Monday, September 24, 2012

மூக்கால பாடும் ராஜா சார்..


இண்டு இடுக்கில்லாமல் நிறைந்திருக்கும் அரங்கம். ஆரம்ப முஸ்தீபுகள் முடிகிறது. வெள்ளுடை தரித்த உருவம் மெல்ல நடந்து மேடை நடுவில் இருக்கும் ஹார்மோனியம் முன்பு உட்காருகிறது. முன்னே ஒரு மைக். ஒரு வார்த்தை பேசவில்லை. வணக்கமில்லை. ஹாலில் “சிவசக்த்யா யுக்தோ யதிபவதி” என சன்னமான குரல் கேட்கத் துவங்குகிறது. காத்திருந்தாற்போல் ஆர்ப்பரிக்கிறது அரங்கம்.

இதை ராஜாவின் எந்த கச்சேரி/விழாவுக்கும் நீங்கள் தொடர்புப்படுத்திக் கொள்ளலாம்.

6 மணிநேர டெலிகாஸ்ட்டை “தென்றல் வந்து” வருது வருது வந்துடுச்சு என நம்மை ஏங்கவைத்தே சம்பாதிக்கின்றன சேனல்கள்.  தோனியின் “தாவித்தாவி” கேட்டால் +2வில் மார்க் குறைந்ததெல்லாம் ஞாபகம் வந்து கண்ணீர் முட்டுகிறது. NEPV ’வானம் மெல்ல’வில் ராஜா குரல் கேட்கும்போது தான் ஆல்பம் முழுமை பெற்று “என்ன குரலுய்யா” என சிலாகிக்க முடிகிறது.

”என்னய்யா குரல் இது” எனவும் சொல்லப்பட்ட காலம் ஒன்றுண்டு என அறிவீர்களா?

அப்பாவின் சிங்கப்பூர் நண்பர் கொடுத்த சோனி 90 A,B ரெண்டு சைடும் ராஜா பாடின பாட்டாய் பதிவு செய்து, அதற்கு நான் 90 நிமிடம் அப்பாவிடம் பாட்டு வாங்கினேன் என அறிவீர்களா?

 (அதில் நான் நினைவுச்சின்னத்தில் ராஜா பாடிய “சிங்காரச்சீமையிலே” கேட்டிருக்க, கடைக்காரன் கரெக்டாய் தப்பாய் சுசிலா வெர்ஷன் பதிவு செய்த கொடுமை வேறு)

எண்பதுகளின் பின்னிறுதிகளில் ராஜா குரலுக்கான பொதுப்புத்தி கமெண்ட் ’மூக்கால பாடுறாருய்யா..இதை எஸ்பிபி பாடிருந்தா..” என அறிவீர்களா?

இத்தனைக்கும் பாட்டை ராஜா கூட பாடியிருக்கமாட்டார்.  அமரன், இல்லை இன்னொரு சகோதரர் பாஸ்கர் கூட பாடியிருக்கலாம்.

ஆனாலும், அது ராஜா வாய்ஸ் தான். மூக்கால தான்.

இப்படி ஒரு கருத்தாக்கம் இருந்ததா, எந்தளவுக்கு அக்காலத்தில் இருந்தது என்பது இக்கட்டுரையின் கருப்பொருள் அல்ல. இசையமைப்பாளர்கள் பாடினால் அது உடனடியாக கொண்டாடப்படுவதில்லை, சிலசமயம் சமகாலத்தில் ரசிக்கக்கூடப் படுவதில்லை என்ற ஆதங்கமே இப்பதிவு.

பாடுவதற்கு என்ன வேண்டும்? குரல்வளமா? ஆமெனில், நுஸ்ரத் ஃபதே அலிகான் உருவாகியிருக்க முடியாது. முறையான பயிற்சியா? ஆமெனில், SPB முதல் வேல்முருகன் வரை உருவாகியிருக்க முடியாது. பாடுவதில் உயிர் இருக்கனும். ஒரு கம்போசிஷனை தன் குழந்தையை போல் எண்ணுவதாலோ என்னவோ,  இசையமைப்பாளர்கள் பாடுகையில் தங்கள் குரல் ஒத்துழைப்பையும் மீறி ஒரு இனம்புரியா ஜீவனை பாட்டில் செலுத்துகிறார்கள் என்பது என் துணிபு.

