அடுத்து என்ன எழுதுவது என மண்டையை பிய்த்துக்கொண்டது விஜய் டிவிக்காரனுக்கு எப்படி தெரிந்ததென தெரியவில்லை. நேற்று (திங்கள்) இதுதாண்டா போலிஸ் போட்டிருப்பது செட்டாப் பாக்சை மேய்கையில் கண்ணில் பட்டது. ரைட், கிடைச்சுடுச்சு..யோகி பி போல ஃபண்டாஸ்டிக், எக்சலண்ட், சூப்பர், பலே என மடைதிறந்து போகலாம்.
தொண்ணூறுகளின் ஆரம்ப காலம் தெலுங்கு மொழிமாற்ற (டப்பிங்) படங்களின் பொற்காலம் என சொல்வேன்.
தமிழ் ரசிகர்களின் கலையார்வத்துக்கு அப்போதைய ‘பிக் சிக்ஸ்’ ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ்களின் ’சப்ளை’ போதவில்லையோ, அல்லது ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ போன்ற மொக்கைப்படங்களில் ராமராஜன் நடிக்க ஆரம்பித்துவிட்டதாலோ, என்ன எழவோ, அந்தக்காலக்கட்டத்தில் அவ்வளவு டப்பிங் படங்கள் வரும். அப்போதைய தமிழ்சினிமா மார்க்கெட் டைனமிக்சை பதிந்துவைக்க பிளாகோ, கேபிள் சங்கர் போன்றவர்கள் இல்லாததால் காரணம் தெரியவில்லை. ஆனால், இன்று முப்பதுகளின் முற்பாதியில் (சொன்னா நம்பனும்) இருக்கும் என் தலைமுறையின் பதின்ம வயதுகள், டப்பிங் படங்களின் தாக்கம் இல்லாது வளரவில்லை என்பது நிதர்சனம்.
இன்றும் நினைவிருக்கிறது தஞ்சை ராஜா கலையரங்கத்தில் ஹவுஸ்ஃபுல்லில் வியர்வை கசகசக்க வைஜயந்தி ஐபிஎஸ் பார்த்தது. டப்பிங் படங்களை பொறுத்தமட்டில் வைஜெயந்தி ஐபிஎஸ் ஒரு ட்ரெண்ட் செட்டர் என அறுதியிட்டு சொல்லலாம்.
தமிழன் அதற்கு முன்பும் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு தன் பேராதரவை நல்கியிருக்கிறான். சலங்கை ஒலி, (நான் ரொம்ப காலத்துக்கு நேரடி தமிழ்ப்படம் என நம்பிக்கொண்டிருந்த) சிப்பிக்குள் முத்து என பலவும் டப்பிங் தான். அதற்கும் முன்னால் சென்றால், ஜெயமாலினி,ஜோதிலட்சுமி போன்ற பேரிளம் பெண்கள்,கருப்புச்சட்டிக்குள் காலைவிடும் குட்டிச்சாத்தான், பூஞ்சையான ராஜா கவுன் ஹீரோ என விட்டலாச்சார்யா கல்லா கட்டலாச்சார்யாவாக கோலோச்சின காலமும் உண்டு. ஆனால், ஜெயமாலினி/ஜோதிலட்சுமிகள் மோட்டாரு என்றால் விஜயசாந்தி,ராஜசேகர்கள் காட்டாறு என்பதை ஃபிலிம்நியூஸ் ஆனந்தனே தன் குங்குமப்பொட்டின் மீது சத்தியமாக ஒத்துக்கொள்வார்.
இந்த இடத்தில் விஜயசாந்தி என்ற ஆளுமையை பற்றி விவரிக்காவிடில், “அம்மாடி அம்மோவ்” என்ற வார்த்தை இல்லாத டப்பிங் படம் போல, இந்த கட்டுரை முழுமை பெறாது. பூ ஒன்று புயலானது தான் அவர் ராஜபாட்டையை ஆரம்பித்தது என அவதானிக்கிறேன். அது வரும்போது நான் பால்குடி பாலகன் என்பதால் மேலதிக விவரங்கள் இல்லை. கம்பன் வழியில் சொன்னால் தென்னிந்திய ஐந்து மொழிகளில், ஐந்தில் ஒன்றில் (தமிழில்) அறிமுகமாகி, ஐந்து படம் நடித்து/ ஊத்தி மூடி, ஐந்திலே ஒன்றை (தெலுங்கு) தாவி, (இருபத்)ஐந்து பாலகிருஷ்ணா படங்களில் ஊர்க்கார மாமன் பொண்ணாக, ராஜமுந்திரி ஏரியா திராட்சை தோட்டத்தில் டூயட் பாடும்போது அவருக்கு சலிப்பு தட்டியிருக்கவேண்டும்.
இந்த இடத்தில் ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும். வைஜெயந்தி IPSக்கு முன்பும் அவர் சக்சஸ்ஃபுல் தான். கிட்டத்தட்ட தலா 20 படங்களில் ராகவேந்திர ராவ், கோதண்டராமி ரெட்டி போன்ற ஸ்டார் டைரக்டர்களின் கொடூர மசாலா, மழை சாங் வெறிக்கு ஆளாகி, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவோடு தெலுங்கானா ஸ்லாங்கில் பேசி, டூயட் பாடி வெற்றிகரமாக இருந்தவர் தான்.
விஜயசாந்தியின் கிளாமர்(?) இனி எடுபடாது போகக்கூடும் என்ற பேருண்மை ஒரு
தெலுங்கு S.A.சந்திரசேகருக்கோ, அல்லது அவருக்கே புரிந்துதான் வைஜெயந்தி IPS வரலாற்றில் நிகழ்ந்திருக்க வேண்டும்.
எந்த பெரிய சத்தமோ, ஓப்பனிங்கும் இன்றி தான் 1990யில் வைஜெயந்தி IPS வந்தது. ஏற்கனவே கர்த்தவ்யம் என்ற பெயரில் தெலுங்கில் ஹிட்டான படமே. எனக்கு தெரிந்து இப்படத்திற்கு முதல் ஓரிரு வாரங்களில் பெரும் வரவேற்பு எல்லாம் இல்லை. ஆனால் அதற்கு பிறகு கிட்டத்தட்ட சம்சாரம் அது மின்சாரத்திற்கு பிறகு தமிழ்ச்சினிமாவில், ஒரு வைரல் ஃபினாமினாவாக பார்த்தேயாக வேண்டிய ஒரு படமாக உருமாறியது. போட்ட இடமெல்லாம் கூட்டம் அம்மியது, கலெக்ஷன் அள்ளியது.
இன்று யோசித்து பார்த்தால், வைஜெயந்தி IPS ஒன்றும் பெரிய அப்பாடக்கர் திரைப்படமல்ல. அதன் வெற்றிக்கு காரணிகள் எனப்பார்க்கப்போனால் எனக்கு தோன்றுபவை இவை.
