சிலசமயம் சிலரை, சிலதை காரணமேயில்லாமல் பிடிக்கும். அல்லது பிடித்தபின் காரணத்தை தேடுவோம். எனக்கு இப்பாடல் அவ்வகை.
இப்பாடல், ராஜாவின் எந்த கிளாசிக் லிஸ்டிலும் வராது. ட்விட்டர்க்காரர்கள் சிலாகிக்கும் ’ரேர்’ லிஸ்டிலும் வராது. தாரை தாரையாக நீரெல்லாம் வரவைக்காது (கண்ணில்). இசையருவி, சன்மியூசிக்கில் வராது. அவ்வளவு ஏன், ராஜாவின் கச்சேரியிலேயே பாடப்படுவதில்லை.
அட, இப்பாடல் ‘நீங்க நான் ராஜா சார்”ல கூட வரலை சார்..
”அப்படியென்ன பாட்டு சார், அவ்வளவு நல்லா இருக்குமா” என ஜாக்கிசேகர் ப்ளாகில் வரும் ‘நானே கேள்வி நானே பதில்’ வாசகர் போல் கேட்டீர்களேயானால், அதற்கு ஜாக்கியின் உலகப்புகழ்பெற்ற வார்த்தையை தான் பதிலாக சொல்லவேண்டும். இப்பாடலை விளக்க அந்த ஒத்த வார்த்தையை ஒத்த வார்த்தை இல்லை.
சின்னவீடு படத்தின் ‘அட மச்சமுள்ள’ பாடலே பற்றியே இப்பதிவு. அது வெளிவந்த நாளிலிருந்து எல்லாம் என்னை தொடரவில்லை, படரவில்லை. படம் வந்தபோது நான் பிறந்துவிட்டிருந்தேன் தான். மங்கலாக யார் மடியிலோ தியேட்டரில் பார்த்த ஞாபகம். சாரு அடிக்கடி ‘டயனோசியன் ஸ்பிரிட்’ என ஒரு வெறித்தனமான உற்சாகத்தை சொல்வார். அதை இப்பாடல் எனக்கு வாரிவாரி வழங்குகிறது. என்னை துரத்தி துரத்தி அடிக்கிறது. சுழட்டி சுழட்டி வீசுகிறது. படுத்தி படுத்தி எடுக்கிறது. இப்பாட்டை கேட்கும் போதெல்லாம் சுறுசுறுன்னு வரும். பரபரன்னு இருக்கும். ஜிவுஜிவுன்னு ஏறும்.
அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி பில்ட்-அப்புகள் ஓவர். ஈறுகெட்ட.. என எதிர்மறையாய் நீங்கள் திட்ட ஆரம்பிப்பதற்குள் பாட்டுக்குள் போவோம்.
சில பாடல்கள் மெட்டமைக்கப்படும் போதே அதன் படமாக்கமும் இணைந்தே பயணிக்கும். இப்பாடல் அவ்வகை. ”சார், பாட்டுல என்ன சமாசாரம்ன்னா அத்தினி,பத்தினி,பத்மினி,சங்கினின்னு நாலு கேர்ள்சை ஆடவிடுறோம்” என பாக்யராஜ் கரகர குரலில் சொல்லியிருக்கக்கூடும். ஒரு சிறிய வசன போர்ஷனுடன் சன்னமாக ஆரம்பிக்கும் பாடல், அது முடிந்தவுடன் ரமணனே எதிர்பாராத ஒரு சென்னை பெருமழையாய் சடசடவென அடித்து தீர்த்துவிடும்!!
கண்டிப்பாக இது மெட்டுக்கு போடப்பட்ட பாட்டு தான். ”அட மச்சமுள்ள மச்சான்..நான் புது வித ரகம்..கைய வெச்சா உள்ளே..நீ நினைக்கிற சுகம்” என பல்லவி. இதை யாரும் முன்கூட்டியே கவிதை தொகுப்பில் “நெஞ்சுக்குள்ள உம்ம” அல்லது “கண்ணுக்கு மை அழகு” ரேஞ்சுக்கு எழுதி வைத்திருக்க முடியாது. ட்யூன் போடுகையில் போட்ட டம்மி பல்லவியாக கூட இருக்கலாம். போதுமே, என்ன தேவாரமா பாடுகிறோம்.. வாங்கிய பேமெண்டுக்கு கவிஞர் முத்துலிங்கத்தின் ஓவ்வொரு வார்த்தை மூவ்மெண்டும் மீட்டருக்கும் சிச்சுவேஷனுக்கும் கனகச்சிதம்.
இசை/ஆர்க்கெஸ்ட்ரேஷனுக்கு வருவோம். எனக்கு இசையை விளக்குவதில் நம்பிக்கையில்லை. ட்ரம்பெட் துடிக்க, வயலின் வழுக்க, கஞ்சிரா கதற, ட்ரம்ஸ் தறிகெட்டு ஓட, ஹைவேல மேலே போயி,கீழே வந்து விளக்கங்கள் அலர்ஜி. சுருங்கச் சொல்கிறேன்.
இண்டர்ல்யூட் முழுக்க ராஜாவின் டிரம்மர் ’புரு’ அங்கிள் ராஜாங்கம். (என் அங்கிள் எல்லாம் இல்லை, இசை விமர்சனம்ன்னா உரிமையா இப்படி சொல்லோனும்) . ”பூமாலை ஒரு பாவையானது”இல் “லலலா லலலா..ஆஆஅ..ஆஆ” என எஸ்பிபி முடிக்கையில் ஒரு காட்டடி அடித்திருப்பாரே..அதற்கு சற்றும் குறைவில்லாமல் இதிலும் அடித்திருப்பார். கூடவே ட்ரம்பெட்,வயலின் எல்லாம் LICயில் சிக்னலை பச்சைக்குள் தாண்டிவிடும் வாகனங்களாய் பேயோட்டம் ஓடும்.
சரணத்திற்கான எண்ட்ரியில் தான் ராஜா என்ற ரசவாதியை காணலாம்.
பெரிய ப்ரிட்ஜை “கடகட படபட கடகட படபட”வென சபாபதி T.R.ராமச்சந்திரன் போல் கடந்து முடிந்தவுடன், ட்ரெய்ன் “டிடிக் டிடிக்..டிடிக் டிடிக்” என தன் ஆதார தாளத்துக்கு திரும்புமே..அந்த திரும்பல் போல் அவ்வளவு seamlessஆக, ஐந்தே செகண்டுக்கு ஒரு வயலின் பிட் போட்டு சரணத்துக்கு லீடு அமைத்து கோர்த்திருப்பார் ராஜா..He's an Alchemist, No doubt about it!!
இப்பாடலில் சரணம் ஒரு ப்யூட்டி. சில சரணங்கள், பல்லவிக்கும் அதுக்கும் ஸ்னானப்ராப்தியே இருக்காது. ’சினேகிதனே’வின் “சின்ன சின்ன அத்துமீறல் புரிவாய்” போல.. (மன்னிக்க, வேறு உதாரணம் கிடைக்கவில்லை. ரஹ்மான் காண்டு எல்லாம் கிடையாது என்றால் நம்பனும் :)). ஆனால், இப்பாடல் சரணம், பல்லவிக்கு பின்னால் வெகுபாந்தம், கனபொருத்தம், பல்லவியையும் மிஞ்சிய அழகு, சதாசிவம் பின் நிற்கும் எம்.எஸ் போல்.