நான் காலக்கிரமமாக எல்லாம் போகவில்லை. ஜி.ராமநாதனின் ‘எஜமான் பெற்ற செல்வமே’யில்  ஆரம்பித்தால் விண்டோவை மூடிவிட்டு போய்விடுவீர்கள். எம்மெஸ்வி, ராஜா, ரஹ்மான் போன்ற Established entities பக்கமும் போகவேண்டாம். ஜிராசொக்கபிரபாமயில்கள் நடமாடும் வனத்தில் வான்கோழியாகவோ,ஈமூவாகவோ விருப்பமில்லை.

மற்றவர்களிடம் போவோம். The God is in the details. Or with the minnows.


அக்காலத்தில் ராஜாவுக்கு டஃப் கொடுத்த (அடிக்க வராதீர்கள், டஃப் கொடுக்க ஏவிஎம் போன்றோரால் வளர்க்கப்பட்ட ) சந்திரபோசின் மொத்த கரியரையும் ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’க்குள் அடக்கிவிடுவேன். அவர்க்கும் சிலபல unique ஹிட்டுகள் உண்டு. அதில் அவர் பாடிய ’பூஞ்சிட்டு குருவிகளா’வும் ஒன்று. (டூர் போன இடத்தில் ஹேண்டிகேமில் எடுத்த கொடூர ரீமிக்சே யூட்யுப் வசம்) . டிடியின் கொடைக்கானல் ஓளிபரப்பு துவங்கிய வருடத்து தீபாவளியில் போஸ் சார் முகமெல்லாம் சிரிப்பாய் “பூஞ்சிட்டு குருவிகளா” பெர்ஃபார்ம் செய்தது இன்றும் நினைவில்.சிலசமயம் குரல்களின் புதுமை ஒரு பாட்டுக்கு assetஆகவும் முடியும். அசடாகவும் முடியும். இங்கு சைடில் சற்று முடி இழந்த பாரா போல் இருக்கும் மரகதமணியை ஞாபகமிருக்கா? ராஜாவை முறைத்துக்கொண்ட பாலசந்தரை தன் சத்துக்கு முட்டுக்கொடுத்தவர். எப்போது கேட்டாலும், இப்போது கேட்டாலும் ‘கீரவாணி’ தெலுங்கில் ரொம்ப பாப்புலர் என்பார்கள். அவர் குரலில் இந்த வானமே எல்லை கம்பங்காடே எனக்கு மிகவும் இஷ்டம். இப்பாடலை அவர் ரொம்பவும் டைனமிக்ஸ் இல்லாது ஃப்ளாட்டாக தான் பாடியிருப்பார். ஆனால் ட்யூனின் அழகினால் உறுத்தாது.

ஆமா டைனமிக்ஸ்ங்கிறீங்களே..அதென்ன மெடிமிக்ஸ் என கேட்பவர்களுக்கு என் 2 நயா பைசா. புதிதாக கீபோர்ட் கற்றுக்கொண்ட ஒருத்தர் வெறும் ட்யூன்/நோட்சை மட்டும் அறிந்துகொண்டு 'நலந்தானா’ வாசிக்கிறார் என வைத்துக்கொள்வோம் :) ஒரு மாதிரி வெறும் நோட்சாக, டொட்டடொடடொய்ங் என மொக்கையாக கேட்குமே..எது குறைகிறது என நினைக்கிறோமோ, அந்த மசாலாவே டைனமிக்ஸ்..


அப்படியே S.A.ராஜ்குமாருக்கு வருவோம். USSR என இனிசியல்களை சேர்த்து ஏழாங்கிளாசில் நான்கு பேர் முடிந்த அழும்புகளை செய்துகொண்டிருந்தோம். கிளாசில் 3 கேர்ள்சில் ஒரே பேரழகியான ராதாவை கூட்டுச்சேர்த்து இன்றோடு ஐவராகி ’ஃப்ரேன்சீப்’ வளர்க்கலாம் என புரியவைத்த காவியம் புதுவசந்தம். அப்போது எங்கு கேட்பினும் ஜேசுதாஸ் வாய்சில் “பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா” தான். ஆனால், எனக்கு மட்டும் S.A.ராஜ்குமாரின் குரலில் “இது முதல் முதலா வரும் பாட்டு” பிடிக்கும். அவரின் முதல் படமான சின்னப்பூவே மெல்லபேசுவிலேயே ”யே புள்ள கருப்பாயி”யில் கலக்கலாய் பாடியிருப்பார்.