1. முதலில், ஒரு போரடிக்காத திரைக்கதை. ஒரு வீரமுள்ள Protagonist வெகுண்டெழும் மிகச்சுலபமான கதை தான். ஆனால், சரியான விகிதத்தில் செண்டிமெண்ட், சமூகக்கொடுமைகள் கலந்த ரேசி ஸ்க்ரிப்ட். இளம்நடிகை மீனாவின் ரேப் இன்றும் ரத்தக்கண்ணீரை வரவழைக்கும் (கவனிக்க, கண்ணீர் என்றேன்) . எஞ்சோட்டு வாலிபர்கள்(?), வீறுகொண்டு இன்னொரு விண்டோவை ஓப்பன் செய்து அந்த ஜெயப்பிரகாஷ்-மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், ஒரு வார்த்தை. அது யுட்யூபில் இல்லை !
2. இரண்டாவது, முதன்முதலாக ஒரு பெண் போலீஸ் திரையில் போடும் சண்டைகள் பார்க்க கொடூரமாக இல்லாது இருந்தன. வெய்ட், சண்டை அளவுக்கு போகவேண்டாம். முதன்முதலில், ஒரு பெண் போலிஸ் திரையில் பார்க்க கொடூரமாக இல்லாது இருந்தார். போலீஸ் அகாடமிக்கும், தமிழ் நடிகைகள் அனாடமிக்கும் ஏழாம் பொருத்தம். அம்பிகா, ஜீவிதா (நான் தேடும் செவ்வந்தி போலிஸ் ட்ரெஸ் ஞாபகம் இருக்கா) போன்ற பாடியோ, லேங்குவேஜோ, பாடி லேங்குவேஜோ சுத்தமாக இல்லாத நடிகைகளை போலீஸ் ட்ரெஸ்ஸில் பார்த்து டரியலான ரசிகனுக்கு, டர்ரான ரியலான போலீசாக விஜயசாந்தியை திரையில் பார்த்தபோது விசிலடித்தே திரையை கிழித்தான். அதற்கு அவரின் இயற்கை உடல்வாகா, பின்னிருபதுகளின் மெல்லிய முதிர்ச்சியா என துல்லியமாக காரணம் சொல்ல முடியவில்லை.
அந்தக்கால ஜாகுவார் தங்கம்,சூப்பர் சுப்பராயன் “சார், 1..2..நீங்க அடிக்கிறீங்க, மேடம் ப்ளாக் பண்றாங்க” டைப் சண்டைகளிலும் ஒரு பெர்ஃபக்ஷன் காண்பிப்பார். காவல் நிலைய ரைட்டர் டேபிளின் மீது சிறு குட்டிக்கரணங்கள், இரு அடியாட்கள் இவரை அடிப்பதை விட்டுவிட்டு பாங்காய் லெஃப்ட், ரைட்டில் பிடித்துக்கொள்ள, சம்மர்சால்ட் அசால்ட்டாய் அடிப்பார். இந்த குதி குதிக்கிறாரே..பேண்ட் கிழிந்துவிடுமோ என்ற ’கிலி’கிளுப்பு ரசிகனுக்கு ஏற்படாத வகையில் இருக்கும் அவரது உடல்வாகும், சண்டைகளும். பத்தாததுக்கு அவர் படப்பிடிப்புத்தளத்தில் கையை கிழித்துக்கொண்ட செய்தியை ஃபிலிமாலயா சிறப்பு நிருபர் 2 பக்கங்களில் கவர் செய்து ரசிகனுக்கு பெப் ஏற்றுவார்கள்.
3. குரல். ஒரு முரட்டு போலீஸ் கதாபாத்திரத்துக்கு சாஃப்ட்டான நடிகை சரிதாவின் குரல் செட்டாகும் என கண்டுப்பிடித்தவனுக்கு தாதா சாஹேப் விருதோ, உயிர்ம்மை சுஜாதா விருதோ கொடுக்கப்படாமலிருப்பது காலக்கொடுமை. விஜயசாந்தி வாயில் இருந்து தேனாய் “இல்லாட்டி போனா, உன்ன இங்கியே அடிச்சு மர்டர் செஞ்சு” என சரிதா பேசினால், அவ்வளவு பாங்காய் ஒத்துப்போகும்.
விஜயசாந்தியின் போலீஸ், சண்டைப்படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே டெம்ப்ளேட் தான். முதல் 4 ரீலில் அவர் ஒரு விக்ரமன் டைப் குடும்பத்தில் குதூகலமாக இருப்பார். காலேஜ் போவார், அல்லது IAS/IPS தேர்வுக்கு படிப்பார். உடற்பயிற்சி தேர்வுக்கு ஜாகிங் போவார். குனிந்து நிமிர்ந்து எக்சர்சைஸ் செய்வார்.
ஒரு முக்கிய இடைச்செருகல் இங்கே. போலீஸ் ட்ரெஸ்சை விடுவோம். இந்த ட்ராக் சூட் என்று ஒரு வஸ்திரம் இருக்கிறதே, அதில் அவ்வளவு பாங்காய் இருப்பார். வெளிர்மஞ்சள் ட்ராக் சூட்டில், முழுக்கையை முக்கால் கைக்கு தள்ளிவிட்டுக்கொண்டு, ஒரு குதிரைவால் (அதான் ponytail) போட்டுக்கொண்டு, அல்லக்கை ஹீரோவோடு ஜாகிங் போகும் அழகிலேயே ரசிகன் சொக்கிப்போவான். ட்ராக் சூட் வீரியம் அறிந்தோ என்னவோ, டைரக்டர் ஒரு சண்டையை ட்ராக் சூட் காஸ்ட்யூமில் வைத்திருப்பார். காலை அகட்ட இன்னும் வாகான ட்ரெஸ் ஆனதால், விஜயசாந்தியும் ஃபைட்டர்ஸ்களை பறக்க விடுவார்.
நிற்க, சாவதற்கென்றே பிறவி எடுத்த பேக்கு புரபசர்/நீதிபதி அப்பாவுக்கு, தன் மகள் ஒரு அல்லக்கை ஹீரோவை லவ்வப்போவதும் தெரியாது, நாலாவது சீனில் வில்லன்அவரை கவ்வப்போவதும் தெரியாது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி போல செத்து, சிலபல குடும்ப,சமூக பிரச்சினைகளை விஜயசாந்தி தலையில் திணிக்க, அவர் சட்டத்தை கையில் எடுத்தோ, லத்தியில் அடித்தோ, காலில் பிரட்டியோ ஆந்திரவாடுகளின் மத்தியில் நியாயத்தை நிலைநாட்டுவார்.