இதுவரை பாடகர்களை பற்றி சொல்லவில்லை. சொல்ல சரணம் நல்ல தருணம் (நோட் பண்ணுங்கப்பா..). எஸ்.ஜானகி-SP.சைலஜா என இரு பாடகிகள் காம்பினேஷன். “என்னைக்கும் இல்லாம இன்னைக்கு உன்மேல அஆசை” என ’ஆசை’யில் மேலதிகமாய் அரைமாத்திரை போட்டு போதைமாத்திரையாய் ஆரம்பிப்பார் ஜானகி. அதுக்கே ஹெட்ஃபோன் காசு போச்சு! அடுத்தவரியில் சன்னமாக ”எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாண பூசை” என SP.சைலஜா தொடர்வார். பாடல் முழுவதும் எஸ்.ஜானகி பேயாய் அடிக்க, சைலஜாய் அழகாய் ஸ்ட்ரைக் ரொடேட் செய்து காஜி விட்டுத்தருவார். இந்த ஆசை,பூசைக்கு பிறகு ஒரு சின்ன ம்யுசிக் வரும். அதில்லாமல் அவ்வரி முழுமையடையாது என்பதை போல். ராஜாவின் பாடல்களில் வரிகளையும்,இசையையும் பிரிக்கவே இயலாது. நீங்கள் ஹம் செய்தால் ம்யூசிக்கோடு சேர்ந்தேதான் செய்யவேண்டும்.
முதல் சரணம் முடிந்துதான் எஸ்பிபி எண்ட்ரியே. ஒரு சமீப பேட்டியில் பாடகர் ஹரிசரண் சொன்னார் ’ஒரு காலக்கட்டத்தில் எஸ்பிபி சாருக்கு குரல் பட்டுமாதிரி வழவழன்னு இருக்கும்’ என. அக்காலக்கட்டம் இதுவாய்த்தான் இருக்கவேண்டும். உண்மையில் சொல்கிறேன். இப்பாடல் போல் இனிமையாக நான் எஸ்பிபியை எதிலுமே கேட்டதில்லை. அவரின் எல்லாப்பாடல்களைப் போலவும் இதில் டைனமிக்ஸ்/குரல்சேட்டைகள் சிறப்பு தான். ஆனால் இதில் குரல்தான் ஹைலைட்.
இப்பாடலில் இந்த மூன்று பாடகர்கள் தவிர இன்னொரு மகானுபாவர் உண்டு. அவர் இல்லாவிடில் இப்பாடலுக்கு தனித்துவம் இல்லை என்பது என் துணிபு. அவர் டிவிஜி. கர்னாடக வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன். இப்பாடலுக்கான விசிட்டிங் கார்டான ‘நாகிர்தனா திரனனா” என்ற மறக்கவே முடியாத ஜதிக்கோர்வையை பாடியவர். வெங்கட்பிரபு கோவாவில் மறுபடி பிரபலமாக்கியது. ராஜபார்வை அந்திமழை முதற்கொண்டு பல ராஜா பாடல்களில் இவருண்டு. நாகிர்தனாவும் புதிதல்ல. டிக் டிக் டிக்கில் ‘இது ஒரு நிலாக்காலம்’ பாடலில் மாதவி ஆட்டத்தில் இன்னொரு அமர்க்களமான நாகிர்தனாவும் உண்டு. அதை இங்கு காணலாம்.
சிலசமயம் பவுலர்கள் ஒன் டவுன் இறங்கி கலக்குவார்களே..அதுபோல் பல்லவியிலேயே பாட்டின் மூடை புரிந்தோ, புரியாமலோ “நாகிர்த்னா திரனா.. தகதிமிதா” என்பதுபோல் பல்லவியின் ஒவ்வொரு வரிக்கும் கவுண்ட்டர்களாக அடி வெளுப்பார். பல்லவி முடிந்தவுடன் “நாகிர்தனாஆஆ.. திரனனா” என இழுத்து ஆரம்பிப்பார் பாருங்கள், வாவ்வ்..அதற்கு கூடவே மோர்சிங்,மிருதங்கம் என தொடரும் குறும்பான இசை..தலப்பாக்கட்டில ரவுண்ட்கட்டின கேபிள்சங்கர் சொல்வது போல் ம்ம்ம் டிவைன் !!
எனக்கு இதுதான் சந்தேகம். இதில் டிவிஜி அவர்களை உள்ளே நுழைக்கவேண்டும் என்ற எண்ணம் எங்கே வந்தது? ஏன் வந்தது? எப்படி வந்தது? எப்போது வந்தது?
டிவிஜியின் ஜதிகள் இல்லாமலும் இப்பாடலுக்கு ஒரு முழுமை உண்டுதான். ஆனால், டிவிஜி இல்லாது இப்பாடல் இல்லை. இதென்ன முரண்?
இங்கு தான் ராஜாவின் ஜீனியஸ்சை உணர்கிறேன்.
இப்பாடல் ஹீரோ கனவில் காணும் ’சமாசாரமான’ பாடல். அதே சமயம் ஒரு psychedelic அனுபவத்தை, கிட்டத்தட்ட சொப்பனஸ்கலித அனுபவத்தை மிக பாலீஷாய் இசையில் தரவேண்டும். இப்போது டிவிஜியின் ஜதிகளை பொருத்திப்பாருங்கள். இதைவிட கிளாசாய் இவ்விஷயத்தை வெளிக்கொணர முடியாது. குஷியின் ‘கட்டிப்புடி’ வரை இப்பாணி கடைப்பிடிக்கப்படுகிறது.
என்னைப்பொருத்தவரை இது ஒரு கல்ட் பாடல். ’அம்மா என்றழைக்காத’, ‘கண்ணே கலைமானே’,’அஞ்சலி அஞ்சலி அஞ்சலி’ போன்ற வாகான சிச்சுவேஷன் பால்கள் வராவிட்டால் என்ன, எந்த பாலையும் ஃபோருக்கு விரட்டும் மாயம். ராஜமாயம்.
அமரன் சமீபத்தில் சொன்னார் “நாங்க பார்க்காத பார்ட்டியா? ஒரு கட்டத்துல்ல அண்ணன் குடி,பார்ட்டி,கொண்டாட்டம் எல்லாத்தையும் விட்டுட்டார்”.
இப்பாடலை ராஜா கொண்டாட்டமாய் வாழ்ந்த காலத்தில் தான் போட்டிருப்பார்.
பி.கு: இப்பாடலின் கேசட் கவர் இங்கே காணலாம். தந்துதவிய எழுத்தாளர் சொக்கனுக்கு நன்றி. முதல் ராஜா படமும் அவரிடமிருந்து சுட்டது தான் :-)
http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers/157/3/1/1
டிக்டிக்டிக் நாகிர்தனாவை ஞாபகப்படுத்தி லின்க் தந்த நண்பர் @vinaiyookiக்கும் நன்றி..
good write up. after reading your observation, I have decided to spend my time with this song today...headphone கதறுர வரைக்கும் கேட்கலாம்னு decided
ReplyDeleteThanks. Did you do it? How did you like the song :)
Deleteபதிவை, ரொம்ப இன்பமாச் சிரிச்சிக்கிட்டே வாசிச்சி முடிச்சேன்!:)
ReplyDeleteஒலகத்துல ஒன்னு ஒன்னு இன்பம், ஒவ்வொரு கட்டத்துல!
அது ஏன்? -ன்னே புரியாது; ஆனா இன்பம்!
பல புரிதல்களுக்கு இடையே, அந்தப் "புரியாமை" தான் இன்பம்!:)
ஆயிரம் சொல்லு போட்டு எழுதுங்க = புரிஞ்சீரும்!
ஆனா நாக்ரு-தன ; திர-ன்னன?
புரியாமலேயே, ஏதோ ஒன்னு, உந்துது-ல்ல? அதான்:)
அதுக்காக, மொத்த பாட்டையும் அப்படியே எழுதுனாப் புடிக்காமப் போயீரும்:)
Like cabaret - one by one - and suddenly...
திடீர்-ன்னு எகிறும் போது தான் இன்பம்! அதுக்காகச் சொல்ல வந்தேன்-ய்யா! என்னய சந்தேகக் கண்ணோடு பாக்காதீக:)
இசையும் அப்படியே!
