்த்திக்கு கெரகம் சரியில்லையாம். தூரத்துல கஷ்டப்படவேணாம்ன்னு டீச்சரு இங்க வரசொல்லிட்டாங்களாம், இனிமே இங்கயே இருக்குமாம்” என சொன்னதை கேட்டு ஏனோ ஒரு சின்ன சந்தோஷம்.

கார்த்திண்ணாவுக்கு நண்பர்கள் அதிகம். பால்கார ராஜகோபாலு முதல் எதிர்த்தவீட்டு கண்ட்ரக்டர் மாமா வரை எல்லோரும் சினேகிதம்.
யாருடனோ, எதுக்கோ கையத்தட்டி சத்தமா சிரிக்கும் வாசலில். கக்குவான் இருமல் டாக்டர் வீட்டு விஜிக்கா டைப்ரைட்டிங் கிளாஸ் போக மாலை 6 மணிக்கு வீட்டை கடக்கையில் மட்டும் சைலண்டாகிவிடும். தன் சில்வர் ப்ளசை சைடு ஸ்டேண்டு போட்டு நிறுத்தி அதில் சாய்ந்து நின்று தினத்தந்தியை புரட்டும். கார்த்திண்ணா விஜிக்காவை நோக்க, விஜிக்கா கார்த்திண்ணாவை நோக்க, நான் சயின்ஸ் புஸ்தகத்தை நோக்காமல் இவர்களை நோக்குவேன். மத்தநேரம் முச்சூடும் கார்த்திண்ணா மாடி ரூமிலேயே கிடக்கும். எப்பவும் டேப்ரிக்கார்டரில் பாட்டு. அதென்னவோ “மயங்கினேன் சொல்ல தயங்கினேன்”,“வெள்ளி கொலுசுமணி” ரெண்டும் ரொம்ப இஷ்டம். எத்தேச்சையாக இருவரும் ரூமை விட்டு வெளியே வரும்போது சினேகமாய் சிரித்து, கொஞ்சம் என் படிப்பைப்பத்தி கேக்கும்.

கார்த்திண்ணா வேலைக்கெல்லாம் போனதாய் தெரியவில்லை. செல்லப்பா வாத்தியார் எங்கப்பாவிடம் பேன்க்குல பியூனாவது கிடைக்குமா என கேட்டது ஞாபகம் இருக்கிறது. உழைப்பாளி முதல்நாள் ரசிகர் மன்ற டிக்கட் செல்லையா டீஸ்டாலில் கிடைக்கும் என்றறிந்து அங்கு போக, வெளியே கார்த்திண்ணா சிகரட் பிடித்துக்கொண்டிருந்தது. முதல் தடவை பார்க்க ஒருமாதிரியாக இருந்தாலும், பிடிப்பதிலும் ஒரு ஸ்டைல் இருந்தது. “செல்லா, நம்மூட்டு பையன், என் அக்கவுண்ட்ல எழுதிக்க” என எங்கூட வந்த அஞ்சு பேருக்கும் சேர்த்து டீ சொன்னது. வீட்டுக்கு எதிரில் முள்ளுக்காடாய் இருந்த அய்யங்குளத்தை தெருப்பசங்களை விட்டு வெட்டச்செய்து கிரிக்கெட்டு விளையாட வைத்தது. “டெந்த்துல இது தேவையாண்ணேன்” என்ற அப்பாவின் உறுமலையும் மீறி அவ்வபோது ஓடுவேன் அய்யங்குளத்துக்கு. மிகசுமாராய் விளையாடும் நான், ஒருநாள் கார்த்திண்ணா பவுலிங் என்றதும் எதையோ நிரூபிக்க வீறு கொண்டு அய்யங்குளம் கரையில் வெட்டப்படாத முள்ளுச்செடிக்கு தூக்கியடித்து கிராண்ட்டட் சிக்ஸ் அடித்து, அண்ணா “பரவால்லியே, விள்ளாடறியே” என சொன்னதும் அவ்வளவு பெருமிதம்.

“இனிமேட்டு வியாளக்கெளமை பிருந்தாவனம் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போவோமுடா. சாமி கும்பிடுறோம், அந்த வாரத்துக்கு படிக்க டைம்டேபிள் போடுறோம்” என திடீரென்று என் உயிர்நண்பன் ஒரு தீர்மானத்தை முன்வைத்தான். ஒரு சிறிய ஆஞ்சநேயர் சன்னிதியும், பின்னாடி பிருந்தாவனம் என்ற பெயரில் நந்தியாவட்டை,செம்பருத்தி செடியுமாய் ஒரு சிறு தோட்டமும் நிறைந்த கோயில். ஒரு வியாழக்கிழமையில் பிரகாரத்தை சுற்றுகையில் கார்த்திண்ணாவை விஜிக்காவோடு பார்த்தேன். நல்லவேளை இருட்டில் என்னை பார்க்கவில்லை, அல்ல, நான் அப்படி நினைத்தேன். நார்த்தாமலை பூச்சொரிதலை முன்னிட்டு சூப்பர்பாய்ஸ் நடனக்குழுவுக்காக காத்திருக்கும் ஒரு பின்னிரவில், கார்த்திண்ணாக்கும் விஜிக்காக்கும் எப்படி லவ்வு என கார்த்திண்ணாவின் பங்காளிப்பய ஜோதி விவரித்ததை கிளுகிளூப்பாக கேட்டோம். திடீரென்று ஒரு நாள் விஜிக்காக்கு அறந்தாங்கியில் மாமன் உறவில் கல்யாணம் எனப்போய்விட்டது. அன்று ஏன் செல்லப்பா வீட்டில் இருந்து எங்களுக்கு பாயாசம் வந்தது என அன்று புரியவில்லை.