நெக்ஸ்ட் வித்யாசாகர். வித்யாசாகர்  எப்போதும் தன்னை undersell செய்துகொள்வதாக எனக்கு படும். கில்லி ஹிட் காலத்திலேயே கூட டிவியில் பேட்டியெல்லாம் ரொம்ப கொடுத்ததில்லை. தமிழ்ல இருப்பார், சான்ஸ் இல்லாவிடில் மல்லுவுட்டில் சத்தமின்றி பத்து படம் ம்யூசிக் போட்டிருப்பார்.
சரி, வித்யாசாகர் பாடுவார் என அறிவீர்களா? ராமன் தேடிய சீதை என்றொரு ஓடா சேரன் படம். இப்பாடலை கேளுங்கள்.  வித்யாசாகர் குரலில் இருக்கும் cry-ஐ உணர முடிகிறதா? என்ன பாட்டுடா சாமி எனத்தோணவைக்கும் பாட்டு.
(சற்றே) சற்று பாப்புலரான வேறொரு பாடலுக்கு வருவோம். குருவியில் ‘பலானது’ கேட்டுருக்கிறீர்களா? அத்னன் சாமியின் குரல் சாயலில் அது வித்யாசாகரே தான். ( அத்னன் வெறியர்கள் வாக்கிய தொடக்கத்தில் கிட்டத்தட்ட/கொஞ்சூண்டு போன்ற adjectives மனம்போல் சேர்த்துக்கவும்)  டெக்னோ மிக்சியில் குரலை போட்டு அரைத்திருந்தாலும், வித்யாசாகர் குரலில் அடிநாதமாக உள்ள peppyness-ஐ, ரகளையை குறிப்பாக சரணம் முடிவில் கவனியுங்கள்.

ரைட்டு, சிற்பி ஞாபகம் இருக்கா? நாட்டாமை ’கொட்டைப்பாக்கும்’ ஆசாமி. அதைவிடவும் பல நல்லப்பாட்டு போட்டிருக்கிறார். பாரதிராஜாவின் ‘ஈரநிலம்’ மூலமாவது இழந்த மார்க்கெட்டை பிடித்துவிடலாமென  அத்தனையையும்  கொட்டி“இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை” என இசையமைத்தார். அவுட் ஆஃப் ஃபார்ம் பாரதிராஜாவும், ஃபார்முக்கே வராத மனோஜும் படத்தை ஊத்தி மூட, பாவம் அப்படத்தின் பல நல்ல பாடல்கள் வெளியே தெரியவில்லை.
கரிசக்காட்டுக்குயிலே பாட்டில் அவர் பாடுவதை கவனியுங்கள். கூடப்பாடும் சுஜாதா என்ற ராட்சசி அளவுக்கு குரலோ, குழைவோ இல்லை தான். ஆனால் அவரது குரலின் rustiness எந்தளவுக்கு இப்பாட்டுக்கு ஜஸ்டிஸ் செய்கிறது என பாருங்கள்! எனக்கு தெரிந்து சிற்பியின் கடைசி ஹிட் பாட்டு “ரகசியமானது காதல்” (படம்: கோடம்பாக்கம்) தான். அதில், அவர் பாடிய வர்ஷன் ஒன்றுண்டு. நெட்டில் ஹரீஷ் ராகவேந்திராவின் பத்திய வெர்ஷனே கிடைக்கிறது.