திடீர்-ன்னு எகிறும் போது, இசை இன்பம்! வாலிப இசை இன்பம்:)
------------
This is my special song; அதுவும் பள்ளிக் கூடத்துல, வெவரங் கெட்ட வயசுல, இதை hum பண்ணா, mood கிளம்பும்:)
நாக்ரு-தன ; திர-ன்னன = அப்படியே ஏறுது, இறங்குது - தெரியுதா?:)
நாக்ரு-தன = ஆரோகணம் (ஆரோசை)
திர-ன்னன = அவரோகணம் (அமரோசை)
School பசங்க வந்து மார்க்கமா ஏதோ சொல்லுவானுங்க (அ) காட்டுவானுங்க!
wow, sooperu da, pattaiya keLapputhu இதெல்லாம் இப்போ பேசிக்கறது! அப்போ நான் அடிக்கடிச் சொல்வது: நாக்ரு-தன ; திர-ன்னன!
எப்ப சந்தோசப்பட்டாலும், தலையாட்டி, ஒரு சிரிப்போட உச்சரிக்கும் மந்திரம் = நாக்ரு-தன ; திர-ன்னன!
செந்தூர் முருகனை மொதல்ல பாத்த போது, பள்ளி வயசு; அப்பவும் என்னை அறியாமல் வந்த வார்த்தை = நாக்ரு-தன ; திர-ன்னன:))
இப்ப நினைச்சா எனக்கே வெட்கமா இருக்கு:)
Hey,
DeleteGlad u made a special mention abt TVG!
இதே மெட்டு-Catchword, டிக் டிக் டிக் படத்துலயும் வரும்!
இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனாக்காணும்
-ன்னு பாட்டுல, நடுவுல வரும் ஆவர்த்தனம்! மாதவி dance! அதுலயும் same buzz! same TVG!
பரத நாட்டிய நட்டுவாங்கம்-ன்னு நினைக்கிறேன்!
இப்படி விரக நாட்டிய நட்டுவாங்கம் ஆவும்-ன்னு நினைச்சிக் கூடப் பாத்துருக்க மாட்டாங்களோ?:)
--------
//இசையை மார்க்கமாக கொண்டவர், ஒரு மார்க்கமான இசையை தரவேண்டிய சூழல்//
:)
Liked many lines like this, as I was reading the post;
and also sabapathy bridge example!
//இசையை விளக்குவதில் நம்பிக்கையில்லை.
ட்ரம்பெட் துடிக்க, வயலின் வழுக்க, கஞ்சிரா கதற, ட்ரம்ஸ் தறிகெட்டு ஓட, ஹைவேல மேலே போயி, கீழே வந்து விளக்கங்கள் அலர்ஜி//
:)))
சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை!
இசைக் கலையும் கூட;
ஆனா ரெண்டு கலையும் = செய்வது ஒரு இன்பம்; பேசுவது இன்னொரு இன்பம்!:)
ட்ரம்பெட் துடிக்க, வயலின் வழுக்க எல்லாம் அந்த ரெண்டாம் ரகம்-ய்யா! மன்னிச்சி வுட்டுரு எங்களை:)
//எஸ்பிபி முடிக்கையில் ஒரு காட்டடி அடித்திருப்பாரே//
காட்டு அடி = one word says it all!
நாக்ரு-தன ; திர-ன்னன!
//செந்தூர் முருகனை மொதல்ல பாத்த போது, பள்ளி வயசு; அப்பவும் என்னை அறியாமல் வந்த வார்த்தை = நாக்ரு-தன ; திர-ன்னன:))//
Deleteகாலாங்கார்த்தால இதெல்லாமா கண்ணுல படணும்!!!
சூப்பர் கேயாரெஸ்..ஸ்ரீரங்கத்து தேவதைகள்ள ஒரு கதைல (திண்ணான்னு நினைக்கிறேன்) சுஜாதா சொல்வார் “மாமி..இதுபோல் டிபன் சௌரியம்லாம் இருக்கும்னா நான் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைக்கிறேன்”..அது மாதிரி, இதுமாதிரியான கமெண்ட் சௌரியம்லாம் இருக்கும்னா, நான் இன்னும் நிறைய எழுதலாம்னு நினைக்கிறேன் :))
Deleteகார்க்கி - கேயாரேஸ் ஒரு மூட்ல பேசிட்டிருக்காப்லய்யா :))
ஒரே ஒரு பாடல்! அதற்கு இவ்வளவு பெரிய & அருமையான வியாக்கியானம். சூப்பர் :-)நீங்கள் கண்டிப்பாக முனைவர் பட்டத்தை பகுதி நேர படிப்பாகக் கொள்ளலாம். அவ்வளவு ஆராய்ச்சி திறன்! அதனை இரசனையோடு செய்வது தான் படிப்பவர்களை படிக்கத் தூண்டுகிறது :-) நல்ல பதிவு. வாழ்த்துகள் :-)
ReplyDeleteamas32
மிக்க நன்றிம்மா..ரொம்பல்லாம் ஆராய்ச்சில்லாம் இல்ல to be honest :))
Deleteசூப்பர் நட்டு
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நன்றி ஸ்ரீராம்..நலமா :)
Deletewell analysis on another dimensions, keep continue...
ReplyDeleteThank you, Vijayakumar..
Deleteநீங்க ரசனக்காரர் தான். ஒரு பாட்டயே இவ்ளோ விலாவரியான்னா :-) தங்கள் சேவை தமிழ்நாட்டுக்குத் தேவை.
ReplyDeleteநன்றி ஜெகன் :)
Deleteவாவ்!
ReplyDeleteநல்ல அலசல்.. மீண்டுமொரு முறை முழுதும் படித்து பார்த்தேன்... இப்பாடலை பிரிந்து மேய்ந்திருப்பதுபோல் தெரிந்தாலும், இவ்வளவு விஷயங்களை சொருகி இருக்கிறீர்களே... எப்படி என வியக்கிறேன்..
நல்ல ஃப்ளோ... டீக்கடையில் நண்பர்களுடன் பேசிப் பகிர்ந்து கொள்வதைப்போன்ற உணர்வு இருந்தது.
//பாக்யராஜ் கரகர குரலில் சொல்லியிருக்கக்கூடும்//
//‘டயனோசியன் ஸ்பிரிட்’ என ஒரு வெறித்தனமான உற்சாகத்தை சொல்வார்.//
//ரமணனே எதிர்பாராத ஒரு சென்னை பெருமழையாய்//
//ட்ரம்பெட் துடிக்க, வயலின் வழுக்க, கஞ்சிரா கதற, ட்ரம்ஸ் தறிகெட்டு ஓட, ஹைவேல மேலே போயி,கீழே வந்து விளக்கங்கள் அலர்ஜி.//
//LICயில் சிக்னலை பச்சைக்குள் தாண்டிவிடும் //
//டிக் டிக் டிக்கில் மாதவி ஆட இன்னொரு அமர்க்களமான நாகிர்தனாவும் உண்டு//
அதகளம்!
வாழ்த்துகள் நட்டு!
நன்றி சார்..ஃபர்ஸ்ட் தபா நம்ம கடைக்கு வர்றீங்களோ :)
Deleteஇசைக்கட்டுரைக்கு ஏற்ற மொழிநடை.. சூப்பர். பாட்டை கேட்டே ஆகணும் போலையே:-)
ReplyDeleteபாட்டை கேட்டீங்களா இல்லையா :)
Deleteபாட்டு முடிஞ்சவுடனே யூட்யூப் சில சஜெஷன்ஸ் காட்டுது பாருங்க... ம்ம்..டிவைன் :))
ReplyDeleteபிகு: ங்கொய்யால.. எல்லோரும் பாராட்டியே சொன்னா எப்படி? அதான்
ஆமா கார்க்கி..தங்ஸ் பொறுமையா பாட்டை கேட்டு முடிச்சா, இந்த சஜெஷன்ஸ் வருது..என்ன ஒரு பார்வை பார்த்தாள் பாருங்க :-))
Deleteசரி சரி, அதுக்கப்புறம் நாங்க கேட்கலை, நடக்கட்டும் ;)
Deleteம்க்கும்..முறைச்சது தான் நடந்துது ;)
Deleteஅதகளம்...ஒரே வார்த்தை...