விஜயசாந்தி படத்தில் ஹீரோவாக நடிப்பது, ஒருவர் தன் சினிமா கரியரை கந்துவட்டிக்கு அடமானம் வைப்பதற்கு ஒப்பானது. போனது போனது தான். படையப்பாவில் வருவது போல, ப்ரொட்யூசர்கள் “படத்துல ஹீரோ நீங்க தான். ஆனா போடற ஃபைட்டு உங்களது இல்ல” என்ன சொல்லியே ஹீரோக்களை புக் செய்வார்கள் என நினைக்கிறேன்.
அல்லக்கை ஹீரோ ரோலுக்கென்றே பிறவி எடுத்த வினோத்குமார் என்ற நடிகர் உண்டு. வைஜெயந்தி IPS முதற்கொண்டு பலப்படங்களில் ”ஹீரோ” அவர்தான். விஜயசாந்தி டீஃபால்ட்டாய் இவரை காதலித்து விடுவார். என்னத்துக்கோ தன் பெண்மையை நிரூபிக்க இவரோடு ராஜ்கோட்டி இசையில் ஒரு டூயட்டும் பாடிவிடுவார்.
ஒன்று, விஜயசாந்தி சண்டை போடவேண்டுமே என லாஜிக்காய் டைரக்டர்கள் ஹீரோவை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள், இல்லை கையை காலை உடைத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து விடுவார்கள். வினோத்குமார் 1999 வரை இந்த ஹீரோ பொழப்பை ஓட்டியிருக்கிறார் என விக்கிப்பீடியா சொல்கிறான்.அவரின் ஒரு புகைப்படம் கூட இணையத்தில் கிடைக்காதது அவர் கரியர் கிராஃபின் பதத்துக்கு ஒரு சோறு.
ஒன்று, விஜயசாந்தி சண்டை போடவேண்டுமே என லாஜிக்காய் டைரக்டர்கள் ஹீரோவை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள், இல்லை கையை காலை உடைத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து விடுவார்கள். வினோத்குமார் 1999 வரை இந்த ஹீரோ பொழப்பை ஓட்டியிருக்கிறார் என விக்கிப்பீடியா சொல்கிறான்.அவரின் ஒரு புகைப்படம் கூட இணையத்தில் கிடைக்காதது அவர் கரியர் கிராஃபின் பதத்துக்கு ஒரு சோறு.
சத்ரு படத்தில் விஜயசாந்திக்கு செகண்டு ஹீரோ இப்போதைய தெலுங்கு சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான விக்டரி வெங்கடேஷ். எப்படியோ சுதாரித்து, இன்னும் ஒரு படமோ என்னவோ கூட நடித்து (சூரியா IPS என நினைக்கிறேன்) கழண்டு கொண்டாரோ ’விக்டரி’ வெங்கடேஷ் ஆனார்..இல்லை, ஈநாடு டிவி கலக்கப்போவது யாருடுவில் ’மிமிக்ரி’ வெங்கடேஷாக இன்று இருந்துருக்கக்கூடும். நம் சரத்குமார் கூட ராஜஸ்தான் என்ற தமிழ்/தெலுங்குப்படத்தில் செகண்ட் ஃபிடில் வாசித்திருக்கிறார் விஜயசாந்திக்கு. படத்தின் ரிசல்ட் மன்னன் நீரோ ஃபிடில் வாசித்த கதையாக போனது வேறு விஷயம். உடல் பெருத்த ராம்கியும், தடயம் படத்தில் பம்மென்ற தன் ஹேர்ஸ்டைல் கலையாது சண்டை போட்டு, விஜயசாந்திக்கு ஆதரவு கொடுத்ததை வரலாற்றில் பார்க்கிறோம்.
வைஜெயந்தி IPSஐ தொடர்ந்து சத்ரு, லட்சியம், போலீஸ் லாக்கப், லேடி பாஸ் என விஜயசாந்தி மொழிமாற்றப்படங்கள் வரிசை தொடர்ந்தது. குண்டா கர்தி என ஹிந்திக்கும் போய்ப்பார்த்தார். போனி கபூரை கல்யாணம் செய்துகொண்டு தங்களை அம்போவென விட்டுவிட்டுப்போன ஸ்ரீதேவிக்கு ஈடாக இன்னொருவரை சவுத் சைடை சப்புக்கொட்டிக்கொண்டு சப்பாத்தி பையாக்கள் பார்க்க, சப்ஜாடாக அத்லெட்டிக் விஜயசாந்தியை நிராகரித்தனர். இந்த கூத்துக்களுக்கு இடையில், மன்னனில் சாந்தி தேவியாக, கெத்து குறையாமல், ரஜினியை சஜஸ்ஷன் ஷாட்டாக பின்னாடியிலிருந்து அறைந்து எல்லாம் வெயிட்டு காட்டினார் விஜயசாந்தி.
பெர்சனலாக விஜயசாந்தி எரா படங்களில் என் ஃபேவரைட் சத்ரு, லட்சியம் தான்.என்
நினைவடுக்குகளில் பட கதை,வசனங்கள் ‘இல்லாட்டி போனாலும்”, அப்படங்கள்
கொடுத்த கிளர்ச்சி, சமூகக்கோபம், அறச்சீற்றம் இன்றும் நினைவில்.
வைஜெயந்தி IPS அளவுக்கு ஏனைய படங்கள் வெற்றி இல்லையென்றாலும், ஆருர்தாசுக்கு வசனத்துக்கும், மருதகாசிக்கும், மனோ-சித்ராவுக்கும் தெலுங்கு மீட்டரில் பாட்டு எழுத/பாட கொடுத்த பணத்துக்கும் பழுதில்லை. All good things have to end என்பது போல அவரை வயதும், அரசியலும் பீடிக்க கிட்டத்தட்ட கிபி இரண்டாயிரத்தோடு தெலுங்கிலேயே முடிந்தது அவர் சகாப்தம்.
எது எப்படியோ, இன்று அரசியலில் ரோஜா அளவுக்கு விஜயசாந்தி டம்மியாகாமல் தாக்குப்பிடிக்க, அவரது வைஜெயந்தி ஐபிஎஸ் கால ரசிகன் ஒரு தூணாக இருக்கிறான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
(இந்த சீரீசின் அடுத்த பதிவுகளில் ராம்கோபால் வர்மா-நாகார்ஜுனா ஜானர் படங்கள், சிரஞ்சீவியின் அல்லுடு மஜாக்காக்கள் என போக நினைக்கிறேன்..உங்கள் நல்லாதரவை பொறுத்து..)
எனக்குத் தெரிஞ்ச தெலுங்கு சினிமாக்கள் எல்லாம் பொம்மரில்லுவுக்குப் பின்னால் வந்தவையே, நல்லா இருக்கு இந்தத் தொடர், தொடர்ந்து எழுதுங்க. :)
ReplyDeleteமிக்க நன்றிப்பா..உம்மகிட்டருந்து ஒரு வார்த்தை வாங்கறதுக்குள்ள தாவு தீருது :)
Deleteநல்லாக்கீது பா. அப்பிடியே நூல் பிடிச்சிட்டுப் போங்க.