கடைசியாக, நம்ம ஃபேவரைட். தேவா பற்றி பேசாமல் இக்கட்டுரை முழுமையடையாது. கரியரின் பீக்கில் கிட்டத்தட்ட பாதி பாடல்களை அவரோ, அவர் தம்பியோ பாடி விடுவார்கள். மனோ/SPBக்கு சான்ஸ் குறைந்ததுக்கு இவர் பெரிய காரணம். இவரின் 2 பாடல்கள் என்னுடைய ப்ளேலிஸ்டில் எப்பவும். ஒன்று, கவலைப்படாதே சகோதரா (காதல்கோட்டை). இதில் “யம்மா யம்மா” போது குரல் சுத்தமாக கண்ட்ரோல் இன்றி, சிங்கப்பூர் ரேசில் ஷூமேக்கரும், கார்த்திகேயனும் மோதிக்கொண்டதையொத்த விதத்தில் இருந்தாலும், அவர் குரல் காண்பிக்கும் நட்பு, ஆறுதலை வைத்து இன்றைய ஆலாப்,நரேஷ்களுக்கு கிளாஸ் எடுக்கலாம். பாடலில் emote செய்வதை பற்றி பேசுகையில், அவரது “மீசக்கார நண்பா”வை மறக்கமுடியுமா? ரொம்பவுமே unusual ட்யூன் மற்றும் வரிகள். இதை ஓகே செய்த கே.எஸ்.ரவிக்குமாருக்கும் ஷொட்டு. குறிப்பாக “அதைவிட பாசம் அதிகம்டா” பாடுகையில் தேவாவின் குரலை கவனியுங்கள். நான் விட்டால் அழுதிருப்பேன்.
இன்னொன்று, ஒரு மெலடி. No points for guessing. ’கோகுலத்து கண்ணா கன்ணா’வே  தான். SPBயும், சித்ராவும் பாந்தமான டீச்சர்களாக முதல் 2 பீரியட்களை முடித்துவிட்டு, மூன்றாவது பீரியட் கேம்சாக இருந்து அதற்கு ஒரு ரகளையான புது மிஸ் வந்தால் எப்படியிருக்கும். அந்த எஃபக்டை கொடுக்கும் இப்பாடல் அவரின் ஆல்டைம் ஜெம் என்றால் மிகையாகாது.


நன்றாக பாடுவதென்பதென்ன? ஒரு பாட்டின் மூடை, பாடல் சொல்லவரும் உணர்வை சரியாக கடத்துவது தானே. உசிரைக்கொடுத்து பாடுறது தானே..அவ்வகையில் மேற்கூறிய அனைவரும் புரஃபஷனல் பாடகர்களை விட அசத்தியிருப்பதாகவே என் சிறிய மூளைக்கும்/பெரிய இதயத்துக்கும் படுகிறது.(தற்காலத்திய கம்போசர்கள் பாடிய பாடல்களும் போட்டு உங்களை படுத்தலாம் ;),  உங்கள் ஆதரவு பொறுத்து)

69 comments:

 1. me the firstlu very good flow keep writing.

  ReplyDelete
 2. //கிளாசில் 3 கேர்ள்சில் ஒரே பேரழகியான ராதாவை கூட்டுச்சேர்த்து இன்றோடு ஐவராகி ’ஃப்ரேன்சீப்’ வளர்க்கலாம் என புரியவைத்த காவியம் புதுவசந்தம்//

  நீ தான்யா கலையைத் திரையரங்கு தாண்டி வளர்க்கும் கலைஞன்; என் கண்ணு; என் ஜுஜ்ஜு:))

  கீச்சுலக விக்ரமன் = நட்டு வாழ்க!:)

  ReplyDelete
  Replies
  1. ஹிஹி..இதெல்லாம் யாருக்கு புரியுது..நன்றி கேயாரெஸ்..;)

   Delete
 3. //பாந்தமான டீச்சர்களாக முதல் 2 பீரியட்களை முடித்துவிட்டு, மூன்றாவது பீரியட் கேம்சாக இருந்து அதற்கு ஒரு ரகளையான புது மிஸ் வந்தால் எப்படியிருக்கும்//

  நீர் வகுப்பில் பெரிய படி பாளி என்பதை இதனான் அறிந்து கொண்டோம்:)

  ஆனாலும், இது போன்ற விமர்சன வரிகளுக்காகவேனும், தேவா சார், மறுபடியும் வந்து இசையமைக்கணும்:) Kalakkals of Nattu!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கேயாரெஸ்..:) ஆமா, தேவா வரணும் :)

   Delete
 4. \\SPBயும், சித்ராவும் பாந்தமான டீச்சர்களாக முதல் 2 பீரியட்களை முடித்துவிட்டு, மூன்றாவது பீரியட் கேம்சாக இருந்து அதற்கு ஒரு ரகளையான புது மிஸ் வந்தால் எப்படியிருக்கும்\\

  என்னே உவமை!! :))
  அட்டகாசம்.. என்னா ஒரு ஃப்ளோ. சிம்ப்லி சூப்பர்ப்.