ReplyDeleteஇதேபோல இன்னும் நல்ல சிறப்பான கில்மாப் பாடல்களுக்கும் தொடர்ந்து எழுதவும்....
சுவாரசியாய்ச் சொல்கிறீர்கள்....
//பாட்டு முடிஞ்சவுடனே யூட்யூப் சில சஜெஷன்ஸ் காட்டுது பாருங்க... ம்ம்..டிவைன் :))// :)))
நன்றி பரணி :)) அவ்வ், அதுலயே இருங்க..விசம் விசம் விசம் :))
Deleteஅருமை அற்புதம்..! எனக்கும் ராகம் கவிதை பற்றி ஒண்ணும் தெரியாமத்தான் ரசிக்கிட்டு இருக்கேன்.
ReplyDelete//ராஜாவின் பாடல்களில் வரிகளையும்,இசையையும் பிரிக்கவே இயலாது. நீங்கள் ஹம் செய்தால் ம்யூசிக்கோடு சேர்ந்தேதான் செய்யவேண்டும்.// இப்போதுள்ள இரைச்சல்கள் போல இல்லாமல்..... பாடகனின் குரலுக்கும், பாடலாசிரியரின் வரிகளுக்கும் ஒரு கலைஞனாய் ராஜா அங்கீகாரமளித்ததையே இது காட்டுகிறது.
கண்டிப்பா ஆனந்த்ராஜ்..எனக்கும் ராகம்ல்லாம் ஒன்னும் தெரியாது..நீங்க ட்விட்டர் மகிழ்வரசா?
Deleteஅதே ஆளுதான்..!! ;-))
Deleteரசனைக்காரன் என்ற பெயர்ப்பொருத்தத்திற்கு ஒரு சபாஷ்!
ReplyDelete’அட மச்சமுள்ள மச்சான்..நான் புது வித ரகம்..கைய வெச்சா உள்ளே..நீ நினைக்கிற சுகம்.. ’
இந்தப்பாடலை இனி கேட்க வாய்க்கும்போது ரசனைக்காரன் ஞாபகம் தான் வரும்.
மிக மிக தன்யனானேன்..ஏதும் பேங்க் லாக்கர்ல இந்த கமெண்ட்டை போடமுடியுமான்னு கேட்கிறேன் :)
Deleteஇந்த ட்யூனை எந்த தேசத்து ஆல்பத்திலிருந்து ராஜாசார் சுட்டுவந்தார் என இணையத்தின் சந்து பொந்துகளிலெல்லாம் தேடிக்கொண்டிருக்கிறேன்! புடிச்சுனு வந்து வெச்சுக்கறேன் என்ற கச்சேரிய!~
ReplyDeleteஹஹா..நீஎபொவெ மனதில் ஒட்டவில்லை என சொன்னதும் இதே நக்கீரன் தான் ;))
Deleteஇதுல பாக்யராஜ் ஸ்டெப் அவரோட வழக்கமான ஸ்டெப் கெடயாது. (அதான் பாட்ட பத்தி நீங்களே எல்லாம் ..)
ReplyDeleteSudharsan
ஆமா..கொஞ்சம் எக்சர்சைஸ் கம்மி தான்..:)
Deleteபதிவை படிச்சுட்டு மறுபடியும் பாட்ட கேட்கனும் .. #டிவைய்ய்ய்ய்ய்ன்
ReplyDeleteகேளுங்க கேளுங்க..வருகைக்கு நன்றி :)
Deleteராஜா சாரின் கிராமத்து அத்தியாயம் படத்தில் வரும் "ஆத்து மேட்டுல ஒரு பாட்டு " பாடலை கேளுங்கள் .. அதன் ரிதம் அசர வைக்கும்.
ReplyDeleteதகவலாக ராஜா சாரின் BEST songs நடபைரவியில் அமைந்தவை என்பதாகும் என் கருத்து. உ தா : ராஜா ராஜ சோழன், பனி விழும் இரவு, ஒ butterfly, தென்மதுரை etc
அந்த பாட்டை கேட்டதில்லை, தேடுறேன். நடபைரவி மேட்டர் புதுசா இருக்கு..உள்ள புகுந்து பாக்குறேன் :)
Deleteரசனைக்காரா...
ReplyDeleteஒரே ஒரு விசயத்தை விட்டுட்டீங்க; அப்பவே சொல்லணும்-ன்னு நினைச்சேன்; இப்போ பாதித் தூக்கத்தில் எழுந்து சொல்லுறேன்:)
பாட்டின் அடி நாதம் Drums மட்டும் அல்ல!
மிருதங்கமும் கூட!
http://youtu.be/vECyV56lVxQ?t=1m15s
இந்த Timing-ல பாருங்க,
பாட்டின் ஆரம்பத்தில் இருந்தே Drums ஒலிச்சிக்கிட்டே இருக்கும் - பாட்டு முழுக்க!
ஆனா, காமன் பாக்யராஜ், துப்பட்டா புடிச்சி ஆடும் போது,
நாக்ரு-தன ; திர-ன்னன... இதுக்கு மட்டும் Drums மெளனம் ஆகி, மிருதங்கம் தட்டி வுடுவாரு ராஜா:)
திர-ன்னன, திர-ன
நாக்ரு-தன, நாக்ரு-தன, நாக்ரு-தனாஆ...
அந்த நட்டுவாங்கம்/scintillating effect க்கு Drums போட்டா, நட்டுவாங்கத்தை மூழ்கடிச்சிரும்!
அதுனால, மெல்லிய மிருதங்கத்தால் தட்டி, நாக்ரு-தன முடியும் போது, மிருதங்கத்தில் இருந்து அப்புடியே Drums க்கு இழுப்பாரு! அதான் ராஜா:)
இத அப்பவே சொல்லணும்-ன்னு நினைச்சேன்; இந்தப் பாவி முருகன் பேச்சுல மறந்து போனேன்:)
--------
Raja's biggest plus may be = his composition/orchestration
But, his microscopic strength = his "Choice of Instruments"
பனி விழும் மலர்வனம் பாட்டுல...
* "காமன் கோயில் சிறைவாசம்" -ன்னு வரும் போது = வீணை மட்டும் 3 secs; அவளை அவன் மீட்டுவது போல்...
* "காலை எழுந்தால் பரிகாசம்" -ன்னு வரும் போது = புல்லாங்குழல் மட்டும் 3 secs; சிரித்தால் வாயில் வரும் காற்று போல்...
அதுக்கு அப்புறம், "கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்"
= அவனும் அவளும் 2nd shift-ஆ? மெல்லிய Tabla அடிச்சி அடிச்சி, நமுட்டுச் சிரிப்பா/ நமுட்டு இசையா முடிச்சீருவாரு:)
இப்படி, வரியில் உள்ள உணர்ச்சிக்கு எல்லாம், வாத்தியம் ஒலிக்க வச்சி அழகு பார்க்க, ராஜாவால் மட்டுமே முடியும்!
