Tuesday, July 3, 2012

தேசி என்றொரு இனமுண்டு



“650 ஸ்கொயர்ஃபீட்  50 லட்சமாம் வெஸ்ட் மாம்பலத்துல”

“நம்ம டௌண்டவுனை விட காஸ்டிலியா இருக்கே ரேட்டு”

“அட 2 பெட்ரூம் வாடகை இருபத்தஞ்சாயிரம் சொல்றானாம் சார் அதுவும் OMRல எங்கியோ..”

”ரெண்டு பேரு ஹோட்டல்ல சாப்பிட ஆயிரம் ரூபா ஆயிடுதாம்”

“ஒன்னுமில்ல ஒரு காபி 35 ரூவாவாம் சரவணபவன்ல”

"ஒரு இட்லி, ஒரே ஒரு இட்லி நாப்பது ரூபாயாம் முருகன் இட்லில”

”தங்கறது? டீசண்ட் ஹோட்டல்ன்னா நாலாயிரம் ஆகுது ஒரு நைட்டுக்கு.. இங்க 40 டாலருக்கு ஹாலிடே இன்னே கிடைக்குது”  

 “சம்பளக்காரங்க சமாளிச்சுடறாங்க..பென்ஷனர்ஸ் பாவம் சார்..எங்கப்பால்லாம் அல்லாடுறாரு”

 ”ஆமா சார்..பாலு, காய்கறி, பருப்பு எல்லாம் ஏறிப்போச்சு சார்”

“கேஸ் சிலிண்டருல்லாம் எங்கியோ நிக்குது”

“பெட்ரோலு கேக்கவே வாணாம். பியர் பெட்ரோலை விட சீப்புன்னு ஃபேஸ்புக்ல ஜோக்கடிக்கிறாங்க”

“ட்ரைன் டிக்கட்லாமும் ஏறிப்போச்சு..கிடைக்கவே மாட்டேங்குதாம்”

“ட்ரைனை விடுங்க..இந்த ஆம்னி பஸ்சு..கொள்ளை..லீவுநாள்ன்னா ஆயிரம் ரூவா கேக்குறாங்களாம் திருச்சி-மெட்ராசுக்கு”

 ”டாக்சி என்னங்க வாழுது..ஒரு நாளுக்கு எடுத்தாலே ஏழாயிரம், எட்டாயிரம் ஆகுதுங்க”

”ஆட்டோ? 100 ரூவாக்கு கம்மியா அடுத்த தெரு கூட போகமுடியாதாம்”
 “பத்து, இருவதுக்கெல்லாம் மதிப்பே இல்லாம போச்சு சார்..”

“அட பிச்சைக்காரனே பத்து ரூவாக்கு கம்மியா வாங்கமாட்றான் சார்”

“அவன் செல்போனே வெச்சுருக்கான் சார்”

 ”படிப்பு? எல்கேஜிக்கு டெர்ம் ஃபீஸ் அம்பதாயிரமாம்”

 “இங்கயே தேவலாம் போலருக்கே..அட்லீஸ்ட் ஸ்கூலு ஃப்ரீ..”

“காலேஜு ஃபீசுல்லாம் நினைச்சுக்கூட பார்க்கமுடியல சார், பத்து லட்சத்துக்கும் மேல போகுது என்ஜினியரிங்ல்லாம் இப்பவே”

“இப்பவே இப்படின்னா நாம ரிடையர் ஆறதுக்குள்ள விலைவாசி எங்கியோ போய்டும் சார்..”