  ReplyDelete
 5. SO i thought it would be bashing Raja and i was disappointed :P on a serious note, nice: as usual, i always learn something new from your articles :D btw, how come u missed bharathwaj :D

  ReplyDelete
  Replies
  1. Everyone says that to me..I will post a sequel to this :)

   Delete
 6. மெதுவா மெதுவா பாட்டு மனதுக்கு ரொம்ப நெருக்கமானது; எப்போது எங்கு கேட்டாலும் மனம் லயித்துப் போகும்
  // டிடியின் கொடைக்கானல் ஓளிபரப்பு துவங்கிய வருடத்து தீபாவளியில் போஸ் சார் முகமெல்லாம் சிரிப்பாய் “பூஞ்சிட்டு குருவிகளா” பெர்ஃபார்ம் செய்தது இன்றும் நினைவில் //
  எனக்கும் ஞாபகம் இருக்கிறது.. ஸ்டுடியோவுக்குள் மினுமினுக்கும் பெரிய உருண்டை சுழல சந்திர போஸ் தான் பெற்ற குழந்தையை கொஞ்சுவது போல ரசித்து பாடுவார்..
  தொடர்ந்து எழுதுங்கள் :-)

  -மாயா
  @mayakannan

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட்..அதே ப்ரொக்ராம் தான். மனோரமா ”டெல்லிக்கு ராஜான்னாலும்” பாடிய ப்ரொக்ராம்..மிக்க நன்றி ஊக்கத்துக்கு :)

   Delete
  2. I too remember.... பூஞ்சிட்டு குருவிகளா - சந்திரபோஸ், டில்லிக்கு ராஜானாலும் - மனோரமா, ஏதேதோ கற்பனை வந்து - லலிதா சாகரி... செம புரோக்ராம்... டிடி ல முன்னல்லாம் விடாம போட்டு கிழிச்சு எடுப்பாங்க...

   Unforgettable memories... இதே மாதிரி ராஜீவ் வண்டி இழுத்துட்டு பாடுற "ஓடி ஆடுற பெண் குழந்த, அவ ஏனோ ஓஞ்சு தலகுனிஞ்சா...." இதுவும் டிடி ல கதற கதற டெலிகாஸ்ட் ஆன பாட்டு...

   Mr.ரசனை என்ன கேட்டா நீங்க இந்த டிடி nostalgiaவ‌ வச்சே ஒரு போஸ்ட் போடணும்...

   Delete
 7. பேருக்கேத்த மாதிரி நல்ல ரசனையோடதான் எழுதியிருக்கீங்க. நடையும் பிரமாதம்.

  ReplyDelete
 8. தேவா Analysis - செம!நட்பின் உரிமை வழிந்தோடும் மீசை கார நண்பா வும் அதை போலவே!அவர் பார்த்தா ரொம்ப சந்தோசபடுவார்! அப்படியே- பாடாலசிரியர் அவதாரம் எடுக்கும் இசை அமைப்பாளர்கள் பற்றியும் ஒரு தடவ அலசி காயபோடவும்!

  ReplyDelete
  Replies
  1. உண்மை..மீசக்கார நண்பாவை எப்படி விட்டேன் என தெரியவில்லை. ஆட் செய்து விடுகிறேன் :)

   Delete
 9. இசையைப்பற்றிய நட்டு அண்ணனின் அவதானிப்புகளை பார்த்தீர்களா?! அசத்தல். ARR முதல் தற்போதைய G.V.பிரகாஷ் வரையிலான கம்போசர்கள் குறித்து அடுத்தொரு கட்டுரை எழுத வேண்டிக்கொள்கிறோம்.
  இப்படிக்கு,
  அண்ணனின் விழுதுகள் சார்பாக,
  கருப்பையா
  (@iKaruppiah)

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா கருப்ஸ்..சீக்வல் எழுதுவேன்னு நினைக்கிறேன் :)

   Delete
 10. Your best post so far! :-) Loved your analysis of Deva :)Great job!