I repeat, Raja's microscopic strength = his "Choice of Instruments"
--------
இந்த Instruments மெல்லியல்; இதுக்காகவே, என்னோட முதலிரவில், பனி விழும் மலர்வனம் plus select few raja songs, ஒலிக்க விடணும்-ன்னு ஆசை, மெல்லீசா Home Theater-ல்ல! First Night Playlist:))
ஒம்ம பதிவுக்கு வந்தாலே இதான்யா Danger! என்னையும் மீறி, Private Matter all coming out:) காப்பாத்துடா முருகா!:)
ஆனா இதை பத்தி எல்லாம் எனக்கு தெரியாது / எனக்கு பொறுப்புமில்லைன்னு பாட்ட எடுத்திருப்பாங்க பாருங்க.. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Deleteஒரு டவுட்டு
Delete//* "காமன் கோயில் சிறைவாசம்" -ன்னு வரும் போது = வீணை மட்டும் 3 secs; அவளை அவன் மீட்டுவது போல்...
* "காலை எழுந்தால் பரிகாசம்" -ன்னு வரும் போது = புல்லாங்குழல் மட்டும் 3 secs; சிரித்தால் வாயில் வரும் காற்று போல்.//
இது ஓக்கே.. இதே மெட்டுக்கு ”சேலை மூடும் இளஞ்சோலை” வறப்பவும் அதே வீணைதான்.. அதே குழல் தான். ஆனா அந்த வரிக்கு aptஆ இல்லையே.. ஏன்?
ராஜா போட்டு வச்சாரு. நீங்கலா ஒரு அர்த்தம் சொல்லிக்கிறீங்கன்னு உள்ள இருந்து கத்துறான் எனக்குள்ள இருக்கு ஆரீசு செயராசின் ரசிகன் :))
//வரியில் உள்ள உணர்ச்சிக்கு எல்லாம், வாத்தியம் ஒலிக்க வச்சி அழகு பார்க்க//
Deleteஅதுக்கு இசையமைப்பாளருக்குத் தமிழ் தெரியணும்ல? ;)
//ராஜா போட்டு வச்சாரு. நீங்கலா ஒரு அர்த்தம் சொல்லிக்கிறீங்க//
Deleteஆமாங்க. எப்பவோ எழுதின கம்பர் பாட்டுக்கு நாம இப்ப யோசிச்சுச் சேர்த்துக்கற அர்த்தம் இன்னும் அழகு கூட்டுதுல்லையா? அப்படிப்பட்ட interpretationகளுக்கு சாத்தியம் அளிக்கிற Composition. அவ்ளோதான்!
சில நாள் முன்னாடி ட்விட்டர்ல ஒரு விஷயம், ‘முல்லை, வெள்ளி போல அன்னம் பொங்கத்தான் வேணும்’ங்கற வரியைக் குறிப்பிட்டு, அதுல வெள்ளைச் சோறுக்கு 3 உவமைன்னு நான் எழுதினேன். 2 உவமைதானேன்னு பலர் கேட்டாங்க.
அன்னம்ங்கறது சோற்றைக் குறிப்பிடும் வார்த்தை. உவமை அல்ல. சரிதான்.
ஆனா, இங்கே அதே மெட்டுக்குப் பஞ்சு அருணாசலம் ‘முல்லை, வெள்ளி போல சோறு பொங்கத்தான் வேணும்’ன்னு எழுதியிருக்கலாம், ‘சாதம் பொங்கத்தான் வேணும்’ன்னு எழுதியிருக்கலாம், பெருமளவு புழக்கத்துல இல்லாத அன்னத்தை அங்கெ ஏன் போடறார்?
அப்போ அவர் யோசிக்காம போட்டிருக்கலாம், வார்த்தை அழகுக்காகப் போட்டிருக்கலாம்.
ஆனா, இப்ப நாம் யோசிக்கும்போது, அன்னம்ங்கற வார்த்தை அன்னப் பறவையை நினைவுபடுத்தி அந்த வரியில 3வது உவமை ஆகிடுது. இல்லையா?
ஆக, பஞ்சு நினைச்சு எழுதினாரோ, இல்லையோ, அப்படி ஒரு சிந்தனைக்கு இடமளிக்கும் படைப்பு அவரோடது. அது மேன்மையான ஒரு விஷயம். அம்மட்டே!
: என். சொக்கன்,
பெங்களூரு.
இந்த விவாதத்தை வெச்சு ஓர் ஓசிப் பதிவு தேத்திட்டேன் ;) http://nchokkan.wordpress.com/2012/12/09/intrprtn/
Deleteஅடா அடா அடா
Deleteதூங்கி எழுந்து வந்து பாக்குறத்துக்குள்ள இம்புட்டு நடந்திருக்கா?:)
எலே கார்க்கி,
நான் சொல்ல வந்த அடிப்படை: நாகிர்-தனா வுக்கு Drumsஐ நிறுத்திட்டு, மிருதங்கம் போடுவாரு-ன்னு தான்;
context sensitive music! ஆனா, அது வேற எங்கெல்லாம் இழுத்துட்டுப் போயிருச்சி:)
ராஜா, பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு வாத்தியம் போடுவது பற்றித் தனிப் பதிவாய் போடட்டுமா?
ஆனா அந்தப் புண்ணியம் ஒனக்குத் தான்:)
ஏற்கனவே, Rex நடத்தும் Quiz-க்கே, பல்லைக் கடிச்சிக்கிட்டு அமைதியா இருக்கேன்;
கை துடிக்கும் Comment எழுத... சில காரணங்களுக்காக Quietஆ இருந்தா, கார்க்கி வந்து கலைக்கிறான், கலாய்க்கிறான்:))
anyways, dank u to @nchokkan :)
கேயாரெஸ்..ஒரிஜினல் கமெண்ட் பொறி..நானும் ஒத்துப்போறேன், சொல்லப்போனா நானும் மிருதங்கம் பத்தி தொட்டுருக்கேன் டிவிஜி பாரால..ரொம்ப டீப்பா போகமுடியல..அல்ரெடி பதிவு இழுத்துட்டே போச்சு..:)
Deleteஅப்புறம் சும்மா ப்ரைவேட் மேட்டர்ல்லாம் சொல்லுய்யா..கல்யாண விஷயம் தான் மழுப்புறீர் எப்பவும் ;))
கார்க்கி சொக்கன் புலவர்களே..உங்களுக்குள் சர்ச்சை இருக்கலாம், சண்டை இருக்கக்கூடாது :)
Deleteசொக்கன்..உங்க பதிவு டீப்பு/டாப்பு..
//
Deleteஆனா இதை பத்தி எல்லாம் எனக்கு தெரியாது / எனக்கு பொறுப்புமில்லைன்னு பாட்ட எடுத்திருப்பாங்க
//
என்ன கார்க்கி இப்படி சொல்லிட்டீர்? டிவியெஸ் ஃபிஃப்டில தேவனின் கோவிலை எடுத்ததை விடவா இது மோசம் :)
அருமை.ராஜா பாடல் மாதிரியே பதிவும் கலக்கல்.
ReplyDeleteநன்றி சார்..
Deleteஇந்தப் பதிவைக் காலையிலேயே படிச்சிட்டேன். நடுவுல கமெண்ட் போட முடியல.
ReplyDeleteபக்கம் பக்கமா கமெண்ட் எழுத வேண்டிய பதிவே இல்ல இது. குறள் மாதிரி கமெண்டுதான் பொருத்தம்.
இந்தப் பதிவைப் படிச்ச பிறகு... எனக்கு அந்தப் பாட்டை விட உங்க பதிவை ஏன் அதிகம் ரசிக்கிறேன்னு தெரியலை. Wonderful :)
மிக்க நன்றி ஜிரா..பாட்டோ/பதிவோ, ஏதோ ஒன்னு ரசிக்கிறீங்கள்ள..ரைட்டு விடுங்க ;))
Deleteஇந்தப் பாடலை நீங்களும் கமெண்ட் போட்டவங்களும் இவ்வளவு சிலாகிக்கிக்கையில, பல தடவைகள் மிட்நைட் மசாலாவுல இந்தப் பாட்டை ம்யூட்ல வச்சே 'பார்த்ததுக்கு' மனம் முழுவதும் ஒரு பெருங்குற்றவுணர்வு! :-(((
ReplyDeleteஹஹஹா..:)
Deleteஎனக்கு இசையின் எந்த டெக்னிக்கல் சமாச்சாரங்களும் தெரியாது. ஆனாலும் எந்த இடத்திலும் போரடிக்காமல் // ரமணனே எதிர்பாராத ஒரு சென்னை பெருமழையாய் // போன்ற வார்த்தைக் கோர்வைகள் கொண்டுசென்றது.