“திரும்ப இண்டியா போயி செட்டிலாற ஐடியால்லாம் விட்டுறுங்க..நமக்கு இனி இங்க தான்”

“ஆமா சார், ஒரு சொந்தக்காரனும் ஒட்டுறவா இல்ல..வாங்கிட்டுப்போற கிஃப்ட்ட வாங்கிட்டு ஒருவாய் சோறு கூட போடுறதில்ல”

‘இந்தியால நமக்கு இனி ஒன்னுமில்ல சார்..இனிமே அங்க ஒட்டாது நமக்கு” 

“ பசங்க கல்யாணமாச்சும் இண்டியால செய்யனும் சார்..அதுக்கு மினிமம் பத்து லட்சம் தேவை போலருக்கே”

  ”நம்ம பசங்க வளர்றதுக்குள்ள கோடில நிக்கும் சார்..இப்ப என் மச்சான் கல்யாணத்துக்கே கேட்டரர் 6 லட்சம் கேக்குறான்”

“எப்ப சார் கல்யாணம்? நீங்க போறீங்களா”

“எவ்ளோ சார் ஆச்சு  டிக்கட்?

“எந்த ஏர்லைன்ஸ் ஜெட்டா, எதிஹாடா,லுஃப்தான்சாவா?”

”ஹ்ம்ம்..நான் போயி 4 வருசம் ஆச்சு சார், எப்ப சார் போறீங்க?”

“என்ன சார் 4 வீக்ஸ் லீவா..என் மேனேஜர் லீவு கேட்டதுக்கு அப்புறம் போன்னுட்டான்.. ”

“மெட்ராசா சார் போறீங்க? பிளாக்ல இட்லிவிலாஸ்ன்னு ஒரு ரெஸ்டாரண்ட் பார்த்தேன். அள்ளிட்டுபோவுதாம் டேஸ்டு..அங்கல்லாம் போங்க சார்”

“ஆகஸ்டுல 4 வாரம் போறேன் சார்..கல்யாணத்தோட திருச்சி, கும்மோணம், பிள்ளையார்பட்டி, மதுரை, திருப்பதின்னு பெரிய ரவுண்டு”

”சூப்பர் சார்..என்ன இருந்தாலும் நம்மூரு மாதிரி வராது சார்”.

67 comments:

  1. ’தேசி ’ என பொதுவாக அழைக்கப்படும் வட அமெரிக்க NRIக்களின் வாழ்க்கையை இயல்பாய் அதன் அபத்தங்களோடு பதிவு செய்ய ஆசை..ஆதரவை பொறுத்து தொடருவேன்..

    ReplyDelete
    Replies
    1. மிக அருமை. கண்டிப்பாக தொடரவும்.

      Delete
    2. நன்றி விவேக்..தொடர்கிறேன் :)

      Delete
    3. சூப்பர் தொடக்கம். சின்னச்சின்ன கதைகளா நிறைய எழுதலாமே சார். ப்ளீஸ் கன்டிந்யூ.

      Delete
  2. தொடருங்கள்! ரொம்ப நாள் முன்னாடி ட்விட்டர்ல பேசும்போது, இந்தியாவுக்கு வந்தா எங்களுக்கு கட்டுப்படியாகாதுன்னு நிறைய NRIக்கள் சொன்னாங்க. ஒன்னும் புரியலை. தெளியவைக்க வேண்டியது உங்க பொறுப்பு.

    ReplyDelete
    Replies
    1. இந்தியால எல்லாமே காஸ்ட்லிபா..வேறென்ன :)

      Delete
    2. இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்கறேன் :-)

      Delete
  3. //NRIக்களின் வாழ்க்கையை இயல்பாய் அதன் அபத்தங்களோடு பதிவு செய்ய ஆசை..//

    தொடருங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. முடிந்தவரை..:) ஊக்கத்திற்கு நன்றி :)

      Delete
  4. தொடருங்கள். எங்க ஊரு கதை வேற. எதைத்தொட்டாலும் இந்தியாவிலிருப்பதை விட 5 மடங்கு விலை அதிகம், பாட்டா ஷூஸைத்தவிர. (ஆனாலும் ஊருக்குப் போனால், ஏதாவது வாங்கிப் போகவேண்டியிருக்கும், வெளிநாட்டில் இருக்கிறோமே!). அதனால் எங்களுக்கு இந்தியாவில் எல்லாமே cheapஆக கிடைப்பதாகவே தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. எந்த ஊருங்க நீங்க :) யூரோப்ல எங்கியாவதா? ஆனா பாட்டான்னு சொல்றீங்க ஹ்ம்ம்..