சயின்ஸ் டூசனில் கூடவரும் ராணிஸ்கூல் கோமதி எங்களுக்கு அடுத்த தெரு எனத்தெரிந்த பிறகு சும்மானாச்சிக்கு குறுக்கும் நெடுக்கும் அத்தெருவில் சைக்கிளில் போக ஆரம்பித்தோம். அந்த தெருவில் இருக்கும் மூவேந்தர் ஒயின்சின் உள்ளே ஒரு நாள் கார்த்திண்ணாவை பார்த்தேன். பக்கென்று இருந்தது. நான் கவனிக்குமுன் அது என்னை கவனிக்கக்கூடாதேயென்று என சைக்கிளை ஏறி மிதித்தேன். தர்மரின் தேர்ச்சக்கரம் டக்கென்று தரையில் விழுந்ததுபோல், கார்த்திண்ணாவின் மேல் இருந்த ஆதர்ச பிம்பம் உடைய ஆரம்பித்தது அன்றே. அதன்பிறகு, இரவு மட்டும் கார்த்திண்ணா ரூமில் இருந்து வரும் ஒரு மாதிரியான தம் வாசனை வருவதன் காரணத்தை யூகிக்க முடிந்தது.

அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அப்பா எட்டரை மணிக்கு நியுஸ் பார்த்துவிட்டு சாப்பிடலாமான்னு கேட்டுவிட்டு உட்கார்ந்த நேரம். எங்கள் பின்கதவில் நங்கென்று ஒரு பாத்திரம் இடித்து விழும் சத்தம். அப்பாவுக்கு முன்பே விஷயம் தெரியுமோ என்னவொ, ஏனோ கதவை திறக்கவில்லை. ஆனால் ஒரு ஒட்டுக்கேக்கும் தோரணையில் கதவின் அருகில் நின்றார். அவர் பின்னே நாங்கள். சீரிய இடைவெளியில் இன்னும் சில பாத்திரங்கள் வந்து விழுந்தன. செல்லப்பா வாத்தியார் “கார்த்தி, டேய்..கேசியர் வூட்ல இருக்காருடா..வேண்டாம்டா” என கெஞ்சலாக சொல்லிக்கொண்டிருந்தார். திடீரென்று உரத்தகுரலில் கார்த்திண்ணாவின் ஓலம். “மெட்ராஸ்லயே இருக்கன்னு சொன்னேன் கேட்டியா..இந்த வரப்பட்டிக்காட்டுல ஒரு வேல கிடைக்கல. நான் பாட்டுக்கு செவனேன்னு அங்கன கிடந்தேன்” என்று ஒரு அழுகையான குரல். புலம்பல் சற்று எல்லை மீற, அப்பா “மாடிக்கு போய் படிங்க சொல்றேன்” என எங்களை விரட்டிவிட்டார். அடுத்த நாள் காலை செல்லப்பா வாத்தியார், அப்பாவிடம் சன்னமான குரலில் “சாரி சார், லவ்ஃபெய்லியர்ல இப்படி பண்றான்” என மன்னிப்பு கேட்க, அப்பா “அதெல்லாம் சரி சார், ஃபேமிலி இருக்குற இடமா இல்லியா”என்பதும் நடந்தது.

பகலில் கார்த்திண்ணா அவ்வளவு பாங்காய் போகும், வரும். என் அப்பா, அம்மாவை கூச்சத்தில் ஏறெடுத்தும் பார்க்காது. ஆனால் ராத்திரியில் வேறு முகம் காட்டும். நைட்டு ஒன்னுக்கிருக்கலாம் என ரூமை விட்டு வெளியே வந்த ஒரு நாள் என்னைப்பிடித்துக்கொண்டது. அன்றைய கோலம் பார்க்க அவ்வளவு சிலாக்கியமாக இல்லை.”சிர்ராமு, உனக்கு புடிச்சதை படி, புடிச்ச வேலைக்கு போ, அப்பா,அம்மா யார் பேச்சையும் கேட்டுறாதே” என்றது. பயத்தில் ஒன்னுக்கிருக்காமல் ரூமுக்குள் திரும்பி போய்விட்டேன்.

ஒரு வேலை செய்தால் தெளிந்துவிடும் என ரெண்டு மாட்டை வாங்கி பின்னாடி கட்டிப்போட்டு, பால்கார ராஜகோபாலுடன் பார்ட்னர்சிப்பில் இரு என்றார்கள். அது கார்த்திண்ணாக்கும் வலித்தது, எனக்கும் வலித்தது. பலூன் பேகிஸ், ஃபன்க் விட்டு, ஸ்போர்ட் ஷூ போட்ட என் கார்த்திண்ணா இப்போது கொல்லைப்புற மாட்டுச்சந்து வழியாக மடித்துக்கட்டிய லுங்கியோடு மாட்டை தள்ளிக்கொண்டு வருவது காணச்சகிக்கவில்லை. பின்னிரவில் “இப்படி மாட்ட மேய்க்க விட்டுட்டீங்களேடா” என புலம்பும்.

சோசியல் பப்ளிக் பரிட்சைக்கு கிளம்பிக்கொண்டிருந்த ஒரு புதன்கிழமை கார்த்திண்ணாவை திருச்சி காஜாமலை டீயடிக்சன் செண்ட்டருக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். ”அங்கன ட்ரீட்மெண்ட்டு 3 மாசம்” என வூட்டுக்காரம்மா சொன்னதாக அம்மா சொன்னார்கள்.

அப்பாவுக்கு மாற்றல்,வேறு ஸ்கூல் என அதன்பிறகு நான் கார்த்திண்ணாவை பார்க்கவேயில்லை.

போன வருடம் லீவுக்கு ஊருக்கும் போகும் வரை.

குலதெய்வம் கோயிலுக்கு போகும் வழியில் ஊருக்கு போனோம். வடக்குராஜவீதி ராதா கபேயில் டிபனுக்கு நின்றோம். நாங்கள் இருந்த வீட்டுக்கு அடுத்த தெரு அது. ”சாப்பிட்டுட்டே இரும்மா, தோ வர்றேன்” என நாங்கள் இருந்த வீட்டுப்பக்கம் ஓட்டமாய் நடந்தேன். வீட்டு வாசல் தெரியும்போதெ வாசலில் சற்று கனத்த உருவமாய் ஒருவர். அது கார்த்திண்ணா என பார்த்தவுடன் யூகிக்க முடிந்தது. என்னை பார்த்தவுடன் லுங்கியை இறக்கிவிட்டு “சிர்ராமு தானே” என்று கண்கள் சிரிக்க சொன்னது. உள்ள வா என்றது. இல்லண்ணா இருக்கட்டும், வீட்டை ஆசையா பாக்கவந்தேன் என்றேன். முடி பரவலாய் கொட்டியிருந்தாலும், உடல் கனத்திருந்தாலும், கண்ணில் அந்த குறும்பு, spark போகவில்லை. கூட்டுறவு பேன்க்கில் பியூனாக இருப்பதாகவும், தனக்கு திருமணமாகி ரெண்டு குழந்தைகள் என்றும், செல்லப்பா வாத்தியார் சொந்த கிராமத்துக்கு சென்றுவிட்டார், தங்கச்சி ஈசுக்கு கல்யாணம் ஆனது பலவும் சொன்னது.