ReplyDeleteநன்றி தலைவரே..:)
Deleteஅண்ணாச்சீ... தூள் கெளப்பிட்ட. பேரிளம் பெண் போன்ற வார்த்தைகள் கேட்டு மிக்க நாள் ஆகி விட்டது. :-) ஒரு சின்ன யோசனை - சுத்தமாக தமிழிலேயே எழுதலாமே ?
ReplyDeleteநன்றி டீப்ஸ்..சுத்தமா தமிழ்தானே, வர்ற அளவுக்கு எழுதறேன்..
Delete//பூ ஒன்று புயலானது தான் அவர் ராஜபாட்டையை ஆரம்பித்தது என அவதானிக்கிறேன்.//
ReplyDeleteஇதற்கு வசனம் எழுதியவர் கலைஞர். தெரியுமா? :-)
அட அப்படியா? டப்பிங் படம் என்று பாராமல் வசனம் எழுதிய பாங்கு வியக்கத்தக்கது. அக்காலத்தில் “டொர்ரி டொர்ரி டொமக்க டொர்ரி” டைப் புரட்சிப்பெண் படங்கள் என்றால் கலைஞர் ஒரு கை பார்ப்பார் என நினைக்கிறேன்.
Delete##இதற்கு வசனம் எழுதியவர் கலைஞர். தெரியுமா? :-)##
Deleteதவறான் தகவல் ! வசனம் : ஆரூர்தாஸ் !
கொஞ்சம்விட்டா கலைஞர் இல்லன்னா தமிழ் சினிமாவே இல்லேன்னு சொல்லிடுவாங்க போல !! கட்சிப்பணிக்கு ஒரு அளவே இல்லையா ?? எங்க போனாலும் இந்த உபி's கொசுத்தொல்லை தாங்க முடியலடா நாரயணா !! :-))
இதெல்லாம் ஒரு மேட்டரா, விடுங்க :)
Deleteவாழ்த்துக்கள் நடராஜ் சார்..... கலக்கி எடுக்குறீங்க....உண்மையிலயே நீங்க பெரிய ரசனைக்காரர் தான்... அதுலயும் இந்த் டொர்ரி டொர்ரி டொமக்க டொர்ரி படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்....எங்கேந்துய்யா இதெல்லாம் உங்க நியாபகத்துக்கு வருது... BTW அது என்ன படம்... நெட்டுல தேடி கண்டேபுடிக்க முடியல.....
Deleteநன்றி க்ரிஷ்..நீங்க ஐக்ரிஷ்ஷா? டொரி டொரி படம் தென்றல் சுடும். முகத்தில தழும்போட ராதிகா வருவார்..
DeleteThanks man!!! got it.... youtube la "dhoori dhoori" nu irukku...
DeleteAdhellam ok.. aama adhenna "நீங்க ஐக்ரிஷ்ஷா?"
விஜய்சாந்திக்கு ராணிபாட்டை இல்லையா? ராஜபாட்டைதானா? :)
ReplyDeleteநல்லா இருக்கு பாஸ்.. முரளிக்கண்ணன் முன்பெல்லாம் இப்படி எழுதுவார்.. அந்த நினைவு வந்தது
எனக்கு வைஜெயந்தி ஐ.பி.எஸ் சுத்தம நினைவிலில்லை.. சத்ரு டிவியில் 10 தடவ பார்த்திருப்பேன்
போலவே, மீசைக்காரன்னு ஒரு படம். திண்டிவனம் எம்.ஆர்.எஸ்ஸில் 75 நாள் ஓடுச்சு.. ராஜசேகர்ன்னு நினைக்கிறேன்
ருத்ராவெல்லாம் விஜய்சாந்தி நடிச்சிருந்தா பட்டையை கிளப்பியிருக்கும். ஆனா அதுல ஹைலைட் பாக்யராஜ்தான் :))
தொடருங்க
//விஜய்சாந்திக்கு ராணிபாட்டை இல்லையா? ராஜபாட்டைதானா? :)//
Deleteகார்க்கி மொக்கைக்குச் சரியான தண்டனை = ஒரு நாள் இல்ல ஒரு நாள், விஜயசாந்தி கிட்ட புடிச்சிக் குடுத்துற வேண்டியது தான்!
அட, ரஜினிய விடுங்க, கவுண்டரே பம்முனாருய்யா, அம்மிணி கிட்ட:))
ஆமா கார்க்கி, முரளி செமையா எழுதுவார்..சரியான இன்ஃபர்மேசன் கொடுத்துருப்பார்..எனக்கும் சத்ருவே ஃபேவரைட்..
Deleteருத்ரா ‘நிகிதா”வோ என்னவோ ஒரு ஃப்ரென்ச் படத்த சுட்டு பலர் எடுத்ததுல ஒரு வெர்ஷன்.
மீசைக்காரன் ஸ்பெஷல் ஃபீச்சர் குமுதத்துல எல்லாம் வந்தது நினைவிருக்கு..
KRS..”சிரிச்சாப்போல கொடுத்தாத்தான் வாங்கிக்குவோம்” சீன் தானே ;))
Deleteஎழுத்தை மிக ரசித்தேன் பாஸ்....
ReplyDeleteநன்றி வேதாளம் :)
Deleteஎஞ்சோட்டு வாலிபர்கள்(?), வீறுகொண்டு இன்னொரு விண்டோவை ஓப்பன் செய்து அந்த ஜெயப்பிரகாஷ்-மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், ஒரு வார்த்தை. அது யுட்யூபில் இல்லை !
ReplyDelete-sirichi sirichi
நன்றி நன்றி..பேரை சொல்லலாமே..:)
Delete" தாதா சாஹேப் விருதோ, உயிர்ம்மை சுஜாதா விருதோ கொடுக்கப்படாமலிருப்பது காலக்கொடுமை. "
ReplyDeleteSsssssssssssssss
யெஸ்சுங்கிறீங்களா :) போன கமெண்ட்டும் நீங்க தானா?
Delete" விஜயசாந்தி படத்தில் ஹீரோவாக நடிப்பது, ஒருவர் தன் சினிமா கரியரை கந்துவட்டிக்கு அடமானம் வைப்பதற்கு ஒப்பானது "
ReplyDeleteSuper ma..
தேங்க்ஸ் மா ;)
Deleteஇந்த சீரீசின் அடுத்த பதிவுகளில் ராம்கோபால் வர்மா-நாகார்ஜுனா ஜானர் படங்கள், சிரஞ்சீவியின் அல்லுடு மஜாக்காக்கள் என போக நினைக்கிறேன்..உங்கள் நல்லாதரவை பொறுத்து.