      Delete
    2. கிழக்கு ஆப்பிரிக்கா,கென்யா,நைரோபி.

      Delete
  5. நாட்டு நடப்பை நன்கு எழுதியிருக்கிறீர்கள். தொடருங்கள்

    ReplyDelete
  6. செம.. நீங்க குறிப்பிட்ட உரையாடல்கள், வட அமெரிக்க NRIகளுக்கு மட்டுமல்ல எல்லா NRIகளுக்கும் பொருந்துது ;-)) தொடருங்கள்!!

    ReplyDelete
  7. Very Very true Natraj. Cant get more realistic and I cant agree more. Neenga sutti kaatuna vishayam yaavayum unmai. Idhu bayandhey rendu varsham poilzhaika vandha desathil ootiyachu... Aana kadaisiya sonniga parrunga 'Namma ooru mathiri varadhunu', andha oru vishayam thaan mayakayira maari namma manasa kokki pottu ilukkuthu.

    ReplyDelete
    Replies
    1. ரொம்பச்சரி கார்த்திகேயன்..வருகைக்கு நன்றி :)

      Delete
    2. I was awaiting your next blog after reading Dubbing films part-2. But I was a bit afraid that you may come up with part -3 and dilute the effect of that topic. Goodness.. you didnt.
      Now the expectation meter of Part-3 has only gone up.

      Delete
    3. U spoke my mind..Didn't want to overkill that topic :)

      Delete
  8. சம்பாதிக்கறாங்க, சொஃபஸ்டிகேட்டட் லைஃப்.. அதையெல்லாம் மீறி மனசில ஒரு ஏக்கம்.
    எப்பயும் போல கலக்கலா இருக்கு :)

    @dhivyadn

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திவ்யா..:)

      Delete
  9. ஹிஹி. எல்லாமே அங்கே இருந்தப்போ சொன்னதுதான்.

    கடைசி வரி மட்டும் இங்கே வந்தப்புறம் சொல்றது.

    ஜெய்ஹிந்த். :-))

    @ChPaiyan

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கென்ன..கங்கை கரைத்தோட்டம்னு என்சாய் பண்றீங்க..இண்டியா நல்லாத்தான் இருக்கும் :))

      Delete
  10. அருமையான பதிவு. பொருளாதாரம் ஏற்ற இறக்கத்தோடு இருந்தாலும், இந்தியாவில் பொருட்கள் எல்லாம் வெளிநாட்டு விலையில் தான் விற்கப்படுகிறது. என்.ஆர்.ஐ.யின் அபத்தங்களை பற்றியும் விரைவில் எழுதுங்க.

    ReplyDelete
    Replies
    1. எக்சாக்ட்லி..பிராண்டட் ஐட்டங்கள் ஏன் இவ்வளவு காஸ்ட்லியா இருக்கனும்னு தெரியல..

      Delete
  11. அமெரிக்காவில் எந்த ஒரு இந்திய வம்சாவளியினரின் வீட்டு டின்னர் பார்டியிலும் இந்த உரையாடல்களைக் கேட்கலாம்! அங்கே எப்படி வீடுகள் ஸ்டீரியோடிபிகலோ அதே மாதிரி எண்ணங்களும் உரையாடல்களும்! :-))

    amas32

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்..இந்த பதிவே அப்படி ஒரு உரையாடல்லருந்து எடுத்த விஷயம் தான் மேடம் :)

      Delete
  12. நன்று... என் ஆர் ஐ-க்களின் மனநிலையை சரியாக / சுருக்கமாக நச் என்று பதிவு செய்திருக்கிறீர்கள்.. தொடருங்கள்!!