”நேரமாச்சுண்ணா, கெளம்புறேன்” என்றேன். சரி என்றது கார்த்திண்ணா.

வாசல் தெருவுக்கு வந்தபிறகு கார்த்திண்ணாவின் “ஒரு நிமிசம்” என்ற குரல். திரும்பி என்ன என்பது போல பார்த்தேன்.

“இப்ப எல்லாத்தையும் விட்டாச்சு சிர்ராமு”

கார்த்திண்ணா முகத்தில் எதையோ நிரூபித்த திருப்தி.

“சரிண்ணா” எனப் புன்னகைத்தேன். அதன் பிறகு வார்த்தை வராமல் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

உண்மையில் மனம் சற்று நிம்மதியாக உணர்ந்தது.

டிபனை முடித்து, சாந்தாரம்மன் கோயிலில் பூசை சாமான் வாங்கிட்டு போவோம் என வண்டியை திருப்பினோம். மூவேந்தர் ஒயின்ஸ் இருந்த இடத்தில் இப்போது கரும்பச்சை நிற போர்டில் டாஸ்மாக். சைடு சந்தில் கர்ட்டன் போட்டு பார் போல இருக்கும் போல.

கர்ட்டன் திறந்த ஒரு நொடியில் உள்ளே கார்த்திண்ணா போல ஒரு உருவம்.

சடாரென்று பார்வையை திருப்பினேன். அது கார்த்திண்ணாவாக இல்லாமலே போகட்டும்.

சிலசமயம் நமக்கு பிடித்தவர்களை, பிடிக்காத கோலத்தில் பார்க்க மனசுக்கு பிடிப்பதில்லை.

++++++++++++++

113 comments:

 1. நான் ரெண்டாவது, படிச்சிடு வந்து பின்னோடம் போடுறேன்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் ! தொடர்ந்து எழுதுங்க and Please remove the word verification for Commenting

   Delete
  2. நன்றி இளா..I have removed it..அதெல்லாம் இருக்குன்னே இப்பத்தான் தெரியும் ;)

   Delete
  3. விஜயகுமார்..வந்தததுக்கு நன்றி..சர் ரைட்டு வெய்ட் பண்றேன் :)

   Delete
 2. .... ஒண்ணு மட்டும் நிச்சயம்! நீங்க சாதாரண ஆள் இல்லை கில்லாடிதான்! ஆழமான கதை! நிறைய எழுதுங்க! வாழ்த்துகள்!
  -@Thiru_navu

  ReplyDelete
  Replies
  1. நன்றி திருனாவுக்கரசு..நிஜமாவே ஊக்கமா இருக்கு..

   Delete
 3. முதல் கதை, கண்டிப்பா மொக்கையாகத்தான் இருக்குமென்று நினைத்தேன். அதனாலேயே என்னவோ ரொம்ப நல்லா இருதந்து.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. என்னா முன்முடிவுடா :)) வாழ்த்துகளுக்கு நன்றி..

   Delete
 4. பழைய நினைவுகள்..புதுக்கோட்டை...

  ReplyDelete
  Replies
  1. அட புதுக்கோட்டையா நீங்க? ட்விட்டர்ல இருக்கீங்களா என்ன?

   Delete
  2. பொழுது போகவில்லை என்றால் Twitter வந்து வேடிக்கை மட்டும் பார்ப்பேன்...உங்களையும் பின் தொடர்கிறேன் :)

   Delete
  3. ஓ அப்படியா அருண், மிக்க நன்றி :) புதுக்கோட்டைக்காரரை பார்ப்பது ஒரு சந்தோஷம் தான் :)

   Delete
 5. Very very nice :-)I can see Raju Murugan's style, in a good way though ;-) Needs a little bit of editing in the middle to make it crispier :-)
  amas32

  ReplyDelete
  Replies
  1. Thanks a lot, M'am :) Sure, I see that it can be crispier..I hope I get it over time :)

   Delete
 6. மிக தேர்ந்த எழுத்து. நல்ல வாசிப்பாளியாக நீங்கள் இருக்க வேண்டும்.

  //எம்பதுகளின் நீள/கட்டை கிருதா, எழுபதுகளின் பெல்பாட்டம். அறுபதுகளின் செதுக்கிய மீசை.//

  இந்த வரிகள் கண்முன்னே அவர் தோற்றத்தைக் கொண்டு வருகிறது.

  //ஒரு ஹைஹிப் பேண்ட்டும், விஜய் “ஊர்மிளா” பாட்டில் போட்டுவருவது போன்ற ப்ரவுன் டிசைன் சட்டையும், என் அப்பா “அதுல்லாம் உழைக்காது” என்று மறுத்த பாலியஸ்டர் இழை வெள்ளை பெல்ட்டும், வெள்ளையும் சிவப்புமாய் ஒரு ஃபீனிக்ஸ் ஷூவுடன் //

  இதுவும் அப்படியே...


  //பம்மிப்பதறி // அந்த குறிப்பிட்ட சூழலைப் படிக்கும்போது இந்த வார்த்தை சரிவரப் பொருந்துகிறது, மிக ரசித்தேன்.


  //“நல்லாருக்கியா ஜெயராமு” எனப் புன்னகைத்தது. “நான் ஸ்ரீர்..” என சொல்வதற்குள்// - இதையும் ரசித்தேன். எத்தனை வேகமாக கார்த்தி சென்றார் என்பதை இந்த வரி கண்முன் கொண்டுவருகிறது.


  சில பிழைகள்:

  //என ஒரு மார்க்கமா இருந்தார்.// - மார்க்கமாக. மார்க்கமா என்பது பேச்சு வழக்கு.

  //சம்பாஷனை // சம்பாஷணை

  //விக்ணேஷ்// விக்னேஷ்

  //இணைபுரியா கோவமும் வந்த்து. // அது ’இனம்புரியா’ கோவம் அல்லவா?