ReplyDeletewaiting waiting waiting...
சினிமா பற்றிய பதிவென்றால் முரளிகண்ணன்தான் இப்படி புள்ளி விபரங்களோடு கலக்கலாக எழுதுவார். உங்கள் பதிவும் அவ்வாறே இருக்கிறது. வாழ்த்துகள்.
ReplyDeleteபதிவு - நீ-----------ள--------------மா------------------க இருக்கிறது. இதையே இரண்டாகப் போடலாம். ஆனாலும் விவரங்கள் படிக்க அசுவாரசியமாக இல்லாமல் நன்றாகவே இருக்கிறது!!
புரிகிறது பரிசல் சார்..நம்பமாட்டீர்கள், விஜயசாந்தி பத்தி ஒரு பத்தி தான் எழுதனும்னு நினைச்சேன்..அதுவே ஒரு பதிவு ஆகிடுச்சு..
Deleteஜெமோ பிராண்டுன்னு நினைக்கிறேன் நான்..அவ்வ் ;)
விஜயசாந்தி படத்துல இம்புட்டு விஷயம் இருக்கா? :) நமக்கு செந்தில் சொன்னாப்ல,பொம்மரில்லுல தான் தெலுகு படத்துக்கும் நமக்குமான தொடர்பே தொடங்குது :)
ReplyDeleteசேர்ந்து கட்டடிச்சு பார்த்த படமா என்ன? பொம்மரிலுல ஏதோ மேட்டர் கீது கீத்து ;)
Deleteபிரமாதம்.
ReplyDeleteநன்றி..உங்கள் அளவுக்கு இப்பதிவு ரீச் ஆனது மிகவும் சந்தோஷம்.
DeleteWhatte superb write-up. Pinni pedaledukkareenga!
ReplyDeleteThanks Pavithra..:)
Deleteஆஹா, கட்டுரையாவே சமர்ப்பிச்சுட்டீங்களா? செம.. பூ ஒன்று புயலானது, இது தாண்டா போலீஸ், உதயம் பற்றியும் எழுதுங்க வெரி நீட் :)
ReplyDeleteஆமா, பாட்டாவே படிச்சிட்டேன் ;) எழுதினா கண்டிப்பா உதயம், இ.தா.போ இல்லாமயா?
Deleteஅம்மாடி அம்மோவ் :)) நல்லா எழுதி இருக்கீங்க!!!
ReplyDeleteபிடிச்ச வரிகள quote பண்ணா கமென்ட் ரொம்ப பெருசாகிடும்:)
@dhivyadn
மிக்க நன்றி திவ்யா..முடிஞ்சா கோட் செய்யுங்களேன்..ஒரு சின்ன சந்தோஷம் தான் :)
Deleteசொலிட்டா போச்சு.. :))
Delete//பூஞ்சையான ராஜா கவுன் ஹீரோ என விட்டலாச்சார்யா கல்லா கட்டலாச்சார்யாவாக கோலோச்சின காலமும் உண்டு. //
//ஃபிலிம்நியூஸ் ஆனந்தனே தன் குங்குமப்பொட்டின் மீது சத்தியமாக ஒத்துக்கொள்வார்.//
//“அம்மாடி அம்மோவ்” என்ற வார்த்தை இல்லாத டப்பிங் படம் போல, இந்த கட்டுரை முழுமை பெறாது.//
//எஞ்சோட்டு வாலிபர்கள்(?), வீறுகொண்டு இன்னொரு விண்டோவை ஓப்பன் செய்து அந்த ஜெயப்பிரகாஷ்-மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், ஒரு வார்த்தை. அது யுட்யூபில் இல்லை !//
//சாவதற்கென்றே பிறவி எடுத்த பேக்கு புரபசர்/நீதிபதி அப்பாவுக்கு
விஜயசாந்தி படத்தில் ஹீரோவாக நடிப்பது, ஒருவர் தன் சினிமா கரியரை கந்துவட்டிக்கு அடமானம் வைப்பதற்கு ஒப்பானது.//
//“படத்துல ஹீரோ நீங்க தான். ஆனா போடற ஃபைட்டு உங்களது இல்ல//
//ஹீரோ பொழப்பை ஓட்டியிருக்கிறார்//
கம்பன் வழியில் சொன்னதும் அருமை.. :)
@dhivyadn
யப்பா, என்ன ரசனை! // இந்த ட்ராக் சூட் என்று ஒரு வஸ்திரம் இருக்கிறதே, அதில் அவ்வளவு பாங்காய் இருப்பார். வெளிர்மஞ்சள் ட்ராக் சூட்டில், முழுக்கையை முக்கால் கைக்கு தள்ளிவிட்டுக்கொண்டு, ஒரு குதிரைவால் (அதான் ponytail) போட்டுக்கொண்டு,// சரியாத்தான் பேரு வெச்சிருக்கீங்க உங்க ப்லாகுக்கு :-)
ReplyDeleteரொம்ப நல்ல பதிவு :)
amas32
மிக்க நன்றி மேடம் :)
Deleteஇதைப்படித்தவுடன் அசுவினி நாச்சப்பா இவரை இமிட்டேட் செய்து நடித்த ஒரு படம் நினைவில் வருகிறது பெயரில்லாமல் ................சுவாரசியமாக எழுதுகிறீர்கள்
ReplyDeleteமிக்க நன்றி கிச்சா :) அஸ்வினி அஸ்வினி என்றே ஒன்று நடித்தார்..ஆம் அதுக்கு பின் குப்பையாய் அரைடஜன் படங்கள்..:)
Deleteஅட்டகாசமான பதிவு, எத்தனை விஷயங்களைக் கவனித்திருக்கிறீர்கள் என்கிற வியப்புதான், நகைச்சுவை பொங்கும் நடையில் சுவை குன்றாமல் எழுதுகிறீர்கள், பாராட்டுகள், தொடர்ந்து பின்னுங்கள்!
ReplyDeleteஇப்படிக்கு,
இந்தப் படங்களில் ஒன்றைக்கூடப் பார்த்திராத அப்பாவி,
என். சொக்கன்,
பெங்களூரு.
ஒரு ஆத்தரிடமிருந்து இவ்வார்த்தைகள் வருவது கண்டு ரியலி ஹானர்ட் சொக்கன் சார்..:) முடிந்தவரை முயற்சி செய்கிறேன் (இது கரெக்ட்டா :))
Deletesooperu!
ReplyDeleteபதிவில் "சப்பாத்தி பையாக்கள்" போலச் சிரிச்சிக்கிட்டே வந்தேன்...
கடேசீல, தலைவரைப் பின்னாடி இருந்து அடிச்ச அடி...back to those days!