  amas32

  ReplyDelete
 11. எங்கே வித்யாசாகரை விட்டுடுவீங்களோன்னு பயந்துட்டேன்:)அருமையான கட்டுரை
  // பாடுவதில் உயிர் இருக்கனும். ஒரு கம்போசிஷனை தன் குழந்தையை போல் எண்ணுவதாலோ என்னவோ, இசையமைப்பாளர்கள் பாடுகையில் தங்கள் குரல் ஒத்துழைப்பையும் மீறி ஒரு இனம்புரியா ஜீவனை பாட்டில் செலுத்துகிறார்கள் என்பது என் துணிபு.//

  100% true ..
  வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் பாடல் ஜெயச்சந்திரன் வெர்சன் ஒன்று உள்ளது.ஆனால் கடிச்சு பாடற மாதிரி இருக்கும்.ராஜாவோடது தான் அட்டகாசமா இருக்கும்


  umakrishh

  ReplyDelete
  Replies
  1. வாவ்..வித்யாசாகர் பாடுவாருன்னு ரொம்ப பேருக்கு தெரியாது, கலக்கிட்டீங்க..வள்ளி வள்ளி ஜெயச்சந்திரன் வெர்ஷன் உண்டா? கேக்கனுமே..

   Delete
 12. very nice and interesting article nattu...

  keep posting more...

  ReplyDelete
 13. thalaippu pidikkalai :(((

  sennimalaiyaar title vaikkira maathiri irukku:(

  ReplyDelete
 14. இசையமைப்பாளர் இமானையும் சேருங்கள் "கடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே "கும்கி ல ஒன்னும் புரியல பாடலிலும் கலக்கி இருப்பார்

  umakrishh

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக..பெரிய இசை ரசிகையா இருப்பீங்க போலயே..அவ்வளவா ட்விட்டர்ல இந்த ஏங்கிள்ள பார்க்கல..அதுசரி, இப்பத்தானே தொடர்றோம் :)

   Delete
 15. அருமையான பதிவு...மிகவும் முக்கியமான பதிவும்... பரத்வாஜ் இசையில் அவரே பாடிய உயிர் கொண்ட ரோஜாவே பாடலையும் இந்த வரிசையில் சேர்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. பரத்வாஜ் சேர்க்கனும்னு பலர் சொல்றாங்க..இந்த பாட்டு கேட்கலையே..என்ன படம்?

   Delete
  2. that would be Roja kooddam :)))

   Delete
 16. இவ்வளவு பேசிவிட்டு ரஹ்மான் பற்றி ஒரு எழுத்து கூட எழுதாது விட்டது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. ;)

  ReplyDelete
  Replies
  1. ஹிஹி..வருகைக்கு நன்றி நேம்சேக் :)

   Delete
 17. அட்ரா சக்கைன்னானாம்... காலைல கீச்சுல பாக்கும் போதே நெனச்சேன். வந்து பாத்தா இப்பிடியொரு பதிவு.

  ராஜா பாட்டுல எனக்கு ரொம்பப் பிடிச்சது புன்னகையில் மின்சாரம் பொங்கி வரும் சந்தோஷம் பாட்டுதான். அப்படியே,
  1. தென்னமரத்துல தென்றலடிக்குது
  2. மெட்டி ஒலி காற்றோடு
  3. ஒனக்கெனத் தானே இந்நேரமா

  மெல்லிசை மன்னர் பாடுன பாடல்களைப் பத்திச் சொல்லவே வேண்டாம். அவர் பாடுனா அந்தப் பாட்டு ஹிட். அது அவரோட இசையாகட்டும்.. இன்னொரு இசையமைப்பாளர் இசையாகட்டும்.

  பூஞ்சிட்டுக் குருவிகளா.. பாட்டு அட்டகாசம். சந்திரபோசுக்குன்னே ஆன பாட்டு. வாய்க்கொழுப்பு படத்துல கூட ஒரு பாட்டு உண்டு. சட்டுன்னு நினைவுக்கு வரலை. நீலக்குயில்கள் ரெண்டு பாட்டு கேட்டிருக்கீங்களா?

  மரகதமணியின் கம்பங்காடு எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு. வித்யாசமான குரல்ல... ஆகா..ஆகா. ஆனா தெலுங்கு வாடையே இல்லாமப் பாடியிருக்காரு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜிரா :)

   எனக்கு ராஜாவோட பிடிச்சதுல (ஒண்ணா ரெண்டா) டாப் “சொந்தம் என்று வந்தவளே ஆத்தா”
   எம்மெஸ்வி விடைகொடு எங்கள் நாடே வரைக்கும் எல்லாமே பிடிக்கும்.
   வாய்க்கொழுப்புல போஸ் பாடினதா? ஹ்ம்ம்,ஸ்ட்ரைக் ஆகல..நீலக்குயில்கள் கேட்டதில்லையே.