  /படிக்கனும்// படிக்கணும்.


  இவை போக //வந்த்து.// //விட்ட்து// இப்படி சில டைப்போக்கள். சரிபார்த்து போஸ்டுங்கள்.


  1. மாக்ஸின் கார்க்கிதானே கம்யூனிசப் பெயர். அது ஏன் கார்த்தி என்று சொல்லிவிட்டு கம்யூனிசம் என்றீர்கள். ஏதேனும் குறியீடா என்ன?


  2. //என் ஆதர்ச உடையில் நின்று கொண்டிருந்தது.// //ஊர் திரும்பும் விக்ணேஷ் கணக்காய் நடுவகிடு எடுத்து ஸ்டைலாக இருந்தது// - ஏன் கார்த்தியை அஃறிணையில் குறிப்பிடுகிறீர்கள்?

  கடைசி வரி நச். நல்ல கதை சொல்லி ஒருத்தன் உங்களுக்குள்ளே தூங்கிக் கொண்டிருக்கிறார். சபாஷ்!!

  ReplyDelete
  Replies
  1. கரெக்சன்களுக்கு மிக மிக நன்றி..இன்றுக்குள்ளேயே செய்து விடுகிறேன்..:)

   Delete
  2. 1. பரிசலண்ணே, உண்மையில் கார்க்கி இன்ஸ்பிரேசனில் கார்த்தி என பெயரிடப்பட்ட அண்ணன் இருந்தது உண்மையே. அப்பெயர் திரிதலில் உள்ள ஒரு சிறுநகரத்தன குறியீடு, ஒரு அறியாமை எனக்கு பிடிக்கும். ஆனால், படிப்பவருக்கு உங்களைப் போல நியாயமான கேள்வி வரலாம் என்பதால் கீழ்க்கண்ட வரியை சேர்த்துள்ளேன்.

   ”கார்க்கி எப்படி கார்த்தி என மறுவியது போன்ற கேள்விகள் வராத, அறிஞர் அண்ணாவை தவிர வேறு அறிஞரை அறியாத வயது, காலக்கட்டம் அது.”

   2. கார்க்கியை அஃறிணையில் குறிப்பிடுவதும் எங்கள் பக்க சிறுநகர பழக்கம் தான். கோவை,திருப்பூரில் அப்படி இல்லையோ? வீட்டில் மூத்த அண்ணன் அல்லது அக்கா எப்பவும் அது, வரும், போகும் தான் :)

   கதைசொல்லியை முடிந்தவரை தட்டியெழுப்ப முயற்சிக்கிறேன். என்ன சட்டி-அகப்பை பிரச்சனை தான் ;)

   Delete
 7. //கொஞ்சம் கிளீஷே...கொஞ்சம் நீட்ஷே..//

  இதுவே நீங்கள் எப்பேர்ப்பட்ட ரசனைக்காரர் என்று சொல்கிறது! :)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி..எப்படியோ தோணுச்சு :)

   Delete
 8. //நல்ல வாசிப்பாளியாக //

  வாசிப்பாளனாக என்று திருத்திக்கொள்ளவும். :))

  ReplyDelete
 9. 1. போன பின்னூட்டத்தைப் பார்த்து ‘அதே மாதிரி என்னோட எழுத்துப் பிழைகளையும் நீங்களே திருத்திக் கொள்ளவும்’ன்னு சொன்னீங்கன்னா... பிச்சு பிச்சு!!

  2. வெப் ஐடியை குஷ் ஆன்லைன்னு படிச்சு, குஷ்பு ரசிகர் போலன்னு நினைச்சுட்டேன். இப்பதான் கவனிச்சேன்.. அது குஷி ஆன்லைன்.

  :)

  ReplyDelete
  Replies
  1. 1. உங்களப்போய் அப்படி சொல்லமுடியுமா :)

   2. குஷி என் குட்டிதேவதைன்னு உங்களுக்கு தெரியுமே.. இருக்கும் ப்ளாக் பெயர் பஞ்சத்தில் இதை விட சிம்பிளாக, ஸ்பெல் செய்ய வசதியாய் எதுவும் மாட்டவில்லை ;) இதில் இன்னொரு வசதி, நாளப்பின்ன டொமைன் நேம் வாங்கினல் குஷிஆன்லைன் ஆக்கிடலாம் ;)

   Delete
 10. What a beautiful story Natz. Felt like i was watching a movie! very descriptive and you catch the reader to visualize so perfectly with your writing. Loved it and heavy hearted! Have u seen Karthiaana after?

  ReplyDelete
  Replies
  1. I did not..அப்படியொருத்தர் இருந்தா தானே..just kidding ;)

   Delete
 11. Replies
  1. நன்றி அருன் ஆதவன். மறுபடி வாருங்கள் :)

   Delete
 12. அருமையான எழுத்துக் கோர்வை

  from phone

  ReplyDelete
 13. அருமையான எழுத்துக் கோர்வை

  from phone

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சுதா..:)

   Delete
 14. முத பால்லயே சிக்ஸ்... ”கிராண்ட்டட்” !! வாழ்த்துகள்!!

  ட்விட்டுகளிலேயே உங்க ரசனை பளிச்சிட்டது,அது இங்கேயும் நல்லா வெளிப்பட்டிருக்கு...

  எனது பத்தாங்கிளாஸையும், பரட்டிச்செட்டி கம்மாய் கிரிக்கெட்டையும் ஞாபகப்படுத்தியது

  ஜாதகத்தை நம்பினால் ஐடி படித்தாலும் மாடு மேய்க்க வேண்டியதுதான்ற கதையின் அடிநாதம்.. இது ஒரு பகுத்தறிவு பிரச்சாரக்கட்டுரை என்ற அளவில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!! ;-))

  தொடர்ந்து கலக்குங்க பாஸு!!