மிக்க நன்றி KRS..ஆமா, எழுதும்போதும் நானும் back to those days..Infact, I perenially live in them :)
Deleteஅருமை..அருமை.வைஜெந்தி ஐபிஎஸ் பார்த்த நினைவுகளை மீட்டெடுத்துவிட்டது...குறிப்பாக அந்த டிராக் ஷூட் காட்சிகள்..ஹி..ஹி... அந்த படம் கிரண்பேடியின் கதைன்னு கூட அப்போ ஒரு கதை இருந்துச்சு.
ReplyDelete//அவரின் ஒரு புகைப்படம் கூட இணையத்தில் கிடைக்காதது அவர் கரியர் கிராஃபின் பதத்துக்கு ஒரு சோறு// இதுலாம் செம நச்சு...இது உங்கள எழுத்துநடைக்கு ஒரு சோறு
இவ்ளோ நாள் பதிவு எழுதாம வேஸ்ட் பண்ணிட்டீங்களே. அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்.
விஜயசாந்திக்கு பிறகு சக்க போடு போட்ட டப்பிங் படங்கள நம்ம டாக்டர் ராஜசேகரோடது.அவரை பற்றியும் எழுதுங்க “ஸ்பாட்டு வச்சிடுவேன்” ;))
ட்ராக் சூட்ல்லாம் நான் எழுதினது பெருசில்லை..நீங்க நினைவு வெச்சு associate செய்றீங்களே..அதாவது படிப்பவர் தான் முக்கியம் :)
Deleteஆமா வேஸ்ட் பண்ணிட்டேன். ஆனா, என் சட்டி சிறியது. பெரிய வாசிப்பனுபவமோ, விஷய ஞானமோ இல்லாததுனால ரொம்பல்லாம் இழக்கல..இலக்கியம்லாம் படைச்சிருக்க மாட்டேன் முன்னாடி வந்துருந்தாலும் ;)
ராஜசேகர் பத்தி நாடி நரம்பு புடைக்க (கைல தான் ;)) எழுதறேன்..
வைஜெயந்தி ஐபிஎஸ்க்கு பிறகு அவரது படங்களை முதல் வாரத்திலேயே பார்த்துவிட துடிக்கும் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது ! அதே காலகட்டத்தில்தான் தெலுங்கு அதிரடி படங்கள் தமிழகத்தில் வெற்றிநடைப்போட்டன உதா இதுதாண்டா போலீஸ் எங்கடா உங்க எம்.எல்.ஏ எவனாயிருந்தா எனக்கென்ன :)) #செம
ReplyDeleteஎக்சாட்லி..நான் சொல்ல வந்த விஷயமும் இதே..:)
Delete@ஆயில்ஸ் : அதுக்கபறம் ஒரு காலகட்டத்துல சுரேஷ்கோபி படத்தலாம் டப்பிங் பண்ணி டார்ச்சர் பண்ணாங்க :))
ReplyDeleteஆமா,’கமிஷனர்’ இன்ன பிற. அவரு ஒரு சின்ன சந்தனப்பொட்ட வெச்சுக்கிட்டு விறைப்பா காக்கி ட்ரெஸ்ல “பக்ஷே ஆறாங்கிலும் சவட்டிக்களையும்”ங்கிறத, இவனுங்க “யாரா இருந்தாலும் வெளுத்துக்கட்டுவேன்”ன்னு டப் பண்ணுவாய்ங்க ;)
Delete"Ivan dhanda Police", "Naan Dhanda MLA" - Ivayium adhe kaalathu padangal. Pathivu nandru.
ReplyDeleteஆமா கரெக்டு..மிக்க நன்றி :)
Deleteஉங்களின் இரண்டாம் பதிவை மிக எதிர்பார்த்திருந்தேன்.. எதிர்பார்ப்பை பொய்யாக்கவில்லை சகா..
ReplyDeleteஅருமை..அட்டகாசம்.. அதகளம்..
ஹாட்ரிக் ஹிட்'டிற்கு வாழ்த்துக்கள்.!!
அய்யிய்யோ, அதுல்லாம் கஷ்டம் பாஸு..உண்மைல நேத்திக்கு நைட் இதை போட்டுட்டு கொஞ்ச நேரம் கிணத்துல கல்லு போட்ட மாதிரி இருந்துச்சு..பத்தாததுக்கு மந்த்ரா இது அதுன்னு ஒரு பதிவு வேற பீக்ல..அவுட்டுன்னு நினைச்சேன் :)
Deleteஇவ்வளவு சுவராஸ்யமாக டப்பிங் படங்களை பற்றின கட்டுரை இதுவாதான் இருக்கும் . கலக்கல். கண்டிப்பா தொடருங்க
ReplyDelete//பாடியோ, லேங்குவேஜோ, பாடி லேங்குவேஜோ சுத்தமாக இல்லாத நடிகைகளை போலீஸ் ட்ரெஸ்ஸில் //
//வெளிர்மஞ்சள் ட்ராக் சூட்டில், முழுக்கையை முக்கால் கைக்கு தள்ளிவிட்டுக்கொண்டு, ஒரு குதிரைவால் (அதான் ponytail) போட்டுக்கொண்டு, அல்லக்கை ஹீரோவோடு ஜாகிங் போகும் அழகிலேயே ரசிகன் சொக்கிப்போவான். //
இப்படி பாராட்ட எல்லா வரியும் போட்டுருலாம் ..
எனக்கு புடிக்காத ஒரே வரி தான் . //அல்லக்கை ஹீரோ ரோலுக்கென்றே பிறவி எடுத்த வினோத்குமார் என்ற நடிகர் உண்டு./// புடிக்காத காரணம் அது என்னோட பேருங்கறதாலே மட்டும்தான் :-))
மிக்க நன்றி அல்டாப்பு :) உங்கள் ரசிப்புக்கு வந்தனங்கள்..
Deleteஉண்மையில் அந்த வினோத்குமார் ஒன்றும் ஏப்பைசாப்பை அல்ல, நல்ல ஸ்மார்ட் தான்..:)
பதிவு நல்லா இருக்கு சார்.. << 3. குரல். ஒரு முரட்டு போலீஸ் கதாபாத்திரத்துக்கு சாஃப்ட்டான நடிகை சரிதாவின் குரல் செட்டாகும் என கண்டுப்பிடித்தவனுக்கு தாதா சாஹேப் விருதோ, உயிர்ம்மை சுஜாதா விருதோ கொடுக்கப்படாமலிருப்பது காலக்கொடுமை. விஜயசாந்தி வாயில் இருந்து தேனாய் “இல்லாட்டி போனா, உன்ன இங்கியே அடிச்சு மர்டர் செஞ்சு” என சரிதா பேசினால், அவ்வளவு பாங்காய் ஒத்துப்போகும்.>> செம .. செம..!!
ReplyDelete-ஐகில்லி..!!
நன்றி கில்லி :)
DeleteSuper!
ReplyDelete:)) nejamave rasanakaranya neeru . Very nice write up. Looking forward the rest.
