Friday, February 6, 2015

நீராலானது உடம்பு

 முன்னொரு காலத்துல ஒரு ராஜா இருந்தான். அது நாந்தான். காலம்பற எழுந்து பல்லை தேய்ச்சுட்டு நன்னா திக்கா காப்பி போட்டு குடிச்சுட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பானாம்.

ஒருநாள் காப்பி குடிக்கறச்ச கரடி மாதிரி ஒருத்தர் சொன்னாராம் “படவா, ஃபேஸ்புக், வாட்சாப்ல வாட்டர் தெரபி ஃபார்வேர்ட் எல்லாம் படிக்கிறதில்லையா? வெறும் ஜோக் தான் கேப்பியா? காலம்பற எழுந்தோன்ன முதல்ல ஒரு மொட்டைத்தம்ளர் ஃபுல்லா ஹாட் வாட்டர் குடிடா.. மூலம், பௌத்திரம், துரிதஸ்கலிதம், விரைவீக்கம்னு எலெக்ட்ரிக் ட்ரைன் நோட்டீஸ்ல ஒட்டின எந்த வியாதியும் வராது”ன்னாராம். அடடே, ஈசியா இருக்கறதேன்னு ஃபாலோ பண்ண ஆரம்பிச்சானாம்.

இப்படியே போயிண்டு இருக்கறச்ச, இன்னொருத்தர் “அம்பி, உனக்கு நெய்வேலி அனல்மின் நிலையம் மாதிரி உஷ்ண உடம்பு”ன்னாராம். ”அதுக்கு, தொப்புள்ள எண்ணெய் வெச்சுக்கனுமா சார்”ன்னு கேட்டானாம். “நோ வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணில நைட்டு ஊறவெச்சுட்டு காலம்பற குடி. அது கேஸ், உஷ்ணம், கெட்ட சமாச்சாரம் எல்லாம் எடுத்துரும். காலைல ஃப்ரீயா போகும்”ன்னாராம்.

சரி, வாழ்க்கைல ரொம்ப அடிப்பட்டுருக்கார் போலருக்கு, சரியாத்தான் சொல்வாருன்னு இவனும் முதல்ல வெந்தய வாட்டர், அப்புறம் ஹாட்வாட்டர்னு குடிக்க ஆரம்பிச்சானாம். அதாரு சைடுல மாணிக்கம் நம்பரை கேக்கறது? மாணிக்கம்னா வாய் கோணிக்கும்..

இப்படியே இருக்கறச்ச, அதே கரடி ஃப்ரெண்டுகிட்ட “நான் ஃபிட்டாறதுக்கு
ஜிம்முக்கு போகனுமாமா, நான் கம்பு சுத்தனுமாமா, பஸ்கி தண்டால்லாம் எடுக்கனுமாமா. வேற ஏதும் உபாயம் உண்டா ஸ்வாமீ”ன்னு கேட்டானாம். அதுக்கு அவர் சொல்றார் “ஒரு கிளாஸ் ஹாட் வாட்டர்ல லெமனும், ஹனியும் போட்டு குடிடா. ஜிம்முக்கு போகாமலே தொப்பை குறையும். லிவருக்கு நல்லது.”ங்கிறார். சரின்னு, அதையும் ஃபாலோ பண்ணா, அது மளிகைக்கடைக்காரன் லிவருக்குன்னு அப்புறம் தான் தெரிய வர்றது.

இன்னொரு நாள், வயசாயிண்டே போறது, ஸ்வீட்லாம் சாப்பிடாதேன்னு ஆத்துகாரி ஸ்ட்ரிக்ட்ரா சொல்றா ஸ்வாமின்னோன, “உங்களுக்கு வெண்டைக்காய் புடிக்குமாஆஆஆ”ன்னு அவர்ட்டருந்து ஒரு முக்கியமான கேள்வி வந்து விழறது. அடடே, வெண்டக்காய் ஃபேவரைட் வெஜ்ஜி ஆச்சே..ரோஸ்ட் பண்ணா நன்னா வெச்சித் திம்பேனே”ன்னானாம்.

அதுக்கு அவர் “அபிஷ்டு, அது அப்படியில்ல. 2 வெண்டக்காயை குறுக்கால வெட்டி ஒரு கிளாஸ் தண்ணில ஊறவெச்சு, காலம்பற அது ஊறின தண்ணியையும், அந்த வெண்டைக்காயையும் சாப்பிட்டா சுகர்லாம் வரவே வராது”ன்னார். அடடே தேவலையேன்னு, நாலாவதா ஒரு கிளாஸ்ல தண்ணிய ரொப்பி வெண்டைக்காயை ஊறவெச்சு சாப்பிட ஆரம்பிச்சான். அது கொழகொழன்னு குத்திப்புடுங்க, அதை உள்ள தள்றதுக்கு கடேசியா இன்னொரு கிளாஸ் தண்ணி குடிக்கவேண்டி போறது.

இப்படி அஞ்சு கிளாஸ் தண்ணிக்கப்றம், ஒரு கிளாஸ் காப்பியும், டிபனுக்கு இன்னொரு கிளாஸ் ஓட்ஸ் கஞ்சியும் குடிச்சுட்டு, காலம்பற மீட்டிங்குக்கு போய் உட்கார்ந்தா,முட்டிண்டு வர்றது. மீட்டிங்கா, லாங் சைஸ்ல போயிண்டே இருக்கு. இவனுக்கா ஆத்திரமா வர்றது..சரின்னு எழுந்து நாசூக்கா போயிட்டு வந்தானாம். போயிட்டு வந்து உக்கார்றானாம். கொஞ்சநேரத்துல மறுபடி முட்டிங் டவுன். மறுபடி கெட்டிங் அப். பாஸ் ப்ராஜக்ட் எப்படி போறதுன்னு கேட்க, இவன் “நிக்காம போறது”ன்னானாம்.

இதை வாட்ச் பண்ணிண்டே இருந்த பாஸ் கேட்டாராம்

“ஏண்டா, நம்ம ஆபீஸ்ல ப்ராஜக்ட் பார்க்க வர்றியா, பாத்ரூம் பார்க்க வர்றியா”

1 comment:

  1. ஹா.. ஹா.. கலக்கல். இப்போது எல்லாம் இந்த அறிவுரைகளை ஒரு காதில் வாங்கி, இன்னொரு காதில் விட்டுவிடுவது. Free Advice Is Usually Worth What You Pay For It (இதையும் சேர்த்து)!

    ReplyDelete

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)