  @gpradeesh

  ReplyDelete
  Replies
  1. ப்ரதீஷ் அண்ணே..மிக்க நன்றி. பகுத்தறிவுன்னு வெச்சுக்கிட்டு எழுதல..அது தோணுச்சுன்னா அவ்வ் அத ஒரு பின்நவீனத்துவ குறியீடுன்னு வெச்சுக்கங்களேன் ;))

   Delete
 15. நல்லாருக்கு பாஸ் :) :)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி..Hope your display name is not by my post ;)

   Delete
 16. அருமை அருமை ரசனை மிகு அருமை வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி..மறுபடி வாருங்கள் :)

   Delete
 17. அருமை :)) ரொம்ப ரசிச்சு படிச்சேன்.
  தொடர்ந்து எழுதுங்க‌ :) @dhivyadn

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி திவ்யா..ட்விட்டர்ல அவ்வளவா காண்றதில்லையே இப்ப :)

   Delete
 18. உங்களின் ஆழ்ந்த கவனிப்பு எழுத்துகளில் தெரிகிறது. கண்முன்னே 1980 - காலகட்டத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள் அண்ணா. அருமை. வாழ்த்துகள். :-)@iKarupiah

  ReplyDelete
  Replies
  1. நன்றி கருப்ஸ்..1980ஸா, அவ்வ்..அவ்ளோல்லாம் நான் ஓல்ட் இல்லை. இது 90ஸ் காலக்கட்டம் தான் ;)

   Delete
 19. க்ளாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

  முதல் முயற்சின்னு சொல்லாதீங்க! தேர்ந்த நடைதான் உங்களுது!

  கதைக்குள் நிறைய கதைகளுக்கான களங்கள் இருக்கறது தெரியுது. நிறைய எழுதணும் நீங்க!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கிரி..உங்கள் எழுத்து வீச்சு நானறிவேன் என்பதால் your commments matter a lot to me..முடிந்தவரை நிறைய எழுதுறேன்..

   Delete
 20. திருமாறன்.திMay 21, 2012 at 12:45 PM

  நீங்க பல கமெண்ட்டு டிவிட்டர்லயே வேஸ்ட் ஆயிடுச்சுன்னு கவலப்பட்டதால இங்கயும் ஒண்ணு போடறேன் ;)) ஆஹா,அற்புதம்,அட்ராசக்க...தொடந்து எழுதுங்க...நம்ம கூட அரட்டைய அடிச்ச நட்டு இவ்வளவு பெரிய எழுத்தாளரா வருவாருன்னு தெரியாம போச்சு...ரொம்பப் பெருமையா இருக்கு....வாழ்த்துகள்! :)))

  ReplyDelete
  Replies
  1. திருண்ணே..உங்கள் ரசனைக்கு, சென்ஸ் ஆஃப் ஹ்யூமரின் பெரும் ரசிகன் நான்..உங்க வாயால இதக்கேக்குறது ஜாலியா இருக்கு :))

   Delete
 21. அண்ணன் திரு சொன்னது போல பல கமெண்டுகள் டிவிட்டரில் சென்றுவிட்டன! உங்கள் எழுத்து பயணத்தின் முதல் பேருந்தில் நான் பயணித்தேன் என்ற சாட்சி தான் இந்த கமெண்ட்! கலக்குங்க சித்தப்பு! :)

  ReplyDelete
  Replies
  1. நேம்சேக் தம்பி..ஒருவிதத்தில் ஓலைக்கணக்கன் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் :) மிக்க நன்றி..சரி, வீட்ல யூத்தா கடைசி சித்தப்புன்னு வெச்சுக்கலாமா ;)

   Delete
 22. நன்று ............. எனக்கு என் பள்ளிப்பருவ ஹீரோ வைத்தியண்ணாவை நினைவூட்டியது

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி..நம் எல்லோர் வாழ்வில் பல அறிஞர் அண்ணாக்கள் உண்டு ;)

   Delete
 23. Very well written. Couple of things reminded me of something that happened late 80s, early 90s. Don't make me speak :)

  ReplyDelete
 24. Replies
  1. Thanks a lot Siva. Nice to hear from a blog veteran :)

   Delete
 25. மிக அழகான நடை...மிகவும் ரசித்தேன். தொடர்ந்து எழுதுங்கள்.

  //தன் சில்வர் ப்ளசை சைடு ஸ்டேண்டு போட்டு நிறுத்தி அதில் சாய்ந்து நின்று...// - ஸ்கூட்டர் போல் கையில் கியர் உள்ள அந்த வண்டியை அதை உருவாக்கிய கம்பெனியே மறந்திருக்கும்.. ஹ ஹா. ரசித்தேன்

  //வாழைமரத்து ஜவுளிக்கடையில் 1.60 கட்பீசில் எடுத்த குதிகால் தெரியும் கால் சராயுடன்// - சிறிய விஷயத்தையும் ரசனையாய் சொன்ன பாங்கினை ரசித்தேன்... இன்னும் சொல்லவேண்டுமென்றால் எல்லாவற்றையுமே ரசித்தேன். நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  டெயில்பீஸ் : பரிசலுக்கு வந்த சந்தேகம் எனக்கும். 'மாக்சிம் கார்க்கி' தானே கம்யூனிச பேர்?? இவர் 'மாக்சிம் கார்த்தி' என்று பேர் வைத்து அதை கம்யூனிச பேர் என்கிறாரே. செல்லப்பாவின் அறியாமையை சுட்டுகிறீர்களா??

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு :)

   ஆம்,ஒரு வித சிறுநகர பெயர்த்திரித்தல் கலாச்சாரம், அறியாமை குறியீடு தான். குழப்பம் வேண்டாம் என கதையில் இரண்டாவது லைனில் ஒரு இடைச்செருகல் சேர்த்துள்ளேன்.

   Delete
 26. நல்ல பாத்திர விவரணைகள். எல்லோரையும் நேரில் பார்ப்பது போல ரு ஃபீலிங். வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி டோண்டு சார்..ஒரு ப்ளாக் வெட்டரனிடமிருந்து இதைப்பெறுவதில் மிக மகிழ்ச்சியடைகிறேன் :)

   Delete
 27. anna.. super... Too bad that you showed this to me quite late. Loved every bit. Tamizh font innum download pannala... aduthadutha comments laam tamizh la pannaren.

  ReplyDelete
  Replies
  1. Thanks a lot Deeps..It's pretty easy. You don't need fonts. Just go here http://www.google.com/transliterate and type in english. It will autoconvert to tamil :)

   Delete
 28. Superbda Sriram!! I went back to 1992.. innum thirumbala.. very nice! Did you really meet Karthik?