    பி.கு: கடைசி சில உரையாடல்கள் யார் சொல்கிறார்கள் யார் கேட்கிறார்கள் என்ற சிறு குழப்பத்தை உண்டுபண்ணுகிறது...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பரிசல் :) சுருங்கச்சொல்ல ரொம்ப முயற்சித்தேன் :)

      கடைசி சில உரையாடல்கள் பாயிண்டு புரியுது. எனக்கும் தோணியது. என்னன்னா 4,5 பேரு பேசுறாங்க..கதைமாந்தர் விவரிப்புகள் ‘என்றான்’ போன்ற நடையை தவிர்க்க எண்ணியதால் வந்த குழப்பம்..

      Delete
  13. பிளாக்ல இட்லிவிலாஸ்ன்னு ஒரு ரெஸ்டாரண்ட் பார்த்தேன். அள்ளிட்டுபோவுதாம் டேஸ்டு..அங்கல்லாம் போங்க சார்” - i jerked. :D


    Boston Sriram - நம்ம ஃபோன்ல புலம்புனதை உளவுத்துறை இவருக்கு சொல்லிடுச்சா இல்ல எல்லா உலகத்து ஃபோன்லயுமே இதானா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க பொற்கொடி..ஃபர்ஸ்ட் டைமா நம்ம வீட்டுப்பக்கம்..எப்படி இந்த பதிவுக்கு வந்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?

      அப்புறம், திரேதாயுகத்துல ஒரு எந்திரன் விமர்சனம் போட்டுட்டு விட்டுட்டேன். ஞாபகம் இருக்கான்னு தெரியல..அதுல நீங்க வந்து கமெண்ட் போட்டுருக்கீங்க..கிட்டத்தட்ட என் முதல் ’கமெண்ட்டர்’ நீங்க :)

      Delete
    2. அட சில பல ஜென்மமாவே வந்துக்கிட்டு தான் இருக்கேனா.. நல்ல வேளை சொன்னீங்க‌ ஆமா எங்க அந்த ப்லாக்கை காணோம்? சரி எப்படியோ யுகத்துக்கு 2 போஸ்டு போடாம அடிக்கடி எழுதுங்க..

      //எப்படி இந்த பதிவுக்கு வந்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? // ‍

      "இப்ப நான் எங்க இருக்கேன்? நான் எப்படி இங்க வந்தேன்?" யாரோட‌ ட்விட்டர் ஃபீட்லயோ ஆரம்பிச்சு எங்கியோ வந்துட்டேன். இது தினமும் நடக்கறது தானேன்னு வழி எல்லாம் கல்லு போட்டுட்டு வர்ல..

      Delete
    3. சரி வந்தது வந்துட்டீங்க..தண்டனையா இதெல்லாம் படிச்சுடுங்க ;))

      http://kushionline.blogspot.ca/2012/05/1.html

      http://kushionline.blogspot.ca/2012/06/2.html

      http://kushionline.blogspot.ca/2012/05/blog-post.html

      ட்விட்டர்ல நான் @NattAnu. நீங்க?

      Delete
    4. திருக்குறள் மாதிரி நமக்கு பேச வந்துட்டாலும்.. ஒரே ஒரு ப்லாக் பாத்துக்கறதுக்கே இங்க துப்பு இல்ல.. நீங்க வேற!

      Delete
    5. உங்க ப்ளாக் அட்ரஸ் என்ன? உங்கள நிறைய கமெண்ட்ஸ்ல பார்த்துருக்கேன். ஆனா ப்ளாக் பேரு மறந்துடுச்சு..