ReplyDeleteமிக்க நன்றி சிங்கை நாதன் சார்..:)
Deleteநட்டு, முதல் ரெண்டு இன்னிங்ஸ்களில் ரெண்டு செஞ்சுரி அடிச்சாச்சு, அசாருதீன் மாதிரி மூணாவது இன்னிங்ஸிலும் செஞ்சுரி அடிக்க வாழ்த்துகள்.
ReplyDelete//முடிந்தவரை முயற்சி செய்கிறேன் (இது கரெக்ட்டா :))//
இல்லைன்னு நினைக்கிறேன். முயல்கிறேன் என்பதுதான் சரியான பதமென நினைக்கிறேன்
நன்றி ஸ்ரீராம் :) கஷ்டம் தான், சட்டில சப்ளை ரெம்ப கம்மி :)
Deleteசொக்கன்தான் சொன்னார், முயல்கிறேன், முயற்சிக்கிறேன் ரெண்டுமே தப்பாம்..அத ஞாபகம் வெச்சுத்தான் கரெக்டான்னு கேட்டேன்..
ஓ அப்படியா, நான் பதிவெழுத ஆரம்பித்தபோது ஒருத்தர் வந்து சொன்னார் முயல்கிறேன் என்பதுதான் சரி என்று. சொக்கன் அவர்களின் விளக்கத்துக்காக மீ டூ வெயிட்டிங்..
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
சொக்கன் ட்விட்டரில் கொடுத்த விளக்கம் :)
DeleteIf I can take the liberty, please use 'முயற்சி செய்கிறேன்’, there is no word called 'முயற்சிக்கிறேன்’ / ‘முயல்கிறேன்’ in tamil :) ofcourse முயற்சிக்கிறேன் / முயல்கிறேன் is used heavily, Incorrect.
முயல் / முயல்தல் என்பதுதான் வினைச்சொல், அதிலிருந்து ‘முயல்கிறேன்’ என்ற வார்த்தை வந்திருக்கலாம். ’முயல்’க்கு இருக்கும் இன்னோர் அர்த்தத்தைக் கருத்தில் கொண்டால், முயற்சி செய்கிறேன் என்று கொஞ்சம் தெளிவாகச் சொல்லிவிடுவது நல்லது.
Deleteஆக, ‘முயல்கிறேன்’, ‘முயலுகிறேன்’ என்பவை ஒருவேளை சரியாக இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை, ஆனால் ‘முயற்சிக்கிறேன்’ என்பது கண்டிப்பாகத் தவறு, ஏனெனில், ‘முயற்சி’ என்பது வினைச்சொல் அல்ல, ’முயற்சித்தல்’ என்பது ’கூகுளுகிறேன்’ என்பதுபோல் :) ‘கூகுள் மூலம் தேடுகிறேன்’ என்று சொல்வதுதான் சரி.
Englishல் ‘Googling' is now accepted by some, அப்படித் தமிழிலும் ‘முயற்சிக்கிறேன்’க்கு அங்கீகாரம் தரலாம்? யார் தரலாம்?
எனிவே, எனக்கு ’முயற்சிக்கிறேன்’ என்பது படிக்கும்போதே கொஞ்சம் கரடுமுரடாக இருக்கிறது, ‘முயற்சி செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டுப்போகிறேன் :)
On second thoughts, 'முயன்றான்’ வழக்கத்தில் உள்ளது, ‘முயல்கிறான்’ல் என்ன தப்பு? குழப்பம்!
Delete//On second thoughts, 'முயன்றான்’ வழக்கத்தில் உள்ளது, ‘முயல்கிறான்’ல் என்ன தப்பு? குழப்பம்//
Deleteஅதானே?
எங்கள் தெலுங்குலக தானை தலைவியை எந்த இடத்திலும் லேடி சூபபர்ஸ்டார் என்பதை குறிப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறோம் . இவர் தான் ஏஞ்சலினா ஜோலிக்கே ரோல் மாடல் என்பதையும் இங்கு தெளிவு படுத்த கடமை படுகிறேன் .. மற்றபடி உங்கள் பதிவு ச்சால பாகுந்தி
ReplyDeleteஅட ஆமாம்ல..லேடி சூப்பர்ஸ்டார்..ரொம்ப நன்றி அனானி :)
Deleteமிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். கலக்கல்
ReplyDeleteமிக்க நன்றி முரளி சார்..உங்கள் நீண்ட நாள் ஃபேன் நான்..ஒரு டஜன் பேராவது இதுவரை உங்களை நினைவுக்கூர்ந்து என்னிடம் சொன்னார்கள்..:)
Deleteபெயரைப் பார்க்காமலிருந்திருந்தால் "சுஜாதாவோ?" வென நினைக்க வைக்கும் சிறப்பான பதிவு. Great Job! Keep posting.
Deleteசுவாரசியமான எழுத்து நடை. நிறைய எதிர்பார்கிறோம்.
ReplyDeleteநன்றி ராஜ்..
Deleteமூத்த பதிவர் அய்யனாரின் ட்விட்டர் வாழ்த்துகள்..அவருக்கு என் நன்றிகள்..
ReplyDeleteAyyanar Viswanath @ayyanar
@NattAnu 90 களின் டப்பிங் படங்கள் குறித்த பார்வை நன்று. பல விஷயங்களை நுணுக்கமாக கவனித்திருக்கிறீர்கள். தொடருங்கள்
மூத்த பதிவர் பெனாத்தல் சுரேஷின் ட்விட்டர் வாழ்த்துகள்..அவருக்கு என் நன்றிகள்..முதன்முதலில் வந்த வாழ்த்து இவருடையதே..
ReplyDeletepenathal suresh @penathal
@NattAnu ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. படிக்கும்போது கான்ஸ்டண்ட் புன்னகை, அவ்வப்போது வெடிச்சிரிப்பு!
நான் மிகவும் சிலாகிக்கும் ஐகாரஸ் பிரகாஷ் மற்றும் டாக்டர் விஜய்யின் (ஸ்கேன்மேன்) வாழ்த்தூஸ்..
ReplyDeleteVijay @scanman
#MustRead "@paval பின்னி பெடலெடுத்திருக்கான்யா & @icarusprakash எந்த புத்துல எந்த பாம்புன்னே சொல்ல முடியலை" @NattAnu http://kushionline.blogspot.in/2012/05/1.html
மிக சுவாரஸ்யமான பதிவு . .
ReplyDeleteநன்றி
"அந்த ஜெயப்பிரகாஷ்- மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், "
உதய பிரகாஷ் என்று நெனெக்கிறேன் . .