ReplyDeleteஉங்கள் குருவான பாலகுமாரன் போன்றே பதிவில் உள்ள டீட்டெயிலிங்க் பெரிய ப்ளஸ். ஒற்றைப்பாடலைப் பிரித்துப்போட்டு அக்குவேர் ஆணிவேராக அலசி ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க. ஆரம்பத்தில் இரட்டை அர்த்த வார்த்தைப் பிரயோகங்களில் ஆரம்பித்து ஜதி பற்றி கூறியதுவறையென கலந்துகட்டி அடிச்சிருக்கீங்க.
இப்ப என் பயம் என்னன்னா ஒருவேள நீங்க "நான் ஆளான தாமரை" பாட்டப்பத்தி எழுத ஆரம்பிச்சா எத்தனை பாகம் எழுதுவீங்க அப்படிங்கறதுதான். :-)
கருப்பு
அதுகூட ஒரு டிஸ்கஷன்ல வந்துதே ரீசண்டா :) ஆளான தாமரை ரீமிக்ஸ் வர்ஷன் ஒன்னுண்டு..அது ஒரிஜினலை விட நல்லாருக்கும் :)
Deleteபொதுவாகவே இசை, ராஜா பற்றிய பதிவென்றால் முதல் பத்தி முடித்தவுடன் மலிங்கா யார்க்கரை கண்ட 11ஆவது பேட்ஸ்மேனாய் திரும்பி விடுவேன். இருந்தாலும் /சிலசமயம் பவுலர்கள் ஒன் டவுன் இறங்கி கலக்குவார்களே/ போன்ற உவமைகள் முழுதாக படிக்க வைத்துவிட்டது. வாழ்த்து(க்)கள் சித்தப்பு.
ReplyDeleteமிக்க நன்றி நட்டு..:)
Deleteரசனை personified!
ReplyDeleteThanks Gopalan..All of us possess some kind of a rasanai, don't we? :)
Delete"நாகிர்தனா திரனனா" ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க. எனக்கு சின்ன வீடு படத்துல இந்த தீம் வர situvation விட கோவா படத்துல இதே தீம்க்கு வர situvation செமையா இருக்கும்...
ReplyDeleteஉங்க பழைய பதிவு எல்லாம் படிச்சு இருக்கேன்..நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க. அடிக்கடி எழுதுங்க...
மிக்க நன்றி ராஜ் :)
Deleteஅருமையா ரசனைக்காரங்கிற பேருக்கேத்தப்படிக்கு எழுதியிருக்கீங்க சாரே. ட்விட்டர்ல 'யார் இதைப் பாடியது'ன்னு நீங்க தேடிட்டிருக்கும்போதே போஸ்ட் வரும் என்று ஒரு சம்சயம் ஏற்பட்டது. டிவிஜி பாடினது என்பது எனக்கு செய்தி. நன்றி :-)
ReplyDeleteஎரோட்டிக்கா (சிருங்கார ரசம்) சூழல்களுக்கு இசையமைப்பதில் ராஜாவை மிஞ்ச ஆளில்லை என்பதுதான் உண்மை. அடிச்சு தூள் பண்ணுங்க மக்கா! :-)
ஹஹா கெஸ் பண்ணிட்டீங்களா முன்னாடியே..:)) ஆமா, சிருங்கார ரசம்..என்ன வார்த்தை :)
Deleteஎல்லாம் சூப்பர்தான். ஆனா போற போக்குல ரகுமான மண்டைல ஒரு ணங்கு ணங்கிட்டுதான் போகணுமா? :) அப்பிடி என்ன பல்லவிக்கும் சரணத்துக்கும் சம்பந்தமில்லாம போயிருச்சு சிநேகிதனே பாட்டுல? தட் தட் மேன். தட் தட் ஒப்பினியன் ஐ கெஸ் :)
ReplyDeleteநன்றி..வேணும்ன்னு எல்லாம் இல்லை..ஏதோ தோனும் :)
Deleteஅன்ஃபார்ச்சுனேட்லி மை கம்ப்யூட்டர் ஸ்பீக்கர் நாட் வொர்க்கிங். நாட் ஏபிள் டு லிஸ்சன் தி சாங். என்ன பாட்டுன்னு நானும் ஹெட் ஸ்க்ராச்சிங். நாட் ரெகக்னைஸிங் மை மைண்ட். வாட் எ பிட்டீ!
ReplyDeleteபை தி வே, நெம்ப நாளா மனசுல எழுதிட்ருக்கற ஒரு பதிவை எழுதணுன்ற உத்வேகம் யுவர் பதிவு ஸீயிங் ஆஃப்டர் கமிங்.
அயாம் ரைட் நவ்...
சூப்பர் கிரி..இந்த பாட்டு கேட்டுருப்பீங்க..ட்விட்ட்ரில் உங்களை மிஸ் செய்கிறேன் :)
Deleteஇதுவரைக்கும் யாராச்சும் எழுதிட்டாங்களா தெரியலை. 50க்கு மேலே கமெண்ட்ன்னா வேலைவெட்டி இல்லாத நேரத்துலமட்டும்தான் (ஆஃபீஸ் டைம் என்றும் பாடபேதம்) படிக்க முடியும்.
ReplyDeleteஒரே நாளில் ரிலீஸ் ஆன மூன்று படங்கள், ஒரே கதையை மூன்று விதமாய் அலசினது அந்த தீபாவளி தவிர வேறெப்போதாவது நடந்திருக்குமா என்று தெரியவில்லை.
சிந்துபைரவி, முதல் மரியாதை, சின்னவீடு - மூன்றுமே திருமணத்தை மீறிய உறவுகளைக் கதைக்கருவாக வைத்திருந்தன.
சங்கீதம் தெரியாத பெண்டாட்டி ரசனைக்கார (உம்மை இல்லைய்யா) வைப்பாட்டி என்று மிடில் கிளாஸ்தனமாக இப்போது ஒரு சீன் கூட என்னால் பார்க்கமுடியாத (அப்போது ரசித்துப்பார்த்ததை நினைத்து இப்போதும் வெட்கப்படுகிற) பாலசந்தர். (ஜேகேபியே பண்ணிட்டார்னு அவனவன் பண்ண ஆரம்பிப்பான் - டேய் எங்களுக்கு எல்லாம் தேங்காமூடி பாகவதர்களாடா ஆதர்சம்?)
மரியாதைக்காக மனைவியானவளின் ஏகநேர அவமரியாதைக்கு நடுவில் தெருப்பெண்களிடம் வம்பிழுக்கும் பெரிசு, பரிசல்காரப்பெண் - பாரதிராஜாதான் இந்த மூன்றிலுமே வின்னர். சந்தேகமே இல்லை. ஆமா நான் அவளை வச்சிருக்கேன் -க்கு நடுவில் இது உண்மையில்லையே என்ற ஏக்கத்தையும் சேர்த்து கணேசனால்தான் தரமுடியும்.
எந்த பம்மாத்தும் இல்லாமல் அதே நேரத்தில் நியாயம் சொல்லி முடிக்கவேண்டியதால் கெட்டவளைச் சின்னவீடாக்கிய பாக்கியராஜ். நிச்சயமாக க்ளோஸ் செகண்ட். பக்கத்துவீட்டு மைனர் புருஷன், அவனுடைய குண்டு பெண்டாட்டி (எம் ஏ இங்கிலீஷ்) சின்னச்சின்ன விஷயங்களைக் காமெடியாக்கிய திரைக்கதை (வாட்டீஸ் யுவர் நேம்!)