  ReplyDelete
  Replies
  1. Thanks Rama :) The premise is true, not necessarily the events. No I didn't meet Karthi but met Chellappa :)

   Delete
 29. உருப்புடாத அப்துல்லாவே பிளாக்குக்கு வந்து 5 வருசம் ஆச்சு. நம்ம மேனேஜர்வீட்டு புள்ளை ரொம்ப லேட்டா வந்துருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. அண்ணே..ரெம்ப லேட்டுத்தான் ஒத்துக்கறேன்..அதுக்காக நீங்க உருப்படலையா? போங்கண்ணே :)

   Delete
 30. நட்டு, நெஜமாவே மொதோ பால்ல சிக்ஸர் அடிச்சு ஆரம்பிச்சிருக்கீங்க...
  அருமையான விவரணை. தொடர்ந்து கலக்குங்க

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம்..மிக மிக நன்றி வந்ததுக்கு :)பஸ்ஸ் போனபிறகு உங்களை பார்க்க முடியல..பாப்பா நலம் தானே :)

   Delete
 31. Very nice. Can't believe it's ur first post. But one thing want to ask, why the smoking is stylish and drinking is bad for sriram :)). Don't say need to ask sriram only :))

  Btw Wats ur twitter handle?
  Regards
  Singai Nathan

  ReplyDelete
  Replies
  1. Thanks a lot Singai Nathan :) Btw, Sriram drinks occasionally ;) My twitter handle is @NattAnu

   Delete
 32. dont tell me this is your first attempt neat flow. very good writing thanks sharing the link.

  ReplyDelete
  Replies
  1. Avv, It's my first attempt seriously :) I should thank you for taking the time to read and commenting :)

   Delete
 33. Very nice all the best for other padhivugal.. enjoyed every bit of your well attempted vattara language.

  ReplyDelete
  Replies
  1. Thanks a lot Uma..I know you would like it :)

   Delete
 34. பலர் மேலேயும், ட்விட்டரிலயும் கேட்ட ஒரு கேள்வி அது கார்க்கி தானே, ஏன் கார்த்தி என்று.

  உண்மையில் கார்க்கி இன்ஸ்பிரேசனில் கார்த்தி என பெயரிடப்பட்ட அண்ணன் இருந்தது உண்மையே. அப்பெயர் திரிதலில் உள்ள ஒரு சிறுநகரத்தன குறியீடு, ஒரு அறியாமை எனக்கு பிடிக்கும். கம்யூனிசம் நன்கு பரவிய புதுகையில் நெருடா, வால்கா எனப்பல பெயர்கள் ஹவுஸ்ஹோல்ட் பெயர்கள் தான்.
  ஆனால், படிப்பவருக்கு இது நியாயமான சந்தேகம் என்பதால் கதையின் ரெண்டாவது வரியாக இதை சேர்த்துள்ளேன்.

  “கார்க்கி எப்படி கார்த்தி என மறுவியது போன்ற கேள்விகள் வராத, அறிஞர் அண்ணாவை தவிர வேறு அறிஞரை அறியாத வயது, காலக்கட்டம் அது. ”

  ReplyDelete
 35. நட்ராஜ், முதல் முயற்சிக்கு ரொம்பவே நல்லா இருக்கு. நாஸ்டால்ஜி இயல்பாவே மனிதர்களை நெகிழ வைக்கற ஒரு விஷயம். உங்க பலம் நல்ல, நுணுக்கமான விவரணைகள். தொடருங்கள் நட்ராஜ்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி லக்‌ஷ்மி..முடிந்தவரை தொடருகிறேன் :)

   Delete
 36. ஆமா, குஷி ஆன்லைன்னு நீங்க பேரு வச்சுட்டீங்களே, நாளப்பின்ன குஷி மேடம் எழுத வந்தாங்கன்னா அவங்க டொமைன் நேமிற்கு என்ன செய்யுவாங்க பாவம்? :)) )

  ReplyDelete
  Replies
  1. சொத்தையே கொடுக்கப்போறேன்.டொமைன் நேம் என்ன? Besides, அப்போ ப்ளாக் இருக்குங்கிற்ங்க ;)

   Delete
 37. Like the above comment by you Sriram.. )

  ReplyDelete
 38. நல்ல துவக்கம், வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள் :)

  ReplyDelete
 39. கதை நன்றாக இருந்தது, அருமையான நடை.. வாழ்த்துகள்

  சில்ல வரிகள் படிக்கையில் ஏனோ எனக்கு மணிஜி அண்ணனின் சில ஸ்டேடஸ் மெசேஜ்கள் நியாபகத்தில் வந்து சென்றது,,

  ReplyDelete
 40. //பஸ்ஸ் போனபிறகு உங்களை பார்க்க முடியல..பாப்பா நலம் தானே :)//
  நட்டு, இப்போ அதே மொக்கையை கூகுள் பிளஸ்ஸில் போட்டுக்கிட்டு இருக்கேன், உங்களை சர்க்கிளில் சேத்துட்டேன்.

  ஸ்ரீஹிதா நலமா இருக்கா

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 41. ஹாய் ஸ்ரீராம்....

  முதல்ல ஷமிக்கணும்! ஃபேவரிட் பண்ணது ஆகல போல! இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேன்...

  //.....// எவ்வளவோ இருக்கு இப்படி எடுத்து Quote பண்ண... முதல் சிறுகதையா? க்ளாஸ்! ரொம்ப பிடிச்சிருக்கு..

  நாம எல்லோருமே சின்ன வயசுல யாரோ ஒருத்தர பாத்து வியந்து, அவரை உள்வாங்கி "நாமும் அவரை மாதிரி" ஆகணும் ன்னு அவரோட ஸ்டைல் இத்யாதி இத்யாதிகளை மறைமுகமா நோட் பண்ணி தனியா செஞ்சு பார்ப்போம்! இதை அழகா ஒரு கதையா சொல்லியிருக்கீங்க! சந்தோஷமா இருக்கு படிச்சு முடிச்சதும்!

  ஒண்ணு சொல்றேன், கண்டிப்பா எல்லார்குள்ளேயும் இருக்க ஸ்ரீராமையும், கார்த்திண்ணாவையும் ஒரு நிமிஷம் மனத்திரைல கொண்டு வரவெச்சிடும் எழுத்துண்ணா..