நன்றி குரங்குபெடல்..ஆமா, உதயபிரகாஷ் தான்..மாத்திடுறேன் :)
Deleteஅண்ணே இந்த படத்த திருநெல்வேலி சென்ட்ரல் நானும் என் அண்ணனும் பார்த்தோம். நல்ல ஞாபக சக்தி உங்களகளுக்கு, எல்லாத்தையும் கோர்வையாக நகைசுவையாகஎழுதி இருக்கேங்க.
ReplyDelete//விஜயசாந்தி படத்தில் ஹீரோவாக நடிப்பது, ஒருவர் தன் சினிமா கரியரை கந்துவட்டிக்கு அடமானம் வைப்பதற்கு ஒப்பானது.//
ராம்கி கண் முன் வந்து சென்றார்... :)
மிக்க நன்றி விஜய் :) ஆமா, ராம்கியும்..
Deleteவைஜயந்தி IPS தான் நான் பாத்த முதல் டப்பிங் படம்... அந்த படத்துல விஜயசாந்திய வில்லன் கோஷ்டி அடிச்சு போட்டுடும்... பாவம்.... நானும் ஏன் Friend'ம் கண்ணீர் விட்டு அழுதோம்... அவங்க எப்படா எழுந்துப்பாங்க... அந்த வில்லன எப்ப போட்டு தள்ளுவாங்கன்னு வெறியோட படத்த பாத்தோம்..... உங்க பதிவ படிச்சதும் படம் அப்படியே கண்ணு முன்னால ஓடுது... :-) :-)
ReplyDeleteநன்றி உமா..திடீர்ன்னு இன்னிக்கு எப்படி என் ப்ளாகுக்கு வந்தீங்க :)
Delete//வீறுகொண்டு இன்னொரு விண்டோவை ஓப்பன் செய்து அந்த ஜெயப்பிரகாஷ்-மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், ஒரு வார்த்தை. அது யுட்யூபில் இல்லை !//
ReplyDeletehttp://freemoviemusti.blogspot.com/2012/03/meena-gangrape-from-vyjayanthi-ips.html
#சமூக சேவை.... கொஞ்சம் சீன் தான் :))
தங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை சுபைர் ;)
Deletewas quite relaxing n hilarious.. )
ReplyDeleteThank you Uma :)
Deleteone more class post....! enjoyed....!
ReplyDeleteஇப்பத்தான் படிக்கிறீங்களா பரணி? எனிவே, இப்பவாச்சும் படிச்சீங்களே..நன்றி :)
DeleteEppudi ipdi? Kalakureenga Sir.. Raja post paakka vandhu apdiye ithaiyum paarththen..
ReplyDeleteAmazing write-up.. Will add you in my Reader ...
Below lines are Gems :-))
////பூஞ்சையான ராஜா கவுன் ஹீரோ என விட்டலாச்சார்யா கல்லா கட்டலாச்சார்யாவாக கோலோச்சின காலமும் உண்டு. //
//ஃபிலிம்நியூஸ் ஆனந்தனே தன் குங்குமப்பொட்டின் மீது சத்தியமாக ஒத்துக்கொள்வார்.//
//“அம்மாடி அம்மோவ்” என்ற வார்த்தை இல்லாத டப்பிங் படம் போல, இந்த கட்டுரை முழுமை பெறாது.//
//எஞ்சோட்டு வாலிபர்கள்(?), வீறுகொண்டு இன்னொரு விண்டோவை ஓப்பன் செய்து அந்த ஜெயப்பிரகாஷ்-மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், ஒரு வார்த்தை. அது யுட்யூபில் இல்லை !//
This is top most line.... :-))
//சாவதற்கென்றே பிறவி எடுத்த பேக்கு புரபசர்/நீதிபதி அப்பாவுக்கு
விஜயசாந்தி படத்தில் ஹீரோவாக நடிப்பது, ஒருவர் தன் சினிமா கரியரை கந்துவட்டிக்கு அடமானம் வைப்பதற்கு ஒப்பானது.//
//“படத்துல ஹீரோ நீங்க தான். ஆனா போடற ஃபைட்டு உங்களது இல்ல//
//ஹீரோ பொழப்பை ஓட்டியிருக்கிறார்////
அந்த காலகட்டத்தில் தெலுங்கு படங்களின் போக்கில் ஒரு பெரிய மாற்றத்தினை கொண்டுவந்தபடம் பூஒன்று புயலானது. அது வரை 50 -60 வயசான ஹிரோக்களின் மொக்கை டான்ஸ், குடும்ப செண்டிமெண்ட், அறுவை காமெடி என இருந்த நிலையினை மாற்றியவர் இந்த படத்தின் இயக்குநரே. பூ ஒன்று புயலானது படத்தினை சென்னை நாகேஷ் தியேட்டரில் கூட்டத்தோடு கூட்டமாக பார்த்த நாள் இன்றும் பசுமையாக ஞாபகமிருக்கிறது 8 படித்த கொண்டிருந்த நேரமது. பின்னர் இதுதாண்டா போலீஸ் வந்தது சத்தியம் வளாகத்தில் அன்றிருந்து சுபம் திரையரங்கில் 100 நாட்கள் ஓடி வெற்றிப் பெற்றது அதனை தொடர்ந்தே வைஜியந்தி ips. லட்சியம், ஆட்டோராணி, எவனாயிருந்தா எனக்கென்ன, உதயம் என டப்பிங் படங்களின் ராஜ்ஜியம் தொடர்ந்தது.
ReplyDelete//எஞ்சோட்டு வாலிபர்கள்(?), வீறுகொண்டு இன்னொரு விண்டோவை ஓப்பன் செய்து அந்த ஜெயப்பிரகாஷ்-மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், ஒரு வார்த்தை. அது யுட்யூபில் இல்லை !// :) கலக்குங்க சாரே
ReplyDeleteவைஜயந்தி ஐ.பி.எஸ் படத்தின் வெற்றிக்கு காரணம் விஜயசந்தியின் திமிர் பிடித்த பாத்திரம் தான். ஒரு பெண் என்று தெரியாமல், சண்டை காட்சில் ஆண்களுக்கு சரி சமமாய் சண்டை போடுவார். இந்த படத்தில், பல காட்சிகளில் இவள் மிக சுலபமாக ஆண்களை சண்டையில் வெல்வதை போல் அமைக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteஎனினும் இடைவேளைக்கு முன்பாக வில்லன் கோஷ்டி இவளை கதறி அழுகும் படி அடித்து இவள் பெண் பலவீனத்தை வெளிப்படுத்தும் படியாக ஒரு காட்சி உண்டு. இந்த காட்சி பல ஆண்களின் மனதில் ஒரு திமிர் பிடித்த பெண் சிங்கத்தை ஓர் ஆன் சிங்கம் அடக்கும் சுகத்தை உண்டாக்கியது.
இந்த படம் பிறகு, அணைத்து பெண் போலீஸ் படங்களில் இந்த பாணியில் ஒரு காட்சியாவது இடம் பெரும்.