சொல்ல வந்தது இது அல்ல. மூன்றுக்குமே ஒரே ராஜா. மூன்று படப்பாடல்களையும் ஒரு நோட் வைத்தே கண்டுபிடிக்கமுடியாதவன் காதில்லாதவன். பூமாலை வாங்கி வந்தால் ஏ குருவி நாகிர்தனா.. எல்லாத்தையும் ஒரே நாள்லே ரிலீஸ் செய்திருக்கிறான் அந்த ராட்சஷன்.
ரசனைக்காரனுக்கு நன்றி. உணர்ச்சிவசப்பட்டு வசப்படவைத்ததுக்கு.
செம பர்ஸ்பக்டிவ் சுரேஷ் அவர்களே..மூன்றும் ஒரேநாளில் ரிலீஸ் என்பது செய்தி. மூன்றுக்கும் மிக வித்தியாசமான ம்யூசிக்..சந்தேகமில்லை..
Deletebtw, நிறைய உணர்ச்சிவசப்படுங்கள்..:)
தெய்வமே!!
ReplyDeleteஅதை நான் சொல்லனும்..:)
Deleteநல்லாயிருக்குங்க. நிறைய எழுதுங்க. :)
ReplyDeleteமிக்க நன்றிங்க :)
Deleteரமணன்னே எதிர்பாக்காத மழை - :) , சைடில் ரஹ்மானை ஒரு முறை குத்தி இருந்தாலும், நீங்கள் சொன்னது உண்மை தான், ரெம்ப ரசிச்சு படிச்சேன். ஒரு எழுத்தாளனுக்கு உரிய உயரிய விஷயமா நான் பாக்குறது, மத்தவங்க யோசிக்க கூட முடியாத விஷயத்த ரைட்டர் அசால்டா எழுதனும் .உங்க எழுத்து கவிதையா, அதே சமயம் தகவலோட இருந்துச்சு. சத்தியமா, இவ்ளோ ரசிச்சு நான் பாட்டு கேட்டதில்ல, அதுனால, வியப்பா இருக்கு. ராஜாவோட அன்பான வெறியன்னு சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது.அருமையான பதிவு. நல்ல வேளை அந்த பாட்டு லிங்க் போட்டிங்க, இல்லாட்டி நெட்ல தேடி இருக்கணும். நான் ரெம்ப ரசிச்சு படிச்சேன் ரசனைகாரன். சத்தியமா சொல்றேன், உங்க ரசனை எனக்கு இல்லையேன்னு பொறாமையா இருக்கு :))) கீப் ரைட்டிங், பெயருக்கும் எழுத்துக்கும் மஹா பொருத்தம்
ReplyDeleteமிக்க நன்றிங்க..என் மத்த பதிவுகளும் பாருங்க ஏதும் தேறுதான்னு :)
Deleteஅருமையான பதிவு!
ReplyDeleteநன்றியும் வாழ்த்துகளும்!
அதிகம் அலசப்படாத பாடல் என்றாலும், ஒட்டு மொத்தமாய் மறந்து போன பாடலும் அல்ல :)
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்னால் இந்தப்பாடலைப்பற்றி நான் எழுதிய ஒரு பதிவு இங்கே:
http://www.mayyam.com/talk/showthread.php?8541-The-Golden-Era-of-Dr-IR-and-Dr-SPB&p=772889&viewfull=1#post772889
தொடர்ந்து நண்பர் வி. எஸ். இந்தப்பாடலை அலசி ஆராய்ந்த நீண்ட கட்டுரை இங்கே:
http://www.mayyam.com/talk/showthread.php?8541-The-Golden-Era-of-Dr-IR-and-Dr-SPB&p=777140&viewfull=1#post777140
அட அருமை!! இப்பாடலை இவ்வளவு ஆராய்ந்தவன் நான் மட்டுமல்ல என நினைக்கையில் மகிழ்ச்சி :)) வருகைக்கும், தகவலுக்கும் நன்றி :)
Deleteஅந்த லின்க்கை பார்த்தேன்..செம டீப் அனாலிசிஸ் தான் :)
சொல்லப்போனால், அந்தத்தளத்தில் இளையராஜா-எஸ்பிபி கூட்டணியில் வந்த எல்லா ஹிட் பாடல்களையும் குறித்த பதிவுகள் / கட்டுரைகள் உள்ளன! ( நானே 415 பாடல்கள் பற்றி எழுதி இருக்கிறேன், ஒரு நாளைக்கு ஒரு பாடல் வீதம், 1 ஆண்டுக்கும் மேல் ஒவ்வொரு நாளும் எழுதப்பட்டவை).
Deleteமுதல் பாடல் / பதிவு இங்கே தொடங்குகிறது:
http://www.mayyam.com/talk/showthread.php?8541-The-Golden-Era-of-Dr-IR-and-Dr-SPB&p=676906&viewfull=1#post676906
என் கருத்துப்படி, "தமிழ்ப்பாமரர்களின் மீது இளையராஜா இசையின் தாக்கம்" என்ற கருத்தில் யாராவது PhD செய்தால், இவை ஆய்வுப்பொருளாக உதவும் :)
இப்போது வேறு ஒரு இணையத்தில் இளையராஜா-பி சுசீலா பாடல்கள் பற்றி, தமிழில், எழுதத் தொடங்கி இருக்கிறேன். நேரம் கிடைத்தால் வந்து பாருங்கள்:
http://ilayaraja.forumms.net/t23-the-ir-ps-thread
app_engine நீங்கள் யார்? ட்விட்டர் எதிலும் இருக்கீங்களா?
Deleteபேருக்கு ஒரு ட்விட்டர் கணக்கு இருக்கிறது - பங்களிப்பு / பின்பற்றுதல் ஒன்றும் கிடையாது.
Delete90களின் பிற்பகுதியில், அதாவது இன்டர்நெட் பெரிய அளவில் பயன்படத்தொடங்கிய காலத்தில் tfmpage.com என்ற இடம் தான் தமிழ்த்திரையிசை குறித்த பேச்சுகளின் ஒரே இடம். அப்போது முதலே அதில் நடக்கும் கருத்துப்பரிமாற்றங்களில் பங்கெடுத்து வந்திருக்கிறேன். (அந்த இணையத்தின் தற்போதைய அவதாரத்தின் பெயர் : mayyam.com/talk ) தற்போது அங்கு நான் எழுதுவதில்லை.
என் புதிய முகவரி இது தான்:
http://ilayaraja.forumms.net/
இங்கு மட்டுமே தமிழிசை பற்றிய கருத்துரையாடலில் பங்கெடுப்பது வழக்கம் :)
tfm/mayyam அறிவேன். உங்கள் புதியமுகவரியையும் பார்க்கிறேன்..
Deleteஅசாத்திய உழைப்பில் பாடல்களை அலசுகிறீர்கள் என அறிகிறேன் :)
This comment has been removed by the author.
ReplyDeleteயோவ் அண்ணா!!
ReplyDeleteஎன்னா? படிச்சா கருத்து சொல்லோனும்..
Delete"எனக்கு இதுதான் சந்தேகம். இந்த பாட்ட பத்தி பதிவு எழுதனும்னுங்கற எண்ணம் ஏன் வந்தது? எப்படி வந்தது?.......":)
Deleteஒரு பாட்டுக்கு ஒன்றரை பக்கம் எழுதியிருக்க :) உன்னோட எக்ஸாம் பேப்பர் கரெக்ட் பண்ண வாத்தியார் நிலைமைய யோசிச்சிங். :P
ஆ..இதை ஒரு ரசனை கலந்த ஈடுபாடு என சொல்லலாம் (கமல் வாய்சில் ;))
Delete"நாகிர்தனா திரனனா"
ReplyDeleteமட்டும் கேட்டிருக்கேன், ஆனா அது இந்த பாட்டோடதுனு தெரியாது.. நீங்க இவ்ளோஓஓஓஒ ரசிச்சி எழுதினதால 2 3 தடவ பாட்ட கேட்டேன் :)).. சுறுசுறுன்னு, பரபரன்னு, ஜிவுஜிவுன்னு எனக்கு ஒரு ரியாக்சனும் ஆகல.. சார்ர்ர்ர்ர் நீங்க ரசிகன் சார்ர்ர்ர்ர்..