  கடைசியா,
  அடடே.. இத நான் எழுதியிருக்கணுமே கார்க்கிக்காக'னு தோண வெச்சிடுச்சு பாஸ்...

  வாழ்த்துகளும் நன்றிகளும்!

  ReplyDelete
  Replies
  1. மிக மிக நன்றி உங்கள் வார்த்தைகளுக்கு..:) ரொம்ப ரசிச்சு சொல்லியிருக்கீங்க :)

   கார்க்கிக்காக நீங்க இதென்ன, பெரிய காவியமே படைக்கலாம் :)

   Delete
 42. மிகவும் மதிக்கும் ஒருபக்கம் ஸ்ரீதர் கமெண்ட் போட்டிருப்பதாக மெயில் வந்துருக்கு, ஆனால் பப்ளிஷ் ஆகவில்லை ஏனோ..அது இங்கே..

  ஸ்ரீதர் நாராயணன் has left a new comment on your post " கார்த்திண்ணா ”நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் ...":

  அருமையாக இருக்கிறது. சூப்பரா கதை சொல்றீங்க. பிரமாதம். :)

  ReplyDelete
 43. anna kathai super, padicha antha 6nimidamum nanum sirramaai irunthen :) ! Unga twithandle sollunga

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி.. என் ஹாண்டில் @NattAnu :)

   Delete
 44. This comment has been removed by the author.

  ReplyDelete
 45. anna kathai super, padicha antha 6nimidamum nanum sirramaai irunthen :) ! Unga twithandle sollunga

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி :) என் ஹாண்டில் NattAnu

   Delete
 46. முதலில் கதாராசியர் ஆனதற்கு வாழ்த்துகள். :) எழுதனும்னு நெனைச்சு அதைச் செயல்படுத்துறதே முதல் வெற்றிதான்.

  எதிர்பார்த்த முடிவா இல்லையான்னு சொல்றத விட... அந்த முடிவால என்ன சொல்ல வந்தீங்கங்குறது பாராட்டுக்குரியது.

  கதைக் கோர்வை கைவந்திருக்கு. பாத்திர அறிமுகமும் கைவந்திருக்கு. இன்னும் சிறப்பா எழுது நல்ல பெயர் பெற என்னுடைய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜிரா உங்க ஊக்கத்துக்கு..முடிஞ்சவரை எழுதறேன் :)

   Delete
 47. Excellent Narration... We are really proud of you and looking forward to your next story. It is going to Bodi, Tanjore, Trichi or Agra next....

  ReplyDelete
  Replies
  1. Thanks Girls :) I have to go easy on my nostalgic trip, as basically my supply is limited ;)

   Delete
 48. ட்விட்டர் நண்பர் ’ரேணிகுண்டா’ குணாவின் கமெண்ட்டுகள்..

  Mr.ரோஃபல் மேக்ஸ்™ ‏@g4gunaa
  @NattAnu நிஜமா முதல்பதிவுன்னு நம்ப முடியலை சகா.. மிக பிரமாதம்.. ரொம்ப ரசித்தேன்..

  Mr.ரோஃபல் மேக்ஸ்™ ‏@g4gunaa
  @NattAnu கிளைமாக்சை முடித்திருக்கும் விதம் உங்களுக்குள்ளிருக்கும் தேர்ந்த கதைசொல்லியை வெளிச்சமிட்டு காட்டுகிறது.. தொடர்ந்து எழுதுங்க சகா..

  Mr.ரோஃபல் மேக்ஸ்™ ‏@g4gunaa
  சமிபத்தில் இணையத்தில் நான் வாசித்த சிறுகதைகளில் மிக பிடித்தது- "கார்த்திண்ணா" by @NattAnu

  ReplyDelete
 49. ட்விட்டர் சூப்பர்ஸ்டார் தோட்டாவின் கமெண்ட்டுகள்.

  ஆல்தோட்டபூபதி ‏@thoatta
  அச்சு ஏறக்கூடிய தரத்தில் @NattAnu 'வின் முதல் சிறுகதை " கார்த்திண்ணா " # இப்போதான் படித்தேன்;) வாழ்த்துகள் சார் ;)))

  ஆல்தோட்டபூபதி ‏@thoatta
  @NattAnu செம நடைங்க, ஒப்பிடு பிடிக்காது, இருந்தாலும் சொல்றேன், சொல்வனம் சுகா மாதிரி இருந்துச்சு :)

  ReplyDelete
 50. பதிவுலக இரட்டையர்கள் லக்கியதிஷாவின் கமெண்டுகள் டிவிட்டரில்..

  அதிஷா ‏@athisha
  @NattAnu பாஸ் சிறுகதைலாம் பட்டைய கிளப்புதே! ;-)

  luckykrishna ‏@luckykrishna
  @NattAnu கதை நல்லாருக்கு. கதாசிரியர் பேசுறதைவிட பாத்திரங்கள் அதிகமா பேசுனா நலம் :-)

  ReplyDelete
 51. பிரபல பதிவர்/ட்வீட்டர் கார்க்கியின் கமெண்டுகள் ட்விட்டரில்..

  கார்க்கி ‏@iamkarki
  வர்ணைனக்ள் உங்க வயசு யூகிக்க ஏதுவா இருக்கு.. அளவ மட்டும் கம்மி பண்ணியிருந்தா இன்னும் இம்ப்ரஸ் பண்ணியிருக்கும்.
  பொதுவா இந்த மாதிரி கதைகளை ஜமுனா அக்கா, ராணியக்கான்னு இருக்கும். கார்த்தியண்ணா என்ற கோணம் ஃப்ரெஷ்..
  இப்பதான் எழுத வந்திருக்கீங்க.. சோ, செம ஸ்டாக் இருக்கும் போல.. ஃபார்ம்ல இருக்கும்போது தட்டி தேத்துங்க..எழுத்துக்கலை வசப்பட்டிருக்கு

  ReplyDelete
 52. நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர்,பதிவர்,ட்வீட்டர் சொக்கனின் மோதிரக்குட்டும், அதற்கான சுவாரசிய மறுமொழிகள்..