      Delete
    6. என்னது இது வீக் எண்டுக்கு வீக் எண்ட் பாட்லக் வர்ற மாதிரி புது போஸ்டும் வரணுமில்லை? :) என்னுடைய ப்லாக் தான் தூங்குதே, விக்கிமேனியாக் டாட் ப்லாக்ஸ்பாட் டாட் காம்.. (wiki not vicki)

      Delete
    7. ஜாரிங்க..ஆபிஸ் ஆணி மேல பழியப்போடுறேன். இந்த வீக்கெண்ட் போட்டுடறேன்..:)

      Delete
  14. Replies
    1. நன்றி கேபிள் சார்..அந்த இட்லிவிலாஸ் டயலாக்ல முதல்ல ‘கேபிள்சங்கர் பிளாக்ல’ன்னு தான் போட்டுருந்தேன்..அது உரையாடல்ல திணிக்கப்பட்டதா இருக்குமோன்னு எடுத்துட்டேன்..அப்படியே விட்டுருக்கலாமோன்னு இப்ப தோணுது..:)

      Delete
  15. திருட்டுபயJuly 4, 2012 at 1:10 PM

    சூப்பரு! இங்க வளைகுடா நாட்டுலயும் இதே நிலமை தான்! மஸ்கட்டும் விதிவிலக்கல்ல!

    ReplyDelete
    Replies
    1. யெஸ் மஸ்கட்மேன் :)

      Delete
  16. யதுபாலாJuly 4, 2012 at 1:19 PM

    நல்ல ரசனை...!தொடர வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி யதுபாலா..முதல் வருகையோ :)

      Delete
  17. Ariumaienga... Flow super, enkitta pecina Marilee irukuu..

    ReplyDelete
  18. Ariumaienga... Flow super, enkitta pecina Marilee irukuu..

    ReplyDelete
  19. Replies
    1. மந்தகாச சிரிப்பய்யா உமது ;)

      Delete
  20. வாவ், அட்டகாசம் நட்டு..
    “வரும்போது க்ராண்ட் ஸ்வீட்ஸ்ல ரெண்டு ஊறுகாய் பாட்டில் வாங்கி வரமுடியுமா”ன்னு முடிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
    Replies
    1. ஆமால்ல..அப்படி கூட முடிச்சிருக்கலாம் :)

      Delete
  21. திருமாறன்.திJuly 6, 2012 at 4:15 AM

    ஆஹா...அருமை. வெளிநாட்டில் வாழ்பவர்கள் சந்தித்தால் அவர்கள் அரட்டை இப்படி ஆரம்பித்து இப்படி தான் முடியும். சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு..ஆமா, இது ஒரு ஸ்டாண்டர்ட் அரட்டை :)

      Delete
  22. அண்ணா கலக்கறீங்க. நானும் எண்பதுகளில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் தெலுங்கு டப்பிங் படங்கள் பற்றிய உங்கள் பதிவுகளை நன்றாக ரசிக்க முடிந்தது. உங்கள் நகைச்சுவை உணர்வு அபாரம்.

    தேசி பற்றி நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் எண்பது, தொன்னூறுகளில் அமெரிக்கா, ஐரோப்பா வில் வேலை செய்த இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்பொழுது அங்கே பணிப் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவை நன்றாக இருந்தது. இந்தியாவிலும் விலைவாசி குறைவாக இருந்தது. கடைசி பத்தாண்டுகளில் இது தலைகீழாக மாறியுள்ளது. அப்பொழுது அங்கிருந்தவர்கள் பலர் சென்னையில் மனை, வீடு வாங்கி நன்றாக குடியமர்ந்து விட்டனர்.

    ஆனால் நம்மூர் அசௌகரியங்களை தினப்படி அனுபவிப்பவர்களுக்கு இந்தியா கசக்கவே செய்கிறது. இந்தியாவில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதே தவிர வாழ்க்கைத் தரம் மோசமடைந்து கொண்டுதான் செல்கிறது. இக்கரைக்கு அக்கரை பச்சையோ. :)

    எண்பது, தொன்னூறுகளின் முற்பகுதி அரசியல் மிகவும் பரபரப்பாக இருக்கும். உங்களுக்கு அரசியல் ஆர்வம் இருந்தால் உங்கள் நடையில் அதைப் பற்றியும் எழுதுங்கள்.