   மரகதமணி நல்லா செட்டாவார் பாலசந்தர் படங்களுக்கு..

   Delete
 18. கோகுலத்துக் கண்ணா கண்ணா பாட்டு எனக்கும் பிடிக்கும். அதிலும் தேவா கடைசியா வந்து சேருமிடம். நல்ல பாடல். இந்த மாதிரி பாட்டெல்லாம் கேட்டு ரொம்ப நாளாச்சு. ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே என்று முடிப்பது அழகு. ழகரம் ஒழுங்காக வந்திருந்தால் பாடல் பாதம் கீரோடு சேர்ந்த குலாப் ஜாமூனாக இருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. சேம்..கிருஷ்ன கிருஷ்ன இடம் டாப்(ஷ ட்ரை செய்து நடுவாந்திரமா ஷ-ச-ஸவில் முடிஞ்சிருக்கும்):)

   தேவா நல்ல பாடகரே..

   Delete
 19. சொல்ல நெனச்சு விட்டுப் போனது...

  ரசனைக்காரனய்யா நீர்.. ரசனைக்காரன். :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி நன்றி..உங்களை விடவா :)

   Delete
 20. வாவ் நட்டு, கலக்கறீங்க..
  “தென்பாண்டி சீமையிலே” என்னோட ப்ளே லிஸ்ட்ல எப்பவும் இருக்கும்,
  என்ன ப்ளேலிஸ்ட்னு கேக்கறீங்களா? என் பொண்ணை தூங்க வைக்க 10-15 பாடல்கள் பாடணும், அதில் இது எப்பவும் இருக்கும்..

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பாஸ்ரீ :) நீங்க பாடி ஒரு பாட்டை அப்லோடுங்களேன்..:)

   Delete
 21. சூப்பர் நடராஜ்ணே. அருமையான அவதானிப்பு. திரு.பரத்வாஜ் பாடிய "அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்" பாடலை இதில் சேக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிண்ணே..பரத்வாஜை பலர் சொன்னாங்க :)

   Delete
 22. ஆஹா ! சொக்கன் கானாப்ரபாவைத்தொடந்து

  ReplyDelete
  Replies
  1. ஹிஹி..சிபி ஃபர்ஸ்ட் டைம் வருகையோ?

   Delete
 23. மரகதமணியின அழகன் விட்டுட்டீஙகளே

  ReplyDelete
  Replies
  1. அதுல அவர் பாடிருக்காரா என்ன?

   Delete
 24. 'சொந்தக்குரலில் ஒரு பாடல்,பாடி அதுவரை தங்களுக்காக ஒலித்த பாடகர்களின் குரல்களை பொருத்தமற்ற கேலிக்கூத்தாக்கிவிடுகிறார்கள் நடிகர்கள்' என்று ஒரு ஸ்டேட்டசைப் போட்டுவிட்டு இங்கே வந்தால், இப்படி ஒரு பதிவு. தெளிவான, ஆற்றொழுக்கான குரல்களை விட சின்னச்சின்ன அசௌகரியங்கள், இயலாமைகள் கொண்ட குரல் எப்போதும் bhAvaththai அதிகமாய்ப் பதிவு செய்யும், ஆட்கொள்ளும். அந்தக் குரலில் இருக்கும் தேடல் தான் அதற்குக் காரணம்.

  நல்ல voice culture உள்ளவர் சிலசமயங்களில் ஸ்வரஸ்தானத்தை, ஸ்தாயியை எளிமையாகக் கண்டடைந்துவிடுகிறார். உள்வாங்குகிற மனசுக்கும் உருவாக்கும் மனசுக்குமான வித்யாசம் அது. நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. Very well articulated. Especially "ஆற்றொழுக்கான குரல்களை விட சின்னச்சின்ன அசௌகரியங்கள், இயலாமைகள் கொண்ட குரல் எப்போதும் bhAvaththai அதிகமாய்ப் பதிவு செய்யும்" ..

   பதிவின் ஆன்மாவை சரியாக சொன்னீங்க..