@dhivyadn
வருகைக்கு நன்றி திவ்யா :)
Deleteஇது ஒரு நிலாக்கலாம் பாடலில் வரும் "நாகிர்தனா " தெரிந்ததே .. டிக்டிக்டிக்கில் "பூ மலர்ந்திட ஆடும் பொன்மயிலே" பாடல் அருமை ..
ReplyDeleteஆமா அதுவும் நல்லாருக்கும்..:)
Deleteவாவ் சூப்பருங்க. ஆரம்பத்துல நான் எதோ நீங்க ராஜா ரசிகர்களை கலாய்க்க போறீங்களோன்னு நெனச்சுட்டேன்.
ReplyDeleteஅருமை அருமை. ராஜா ரசிகர்கள் நாங்க கூட இந்த பாட்ட இவ்ளோ நுணுக்கமா ரசிச்சிருக்க மாட்டோம்.
இந்த பதிவ படிச்சுட்டே பக்கவாட்டுல அந்த பாடலை ஓட விட்டு சின்க் பண்ணி பாக்கும்போது நீங்க சொல்றது அவ்ளோ உண்மைன்னு தெரியுது.
சுவாரசியமான எழுத்து நடை. தொய்வில்லாம படிக்க முடிஞ்சுது. பகிர்வுக்கு நன்றிங்க. @ganesukumar
மிக்க நன்றி கணேஷ்..:)
Deleteபசங்களுக்கு எப்படியோ... பொண்ணுங்களுக்கு இதெல்லாம் மொக்க பாட்டு, அசிங்கமான பாட்டுன்னு கிராஸ் பண்ணி போய்டுவோம். அப்படி ஒரு பாட்டுக்கு நீங்க என்ன தான் எழுதி இருக்கீங்கன்னு பார்க்கலாம்னு படிச்சேன்.. அப்படி இவர் சிலாகிக்கற அளவுக்கு என்ன தான் மியூசிக் போட்டிருக்காரு ராஜான்னு கேட்டேன்.. ச்சே... உங்க அளவு ரசனை எனக்கு இல்லையேன்னு உண்மையில் வெக்கப்பட்டேங்க. செம.... ராஜா, ரசிகர்களால் மட்டுமல்ல ரசனைகாரர்களாலும் ராஜாவாக நிற்கிறார்... எப்போதெல்லாம் இளையராஜா பாடல் கேட்கிறேனோ அப்போதெல்லாம் எனக்கும் தோன்றும் வாக்கியம் ஒன்றே ஒன்று. அதுவே இப்போதும் தோன்றுகிறது. "ராஜா ராஜாதான்"
ReplyDeleteமிக்க நன்றி உங்கள் கருத்துக்களுக்கு..எப்படி வந்தீங்க என் ப்ளாகுக்கு?
Deleteஒரு பாடல இவ்ளோ ரசிச்சு கேட்க முடியுமா? ஏதோ 'ஜென்' தத்துவம்ன்றாங்க.. இதாங்க அது - " நாகிர்தனா திரனனா..."
ReplyDeleteவாங்க ஜி..இதான் ஃபர்ஸ்ட் டைம் இங்க வர்றீங்களோ :)
Deleteபாட்டு பெரிதாக என்னைக் கவரவில்லை. ரசனைகள் மாறும்,லோகோ பின்ன ருசி. எல்லோரும் எழுதுவது போல அது நாகிர்தானா அல்ல; நாத்ருதானா. இது தில்லானா என்ற வகையில் நிறைய சொல்லப்படும் ஜதி. கதனகுதூகலம் என்ற ராகத்தில் (ரகுவம்ச சுதா) அமைந்த பாலமுரளியின் தில்லானாவை, ப்ரின்ஸ் ராமவர்மா பாடுவதைக் கேளுங்கள். http://www.youtube.com/watch?v=5xwG0JrH2oU&playnext=1&list=PL62CD5B74E7FE7C6A&feature=results_main
ReplyDeleteஉறவுச்சிக்கல் கதைகள் மூன்று ஒரே சமயத்தில் வெளிவந்திருந்தாலும் அவற்றின் களம், சூழல் வேறு. இளையராஜா என்ற மேன்மையாளர் மட்டுமல்ல, சாதாரண இசையமைப்பாளருமே அதை வேறுபடுத்தி நன்றாகவே இசையமைத்திருக்க முடியும். உண்மையில், அது நல்ல இசையமைப்பாளருக்கான அடிப்படைத் தகுதியும் கூட.
ஒரே சமயத்தில் பாலச்சந்தர் மணிரத்னம் இருவரின் படங்களிலும் ரேவதி மழையில் நனைந்து ஆடிய பாடல்கள் போல.
வாசிப்பில் பலவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்த ஏதுவான ஒரு சிறந்த தோலிசைக்கருவியாக மிருதங்கம் விளங்குகிறது. மிருதங்க வாசிப்பில் காதல், இரக்கம், சோகம், வீரம், ஆனந்தம், பெருமிதம் என்று எல்லா உணர்வுகளுக்கும் சொற்கட்டுகள், காலப்ரமாணங்கள் உண்டு. எத்தனை கம்பீரம் உண்டோ அத்தனை குழைவும் உண்டான வாத்யம் இது.
1987-ல் வீரம், காருண்யம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளில் தனி ஆவர்த்தம் வாசித்து Garland of Rhythm என்ற பெயரில் என் குரு சங்கீத கலாநிதி உமையாள்புரம் ஸ்ரீ சிவராமன் அவர்கள் வாசித்து, சங்கீதா அதை வெளியிட்டது. அவர் "I consider the mridangam the king of percussion and queen of melody" என்று சொல்லுவார்.
மிக ரசமான கமெண்ட்டுக்கு நன்றி சார் :) அந்த் தில்லானா கேட்கிறேன். மிருதங்கத்தின் நாதம் unique, அது எந்த வாத்தியத்திலும் இல்லை என என் குரு கூறுவார். Garland of Rhythm நெட்டில் உண்டா?
Deletehttp://www.flipkart.com/garland-of-rhythm/p/itmd8s2xmaahzqgy
DeleteThanks a lot :)
Delete"கிட்டத்தட்ட சொப்பனஸ்கலித அனுபவம்..."
ReplyDeleteசெம மேட்டருப்பா...!!
உண்மையிலே நீர் பெரிய்ய்ய ரசனைக்காரன் தான்.. ஓய்...
மிக்க நன்றி :)
Deleteஇப்படி ஒரு படமோ பாட்டோ இருக்கறது இதுவரை தெரியாது ஆனா நல்ல பாட்ட தவற விட்டு இருக்கேன் ! நிறைய விஷயம் சொல்றீங்க :)
ReplyDeleteநன்றி நிகிலன்..
Deleteமிக நல்ல பதிவு!!
ReplyDeleteநன்றி கார்த்தி..:)
Deleteராஜாவின் பரிபூரண ஆட்சிக்காலமது
ReplyDeleteவேறு என்ன சொல்ல
அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் பதிவுகள்
i was having this ringtone till some time back. I kept this tone, after watching the Goa movie....Superb explanation on the prelude and interlude stuff. Infact this "nagirthana thirannaa naaa" will still empower the mid 30 folks like us till now...Don't know why???? Vayasu kolaro???
ReplyDelete