    ReplyDelete
  23. அண்ணா கலக்கறீங்க. நானும் எண்பதுகளில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் தெலுங்கு டப்பிங் படங்கள் பற்றிய உங்கள் பதிவுகளை நன்றாக ரசிக்க முடிந்தது. உங்கள் நகைச்சுவை உணர்வு அபாரம்.

    தேசி பற்றி நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் எண்பது, தொன்னூறுகளில் அமெரிக்கா, ஐரோப்பா வில் வேலை செய்த இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்பொழுது அங்கே பணிப் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவை நன்றாக இருந்தது. இந்தியாவிலும் விலைவாசி குறைவாக இருந்தது. கடைசி பத்தாண்டுகளில் இது தலைகீழாக மாறியுள்ளது. அப்பொழுது அங்கிருந்தவர்கள் பலர் சென்னையில் மனை, வீடு வாங்கி நன்றாக குடியமர்ந்து விட்டனர்.

    ஆனால் நம்மூர் அசௌகரியங்களை தினப்படி அனுபவிப்பவர்களுக்கு இந்தியா கசக்கவே செய்கிறது. இந்தியாவில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதே தவிர வாழ்க்கைத் தரம் மோசமடைந்து கொண்டுதான் செல்கிறது. இக்கரைக்கு அக்கரை பச்சையோ. :)

    எண்பது, தொன்னூறுகளின் முற்பகுதி அரசியல் மிகவும் பரபரப்பாக இருக்கும். உங்களுக்கு அரசியல் ஆர்வம் இருந்தால் உங்கள் நடையில் அதைப் பற்றியும் எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜெகன்..நீங்க சொல்றது கரெக்ட். அப்ப ஜிசி க்யூவும் பெருசா இல்ல..முடிஞ்சவரைக்கும் மத்த டாபிக்கள்ல எழுதறேன்..

      Delete
  24. ஐந்து நாள் பெரிய்ய்ய்ய்ய்ய வாரஇறுதிக்கு ஊரை விட்டு ஓடிவிட்டேன் அதனால் தான் கடைசியில் பின்னூட்டும் இடுகிறேன் . . கொசு , பப்ளிக் டிசென்சி, இன்னும் பல வரும் எல்லா நட்பு வட்டார பேச்சின் இடையில் கடைசியில் மச்சி நீ எப்போ இந்தியா டிக்கெட் புக் பண்ணி இருக்கே? என்றே முடியும் . அநேகமா இந்த பதிவை விட கோர்வை பதிவு பண்ணி இருக்க முடியாது . வாழ்த்துக்கள் , கடைசியில் தாமதமாய் வந்ததற்கு மன்னிச்சு

    ReplyDelete
    Replies
    1. லேட் என்ன வினோ? பெட்டர் லேட் தன் நெவர் ;)) ஆமா, கோர்வையாக ஒன்னுலருந்து இன்னொன்னுக்கு கான்வர்சேஷன் போகனும்னு சற்று முயற்சி செய்தேன்..:)

      Delete
  25. Very True.. I think the topic will continue waitin for that..

    ReplyDelete
  26. நானும் அங்கேயே இருந்திருக்கலாம் என்றே 13 வருடங்கள் கழித்து தோன்றுது. இருந்தாலும், சொந்தங்கள் சாபங்களாக இல்லாவிட்டால் நன்மை தான்.

    கிப்டுகள் வாங்கி வருவதை ஒரு கதையாக போடலாம்... ஒரு ட்ரிப் முடிந்து திரும்பியப்பிறகு, அடுத்த ற்றிப்பிற்கு, டாலர் ஷாப்பில் டீல்ஸ் பார்க்கும் நமது தேசி கதை இந்த காலத்தில் எப்படி என்று எழுதுங்கள்.

    இதையும் படித்து பாருங்க! ஆறரை வருடங்கள் முன் எழுதியது.

    http://vijayashankar.blogspot.in/2006/03/you-are-desi-if.html

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா படிக்கிறேன். டாலர் ஷாப் சரியான எக்சாம்பிள்..:)

      Delete

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)