  என். சொக்கன் ‏@nchokkan
  ரசனைக்கார @NattAnu எழுதிய ரசனையான சிறுகதை, சுஜாதா பரம்பரை, Welcome to the club

  amas32 ‏@amas32
  What an honour so jealous:) RT @nchokkan ரசனைக்கார @NattAnu எழுதிய ரசனையான சிறுகதை, சுஜாதா பரம்பரை, Welcome to the club http://kushionline.blogspot.ca/2012/05/blog-post.html

  மினிமீன்ஸ் ‏@minimeens
  சொக்கா எனக்கில்லை RT @nchokkan ரசனைக்கார @NattAnu எழுதிய ரசனையான சிறுகதை, சுஜாதா பரம்பரை, Welcome to the club http://kushionline.blogspot.ca/2012/05/blog-post.html

  ReplyDelete
 53. மேலும் பல ட்விட்டர் நண்பர்களின் கருத்துக்கள்..

  தமிழ் திரு ‏@krpthiru
  இவரின் @NattAnu முதல் சிறுகதையா என்று ஆச்சர்யமூட்டுகிறது ...அசத்தல் ! http://kushionline.blogspot.in/

  altappu ‏@altappu
  கார்த்தீண்ணா.. அருமை

  தல தளபதி ‏@Prabu_B
  செம ! RT @NattAnu: பிளாக் ஆரம்பிச்சிருக்கேன். சிறுகதை மாதிரி ஒன்று போட்டுருக்கேன்.பிடித்திருந்தால் சொல்லவும் http://kushionline.blogspot.ca

  கிரி ராமசுப்ரமணியன் ‏@rsGiri
  @NattAnu 18ந்தேதி எழுதின பதிவுக்கு 21’ஆம் தேதிக்குள்ற 32 பின்னூட்டம் வாங்குவது எப்படி? 16/08/2008’ல எளுதினதுக்கே நாங் இன்னும் வாங்லை!

  கிரி ராமசுப்ரமணியன் ‏@rsGiri
  "கார்த்தியண்ணா" - ஒரு ரசனைக்காரரின் நச் ஸ்டோரி! http://kushionline.blogspot.in/2012/05/blog-post.html #fb via @NattAnu

  Pradeesh ‏@gpradeesh
  முதல்பால்லயே சிக்ஸர்!! ;-)) RT @nattanu கார்த்திண்ணா http://kushionline.blogspot.com/2012/05/blog-post.html?showComment=1337451359575#c4338965378703756933

  திரு ‏@thirumarant
  @NattAnu என்னத்த சொல்றது...மொத பால்லயே சிக்ஸர் அடிச்சிட்டீர் ஓய்....செம

  திரு ‏@thirumarant
  @NattAnu சீரியஸ்ஸா பாஸ்.... ரொம்ப நல்லாயிருந்தது...அதுவும் அந்த வர்ணனைகள்...

  ரகு ‏@rAguC
  @NattAnu 80-90களின் வாழ்வு அப்படியே பிரதிபலித்தது கண்முன்! ஒரு சிறுகதை, எந்த தேக்கமும் இல்லாமல்! அருமை !

  ரகு ‏@rAguC
  @NattAnu நிச்சியமா இல்ல பெரும்பாலும் இத்தகைய முயற்சில தேக்கம் எட்டி பாத்துரும்,ஆனா இது அப்படி இல்ல,வேற யாரையும் கூட கேட்டு பாருங்க :)

  ReplyDelete
 54. மிக மிக மதிக்கும் கட்டிப்போடும் நடைக்கு சொந்தக்காரரான ‘உருப்படாதது’ நரேனின் கருத்து ட்விட்டரில்..

  narain ‏@narain
  @NattAnu முதலில் வாழ்த்துகள். நாஸ்டால்ஜியா செம. முடிவு ஒரு மாதிரி யூகிக்க முடிஞ்சாலும் presentation அசத்தல். கண்டினியூ..... all the best.

  ReplyDelete
 55. லேட்டா போட்டாலும் லேட்டஸ்டா போடுறா உன் உபிச :) பிடித்தவர்கள் பிடித்த வேலையை செய்வது ரொம்பவே பிடித்துப் போகிறது :) தொடரட்டும் அண்ணாத்த :)

  ReplyDelete
  Replies
  1. இப்பத்தான் இந்த ப்ளாகுக்கு ஒரு களையே வந்துருக்கு, நன்றி உபிச :)

   Delete
 56. சிலர் கமெண்ட் போட முடியவில்லை என்கிறார்கள். இது டெஸ்ட்..

  ReplyDelete
 57. "இன்னும் அடிக்கடி/நிறைய எழுதுங்க!!" (அப்படின்னு மட்டும் சொல்லிக்கறேன் ஏன்னா நான் சொல்ல நினைக்கறத எல்லாம் எல்லாரும் சொல்லிட்டாங்க.. அதிகமா சொல்லாதது இது ஒண்ணு தான்)

  ஒண்ணே ஒண்ணு புரியல, விஜி வேறு ஊருக்கு போனது சொந்தக்காரர் கல்யாணத்துக்கு தானே?! அதுக்கே எதுக்கு பாயசம்? (நினைச்சு பார்க்க ஆனா என்னவோ போல் இருக்கு.. பையன் காதல் ஒழிஞ்சதுன்னு ஒரு நிம்மதி இருக்கலாம், அதுக்காக கொண்டாடணுமா என்ன பாயசம் வெச்சு.. :‍-| இல்ல நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேனா..)

  ReplyDelete
  Replies
  1. விஜிக்காக்கு தாங்க கல்யாணம்..:) கதை பிடிச்சுதோ?

   Delete
 58. This comment has been removed by the author.

  ReplyDelete
 59. Boss... I ve not completed reading the story yet. The very mention of "siirrram" made me jump my feet to post a comment,.Kudos.Lemme get back to the rest of the story now.

  ReplyDelete
  Replies
  1. Thanks Vijay..So how was the story? You liked it :)

   Delete
 60. awesome siirram...! gently touching our soul and tuning and stimulating the pain stimulus ... hmmmm! கார்த்திண்ணாவ கேட்டதா சொல்லுங்க அடுத்த தடவ பாத்தாக்க !

  ReplyDelete
 61. pinitinga nanba..unga puniyathula brindhavanam stop ku yen apdi per vanthuthunu therunjukiten.....pudukkottaya kannu munadi nippatitinga .....super boss

  ReplyDelete

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)