   Delete
 25. ஆறு போஸ்ட்டு.. ஆறும் சிக்சர்.. சந்துலகின் யுவி நீங்கதான் சாரே.. கலக்கீட்டீங்க..
  புதிய தலைமுறை இசையமைப்பாள-பாடகர்கள் குறித்த அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்.!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி குணா..கூடியவரையில் ரொம்ப தள்ளிப்போடாது உடனே செஞ்சுடறேன் :)

   Delete
 26. ///அத்னன் சாமியின் குரல் சாயலில் அது வித்யாசாகரே தான். ( அத்னன் வெறியர்கள் வாக்கிய தொடக்கத்தில் கிட்டத்தட்ட/கொஞ்சூண்டு போன்ற adjectives மனம்போல் சேர்த்துக்கவும்) ///

  அதகள நடை.. மிக ரசித்தேன் :-)))

  ReplyDelete
  Replies
  1. கம்பேரிசன் மட்டும் பயந்து பயந்து போட வேண்டியிருக்கு :)

   Delete
 27. Good one. Super funny about Yejaman Petra Selvame. Exactly I closed the browser and reopened to read the rest of the entry. Who allowed G Ramanathan to sing? Sacrilege!

  ReplyDelete
  Replies
  1. U did? :) Actually, it isn't too bad for me. Good bhavam :)

   Delete
 28. ஒரு சின்ன சஜெஸ்ஷன் நிறைய படங்கள் போடுவது, படிக்கும் போது வேகத்தை தடை செய்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஓ, அப்படியா சொல்கிறீர்கள்? நான் பதிவின் விஷுவல் ட்ரைனசை குறைப்பதற்காக படங்கள் சேர்க்கிறேன்..அதுவும் சிறிய easy to load படங்களாக..

   Delete
 29. உங்களின் கருத்தோடு ரொம்பவே ஒத்துப் போகிறேன். சில பாடலகளில் இவர்களின் குரலால் சிறப்படைந்திருக்கிறது. பூ படத்தில் இசையமைப்பாளர் "பாச மொழி பேசும்" பாட்டு பாடியிருப்பார் கேட்டுப் பாருங்கள்..இளையராஜா இன்ஸ்பி்ரேஷன் போல ஆனால் குரலில் நிறைய பிசிறு இருக்கும் அங்கங்கே நிறையவே சுருதியே தப்பும் ஆனாலும் முயற்சி செய்திருப்பார்

  ReplyDelete
  Replies
  1. நன்றி டுபுக்கு..நீங்கள் சொல்வது S.S.குமரன். பூ,களவாணி ஆள்..ஆமா பிசிறு,சுருதி விலகல் இருந்தாலும் ’ஆதார’ பாவம் நல்லாயிருக்கும்..கொஞ்சம் கங்கை அமரன் குரல் உண்டு..

   Delete
 30. Raja voice pathi neenga sonna yaavaiyum unmai. ennoda amma kooda chinna vayasula ceylone radio paata keetutu, nalla ppatu SPB paadiyirukka koodatha'nu nondhukittadhellam nyabagam varuthu.

  Vanammella song from NEPV romba nalla paatu..ummm..oru SPB padi irukka koodatha... ;-)

  ReplyDelete
  Replies
  1. Exactly..That's the crux of this post..

   Btw, Vanam mella is a very good number..

   Delete
 31. One thing that I like the most about your posts is that we have shared the same time space and might have seen the world with the same pair of eyes at some point.
  Your posts take me to the late eighties and the best part of golden 90's.

  ReplyDelete
 32. "SPBயும், சித்ராவும் பாந்தமான டீச்சர்களாக முதல் 2 பீரியட்களை முடித்துவிட்டு, மூன்றாவது பீரியட் கேம்சாக இருந்து அதற்கு ஒரு ரகளையான புது மிஸ் வந்தால் எப்படியிருக்கும்."....Kalakkal example Natraj

  ReplyDelete
  Replies
  1. நன்றி சிவஷண்முகம் :)

   Delete
 33. Hi
  Good Analysis!!
  Very interesting,
  Keep writing!!
  Regards,
  Vikram Balaji

  ReplyDelete
 34. நெசமாவே இதயம் பெருசுதான் . ஆனா மூளை சிறுசு இல்ல Sir..!

  ReplyDelete

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)